<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #21  
Old 18-11-13, 10:55 PM
eros eros is offline
Banned User
 
Quote:
Originally Posted by MACHAN View Post
அவர்களில் சிலர், சாதனையாளர் சச்சினை வாழ்த்தா விட்டாலும்கூட தூற்றாமலாவது சென்றிருக்கலாம் என்பதுதான் மச்சானின் தாழ்மையான கருத்தாகும்.
மன்னிக்கவும். நான் சச்சினை எந்த விதத்திலும் தூற்றவில்லை. பணம் சம்பாதிப்பது ஒன்றும் தவறான செயல் இல்லை. அவர் திறமைக்கும் உழைப்புக்கும் அவருக்கு கிடைத்த பணமும் புகழும் முற்றிலும் நியாயமானதே. அவர் பணம், எப்படி வேண்டுமானாலும் செலவழிக்கட்டும். தர்ம காரியம் அவர் செய்யவேண்டும் என்பது என்பது என் எதிர்பார்ப்பு அல்ல. இன்று இருக்கும் இந்தியர்களில் அவர்தான் சிறந்தவர் என்பதும், பாரத ரத்னா தருவதும் டூ மச் என்பதே என் கருத்து.
Reply With Quote
  #22  
Old 19-11-13, 04:10 AM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
அன்பார்ந்த நிர்வாகிகளே,

இந்த வாழ்த்து திரிக்கு சம்பந்தம் இல்லையென்றாலும் சச்சின் டெண்டுல்கரை குறித்து சில நண்பர்கள் எழுப்பி இருக்கும் வினாக்களுக்கு, ஐயப்பாடுகளுக்கு சில விளக்கங்களைத் தர மச்சான் தங்களிடம் அனுமதி கோருகிறேன். நன்றி.
Quote:
Originally Posted by தமிழா View Post
நானும் வாழ்த்துகிறேன் !
இவரிடம் பணம் நிறைய இருக்கும், இல்லாத ஏழைக்கு கொடுத்து உதவலாம் அல்லது மீடியாவுக்கு தெரியாமல் இவர் உதவி செய்து இருக்கலாம் !
மீடியாவுக்கு தெரியாமல் இல்லை தோழரே.... அவர்களுக்கு நன்றாகவே தெரியும்...!! எந்த வீரருடன் எந்த நடிகை ஹோட்டலுக்கு செல்கிறார் என்பது போன்ற செய்தி வெளியிடுவதில்தான் விளம்பரம் தேட முயற்சிப்பார்களே அல்லாமல் இது மாதிரியான செய்திகளால் அவர்களுக்கு ஆதாயம் இல்லிங்களே..?
Quote:
Originally Posted by தமிழா View Post
கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் "இம்ரான்கான்" தன்னுடைய 20 வருட கிரிக்கெட் வாழ்க்கை பணத்தில் புற்று நோய் மருத்துவமனை கட்டினார் என்று நேற்று ஒரு பத்திரிக்கையில் படித்தேன், ஆனால் இந்த சச்சின் ( சாதனையை தவிர ) என்ன செய்தார் ? என்று கேள்வி கேட்டு இருந்தார்கள். எனக்கு பதில் தெரியவில்லை.........
தங்களுக்கு பதில் தெரியவில்லையா அல்லது அந்த கேள்வியை கேட்ட பத்திரிகைக்காரனுக்கு விவரம் போதவில்லையா என்று எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் மச்சான் சில விஷயங்களை இங்கே விளக்குகிறேன்.

