<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
தமிழ் திரைப்படங்களுக்கு ஐந்து தேசிய விருதுகள்
இன்று அறிவிக்கப்பட்டுள்ள 63ஆம் தேசிய விருதுகள் பட்டியலில் தமிழ் திரைப்படங்களுக்கு ஐந்து தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.
சிறந்த தமிழ் படம் ; விசாரணை. சிறந்த பின்னணி இசை : தாரை தப்பட்டை படத்திற்காக இளையராஜாவுக்கு. சிறந்த இணை நடிகர் விருது : சமுத்திரக்கனி - விசாரணை படத்திற்காக. சிறந்த படத் தொகுப்பாளர் விருது: கிஷோர்- விசாரணை படத்திற்காக. சிறப்பு சான்றிதழ்: இறுதி சுற்று படத்தில் நடித்த குத்து சண்டை வீராங்கனை ரித்திகா சிங் அவர்களுக்கு. இசைஞானி இதற்கு முன்பே பலமுறை வாங்கி இருந்தாலும் , பின்னணி இசைக்காக முதல் முறையாக விருது பெறுகிறார் என்று நினைக்கிறேன். கிஷோர் அவர்கள் மரணம் அடைந்தபின் அவருக்கு விருது வழங்கப்படுகிறது. இறந்தும் பெருமை பெறுகிறார். சமுத்திரக்கனி இயக்கத்துக்காக விரைவில் விருது பெறுவார். இது அவருக்கு ஒரு அட்வான்ஸ் ஆக இருக்கட்டும். விருது பெற்று தமிழ் திரை உலகுக்கு பெருமை சேர்த்துள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள். கூடவே கிஷோர் அவர்களுக்கு அஞ்சலிகளும் . பின் குறிப்பு: முதலில் நான்கு விருதுகள் என நினைத்து தலைப்பு இட்டு பதிவிட்டு விட்டேன்..பின்பு எடிட் செய்தபொழுது , செய்தி எடிட் ஆனாலும் தலைப்பு எடிட் ஆகவில்லை. அதை எப்படி பண்ணுவது என்று எனக்கு தெரியவில்லை என்று நினைக்கிறேன். நிர்வாகிகள் யாராவது தலைப்பில் நான்கு என்று உள்ளதை ஐந்து என மாற்றும்படி அன்போடு வேண்டுகிறேன். Last edited by tamilplus; 29-03-16 at 01:05 AM. Reason: correction |
#2
|
||||
|
||||
பின்னணி இசை என்றால் அது இளையராஜா மட்டுமே. பின்னணி இசைக்காக அவருக்கு அதுவும் அவர் இசை அமைத்த 1000 மாவது படத்திற்கு கிடைத்தது இன்னுமொரு சிறப்பு.
__________________
அன்புடன் நந்தபாலன் ________________ "காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தைப் போலே இன்பம் எது சொல்லு காண்பவை யாவுமே சொர்க்கமே தான்" |
#3
|
|||
|
|||
Quote:
தலைப்பில் நான்கு என்று இருந்ததை என் வேண்டுகோளுக்கு இணங்கி ஐந்து என்று திருத்திய நிர்வாக குழுவினருக்கு நன்றி. |
#4
|
|||
|
|||
நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துகளும் அய்யா அம்மணி அனைத்து அன்பர்களுக்கும் !
|
#5
|
|||
|
|||
உலக தரத்தை எட்ட முயற்சித்த விசாரணைகள் படத்தை அங்கீகாரம் செய்ததற்கு நன்றி!
ராஜா சாருக்கு பரிசி கொடுத்ததால் இந்த பரிசுக்கே மரியாதை....! வாழ்த்துக்கள் ! மௌனி |
#6
|
|||
|
|||
சமீபகாலமாக தமிழ் திரைப்படங்களின் தரம் உன்னதமாக மாறிக்கொண்டு வருகிறது. இளைஞர்களின் சிந்தனைப் போக்கு வித்தியாசமானதாகவும், கலை நயமிக்கதாகவும், கமர்ஷியல் கிளர்ச்சிகளின்றி வெளி வருவது ஆனந்தத்தைத் தருகிறது.
இனியும் பல்வேறு படைப்புகள் தமிழ் சினிமா உலகத்தை தரம் உயர்த்தும் என்ற நம்பிக்கை வேர் விட்டிருக்கிறது. |
#7
|
|||
|
|||
Quote:
இனிவரும் ஆண்டுகளிலாவது இன்னும் நிறைய விருதுகள் கிடைக்கட்டும், |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|