முதலில், "இம்ரான் கான்" தன்னுடைய பணத்தில் மட்டுமே புற்று நோய் மருத்துவமனையை கட்டினார் என்பது மிகவும் தவறான தகவல்..! "Shaukat Khanum" என்பவர் இம்ரான்கான் அவர்களின் தாயார் ஆவார். புற்று நோயால் அவதிப்பட்டு இறந்தும் போனார். தன் தாய் பட்ட வேதனையை வேறு யாரும் படக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் "Shaukat Khanum Memorial Cancer Hospital and Research Centre" என்று தன் தாயின் பெயரிலேயே புற்று நோய் மருத்துவமனையை 1994 ம் வருடம் துவக்கினார் இம்ரான்கான்..! இதற்காக 1991 ம் வருடம் "Shaukat Khanum Memorial Trust" என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றையும் உருவாக்கினார். இந்திய கிரிக்கெட் வீரர்களில் சச்சின் டெண்டுல்கர், கபில்தேவ், அசாருதீன் உட்பட அமெரிக்கா, ஐரோப்பா, வளைகுடா நாடுகள் போன்ற உலக நாடுகளில் வாழும் பல நல்ல உள்ளங்கள் இந்த மருத்துவமனைக்காக நன்கொடைகளை அள்ளி அள்ளி வழங்கினார்கள். 25 மில்லியன் டாலர்களுக்கும் மேலாக நன்கொடைகள் பெறப்பட்டு அந்த மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டது. (கொடுத்ததை பொதுவாக மச்சான் வெளியே சொல்வதில்லை. இருந்தாலும் சந்தர்ப்பம் வந்ததால் தற்போது தெரிவிக்கிறேன். 1993 ம் வருடம் மச்சானும் இந்த அறக்கட்டளைக்கு மஸ்கட்டிலிருந்து என்னால் இயன்ற சிறு தொகை ஒன்றினை அன்பளிப்பாக அனுப்பி வைத்தேன்)

ஆக, இம்ரான்கானின் முழு முயற்சியினாலேயே இந்த மருத்துவமனை கட்டப்பட்டது என்பதில் யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஆனால் முழுக்க முழுக்க அவரின் சொந்தப் பணத்தை வைத்தே கட்டப்பட்டது என்பதுதான் தவறான தகவலாகும்.
கழிந்த 2012 செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு நாடுகளில் வாழும் மக்களில் சிலர் மட்டுமே இந்த மருத்துவமனைக்காக கிட்டத்தட்ட 10 கோடி பாகிஸ்தான் ரூபாயை அன்பளிப்பாக வழங்கினார்கள் என்பது கூடுதலான தகவல்...!
Quote:
Originally Posted by eros View Post
Quote:
Originally Posted by MACHAN View Post
அவர்களில் சிலர், சாதனையாளர் சச்சினை வாழ்த்தா விட்டாலும்கூட தூற்றாமலாவது சென்றிருக்கலாம் என்பதுதான் மச்சானின் தாழ்மையான கருத்தாகும்.
மன்னிக்கவும். நான் சச்சினை எந்த விதத்திலும் தூற்றவில்லை.
சச்சினை எந்த விதத்திலும் தூற்றவில்லை என்று தற்போது மறுப்பு தெரிவிக்கும் தாங்கள், முந்தைய பதிவில் தூற்றியதை கீழே கோட் செய்து காட்டியிருக்கிறேன் பாருங்கள்.
Quote:
Originally Posted by eros View Post
கிரிக்கெட் திறமையாக விளையாடினார். கோடிக்கணக்கில் சம்பாதித்தார். இவரால் இந்தியாவில் ஒரு ஏழைக்காவது உணவு கிடைத்ததா? மதர் தெரேசாவும் இவரும் சரிசமமா? எம்,எஸ்.சுப்புலக்ஷ்மியும் கோடிக்கணக்கில் சம்பாதித்தார். அதில் பெரும்பகுதியை சமூகசேவை செய்யும் சங்க்கக்களுக்கு வழங்கினார். டெண்டுல்கார் அப்படி ஏதும் செய்தாத எனக்கு தெரியவில்லை.
"இவரால் ஒரு ஏழைக்காவது உணவு கிடைத்ததா..?" "அப்படி செய்ததாக எனக்கு தெரியவில்லை..." என்று தங்களுக்கு தெரியாத விஷயத்தை இங்கே தெரிவித்து அவர் மீது ஏன் சேற்றை வாரி இறைக்க வேண்டும் ப்ரதர்..? என்னுடைய ஆதங்கமும் இதுதான்..!

ஒரு ஏழைக்கு அல்ல... இரண்டு ஏழைக்கு அல்ல... 200 ஏழைக் குழந்தைகளுக்கு உணவு, உடை, படிப்புச்செலவு அனைத்தையும் இவரே மொத்தமாக ஏற்று, அதற்காக ஒவ்வொரு வருடமும் நன்கொடைகளை "Apnalaya" என்ற அமைப்புக்கு வழங்கி வருவது தங்களுக்கு தெரியுமா...? தெரிய வழியேயில்லை சகோதரா...!

இவ்வளவு ஏன்..? கழிந்த 5 மாதங்களுக்கு முன்பு உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தார்களே..? லட்சக்கணக்கானோர் வீடு வாசல்களை இழந்து தவித்தார்களே.? அதற்கும் சச்சின் உட்பட இந்திய கிரிக்கெட் வீரர்களில் பலர் நன்கொடைகளை வழங்கி இருக்கிறார்கள் என்பதாவது தெரியுமா..?

01. நடிகர் ஷாருக்கான் ( இவரும் ஒருவகையில் கிரிக்கெட்டோடு சம்பந்தப்பட்டவர்தானே. ) - 10 கோடி

02. கேப்டன் மஹேந்திரசிங் தோனி - 75 லட்சம்

03. சச்சின் டெண்டுல்கர் - 51 லட்சம்

04. யுவராஜ்சிங் - 23 லட்சம்

05. விராட் கொஹ்லி - 18 லட்சம்

06. ஹர்பஜன் சிங் - 10 லட்சம்

இவையெல்லாம் பத்திரிகைகளில் வந்த செய்திதான் ப்ரதர்...! தாங்கள் அந்த செய்தியை படிக்கவில்லை என்றால் இதற்கு யார் காரணம்..? தங்களுக்கு நேரம் போகவில்லை என்பதற்காக உருட்ட சச்சினின் தலைதான் கிடைச்சுதுங்களா..? சேற்றை வாரி தூற்று முன் கொஞ்சமாவது யோசிக்கணும்ல நண்பா..!!
Quote:
Originally Posted by eros View Post
பணம் சம்பாதிப்பது ஒன்றும் தவறான செயல் இல்லை. அவர் திறமைக்கும் உழைப்புக்கும் அவருக்கு கிடைத்த பணமும் புகழும் முற்றிலும் நியாயமானதே. அவர் பணம், எப்படி வேண்டுமானாலும் செலவழிக்கட்டும். தர்ம காரியம் அவர் செய்யவேண்டும் என்பது என்பது என் எதிர்பார்ப்பு அல்ல.
முதலில் பதிந்த கருத்துக்கு மாறாக அப்படியே இப்போது அந்தர் பல்ட்டி அடித்து விட்டீர்களே..? வெரிகுட்...!! மேலும் பல நன்கொடைகளை சச்சின் வழங்கி இருக்கிறார் என்பதையும் ஆணித்தரமாக தங்களுக்கு எடுத்துரைக்கிறேன்.
Quote:
Originally Posted by eros View Post
இன்று இருக்கும் இந்தியர்களில் அவர்தான் சிறந்தவர் என்பதும், பாரத ரத்னா தருவதும் டூ மச் என்பதே என் கருத்து.
Quote:
Originally Posted by kamakodangi68 View Post
பாரத் ரத்னா விருது என்பது டூ மச்.. அதற்கான தகுதி பெற்றவர்கள் நிறைய இருக்கும்போது வெறும் ஊடகங்களால் உயர்த்திவிடப்பட்ட நபர் பெறுவது தவறான முன்னுதாரணமாகும் என்பது எனது கருத்து..
எது டூ மச்...??? சும்மா வீட்டில் தூங்கிக்கிட்டிருந்த ஒருத்தனை தட்டி எழுப்பியா பாரத் ரத்னா கொடுத்தாங்க ப்ரதர்ஸ்..? இந்திய ஜனத்தொகையில் முக்கால் பாகத்துக்கும் மேற்பட்டவர்கள் இவருக்கு பாரத் ரத்னா பட்டம் கொடுத்ததை வரவேற்றிருக்கிறார்கள் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். அதுமட்டுமல்லாமல் இந்த 'பாரத் ரத்னா' பட்டம் என்பது சச்சினுக்கு கொடுத்ததோடு நின்று விடப்போகிறதா என்ன..? இனிமேலும் யார் தகுதி பெறுகிறார்களோ அவர்களுக்கும் கொடுக்கத்தானே போகிறார்கள்...? யார் யாருக்கு எப்போது பட்டங்கள் கொடுக்க வேண்டும் என்பதையெல்லாம் தீர்மானிக்கத்தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அரசாங்கம் இருக்குதுங்கோவ்..!

மச்சானின் இந்த விளக்கங்கள் யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக இல்லிங்ணா..! அப்படியே புண்படுத்தி இருந்தால் தயவாய் பொருத்தருள்க..!!
Quote:
Originally Posted by muthirkanni View Post
பி.கு: - தம் தோளில் தாங்கி களத்திலேயே சச்சினைக் கவுரவித்தவர் டோனி
இந்த படத்தை தோழி முதிர்கன்னி அவர்களுக்கு டெடிக்கேட் செய்கிறேன்.

சாதனையாளர் சச்சினுக்கு வாழ்த்துகள் தெரிவித்த / தெரிவிக்கவிருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் மச்சானின் நன்றிகள்.
Reply With Quote
  #23  
Old 19-11-13, 04:32 AM
kamakodangi68 kamakodangi68 is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by MACHAN View Post
யார் யாருக்கு எப்போது பட்டங்கள் கொடுக்க வேண்டும் என்பதையெல்லாம் தீர்மானிக்கத்தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அரசாங்கம் இருக்குதுங்கோவ்..!
எனவே இந்த விருதில் அரசியல் இருப்பதை ஒத்துக் கொள்கிறீர்கள் என நினைக்கிறேன். ஏனென்றால் சர்தார் வல்லபாய் படேலுக்கு எத்தனை வருடம் கழித்து இவ்விருது இந்திய அரசாங்க ஆட்சியாளர்களால் வழங்கப்பட்டது தெரியுமா..?

ஒக்கே மச்சி.. இது ஒன்னும் விவாத மேடை அல்ல.. நாம் கருத்துமோதல் பண்ணுவதற்கு.. எனவே நாம் எப்போதும்போல் ஒருவருக்கொருவர் அன்புடன் அதே நக்கல் நையாண்டியுடன் இருப்போம்..
Reply With Quote
  #24  
Old 19-11-13, 09:30 AM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by MACHAN View Post
அந்த நண்பர்களுக்கு அடிப்படையிலேயே கிரிக்கெட் விளையாட்டின் மீது நல்ல அபிப்பிராயம் இல்லை என்பதும் அவர்களின் பதிவிலிருந்து தெள்ளத்தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது.
அரசியல் ஒரு சாக்கடை. கிரிக்கெட்டும் அது போல்தான். நான் தற்போதும் தீவிர கிரிக்கெட் ரசிகந்தான். ஆனால் கிரிக்கெட்டால் பல இழப்புக்களையும் நான் சந்தித்துள்ளேன். 11 முட்டாள்கள் சேர்ந்து விளையாடும் விளையாட்டை பல்லாயிரம் முட்டாள்கள் சேர்ந்து ரசிக்கின்றார்கள் என்ற பெர்னாட்ஷாவின் உண்மை கூற்றை என் மூலமே நான் புரிந்து கொண்டேன்.

சச்சின் ஒரு மகத்தான் கிரிக்கெட் வீரர். அதனை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அரசியல் சாக்கடையை போல் கிரிக்கெட்டும் ஒரு சாக்க்கடை என்பதை நண்பர்கள் அறிந்து தெளிந்து கொண்டதால்தான் நண்பர்கள் பலரும் தங்கள் ஆதங்கத்தை இங்கே கொட்டுகின்றார்கள் என நினைக்கிறேன். இந்திய கிரிக்கெட் சங்க தலைவராக இருக்கும் நம்ம ஊர் சீனி மாமா, சிமென்ட் விலையை கூட்டி மக்களின் அடி வயிற்றில் அடிப்பவர். இவரது மருமகன் மேல் பெட்டிங் புகார் உள்ளது. சீனி மாமாவுக்கு கிரிக்கெட் தலைவராக என்ன தகுதி இருக்கிறது? சரத் பவார் மராத்திய மாநிலத்தின் அரசியலின் கிங்கான இவருக்கு கிரிக்கெட் சங்க வாரிய தலைவராக இருப்பதற்கு என்ன தகுதி இருக்கிறது? கொல்கத்தா டால்மியா இவருக்கும் கிரிக்கெட் சங்க தலைவராக இருப்பதற்கு என்ன தகுதி இருக்கிறது. பின்புலமும் பண பலமும் ஆள் பிடிக்க காசும் இருந்தால் யாரும் தலைவராகலாம் என்பதுதான் கிரிக்கெட்டின் தலைவிதி. கிரிக்கெட் சங்க தலைவராக இருப்பவர் கிரிக்கெட் விளையாடிவராக* இருக்க வேண்டும். கிரிக்கெட் நுணுக்கங்களை கற்று தெளிந்தவராக இருக்க வேண்டும். ஆனால் பெரும் செல்வம் உள்ளவரும் தொழிலதிபரும்தான் கிரிக்கெட் சங்க தலைவராக இருக்கின்றார்கள்.
Quote:
Originally Posted by MACHAN View Post
யார் யாருக்கு எப்போது பட்டங்கள் கொடுக்க வேண்டும் என்பதையெல்லாம் தீர்மானிக்கத்தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அரசாங்கம் இருக்குதுங்கோவ்..!
நம்ம ஊர் சாக்கடை அரசியலாளர்களை பற்றித்தான் நமக்கு தெரியும்மே!!!! யார் யாருக்கு எப்போது பட்டங்கள் கொடுப்பார்கள் என தெரிந்த விஷயம்தானே!!!!
Quote:
Originally Posted by kamakodangi68 View Post
ஒக்கே மச்சி.. இது ஒன்னும் விவாத மேடை அல்ல.. நாம் கருத்துமோதல் பண்ணுவதற்கு.. எனவே நாம் எப்போதும்போல் ஒருவருக்கொருவர் அன்புடன் அதே நக்கல் நையாண்டியுடன் இருப்போம்..
நண்பர் காம கோடங்கியார் சரியாக சொன்னார்.

சச்சின் ஒரு கால் நூற்றாண்டு சகாப்தம்.1998ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சச்சின் சார்ஜாவில் விளையாடிய ஆட்டத்தை இன்றும் மறக்க முடியாது. 1990 களில் இந்திய கிரிக்கெட் முடங்கி போன நேரத்தில் சச்சின் என்ற இளம் புயல் வந்ததால்தான் இந்தியாவில் மீண்டும் கிரிக்கெட் ஜூரம் பற்றி கொண்டது என்பதை மறுக்க முடியாது.
Reply With Quote
  #25  
Old 19-11-13, 10:25 AM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by MACHAN View Post
ஆக, இம்ரான்கானின் முழு முயற்சியினாலேயே இந்த மருத்துவமனை கட்டப்பட்டது என்பதில் யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
ஆக மொத்ததில் தன் நாட்டுக்காக இதையாவது இம்ரான்கான் செய்தாரே ! ஒத்து கொண்டதற்கு நன்றி நண்பரே ! சச்சின் என்ன செய்தார் என்று தான் கேட்டு இருந்தேன்.

நானும் கிரிகெட் ரசிகன் தான் ! சச்சினின் 200வது மேட்ச்சை நானும் பார்த்து ரசித்தேன். பி.சி.சி.ஐ என்பது தனியாருக்கு சொந்தமான சொத்து. சச்சின் தனியாருக்காக விளையாடினார் ஆனால் பாரதரத்னா ரொம்ப அதிகம் !

எத்தனை மாணவர்கள் தன்னுடைய முழு ஆண்டு தேர்வை கூட படிக்காமல் கிரிக்கெட் பார்த்து இருப்பார்கள் என்று தெரியுமா ? அந்த மாணவர்களின் 10 மற்றும் +2 மாணவர்கள் அடங்கும் அந்த தேர்வுகள் அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்வு ! அந்த கிரிக்கெட் ஆட்டங்களின் பாதிக்கு மேல் சச்சின் ஆடி இருக்கிறார்.
Reply With Quote
  #26  
Old 19-11-13, 12:08 PM
ramraj_2k12 ramraj_2k12 is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by MACHAN View Post
சச்சின் டெண்டுல்கர் நடத்திய உலக சாதனைகளை பட்டியலிட்டு அடுக்கிக்கொண்டே செல்லலாம்.
இந்தியாவின் நச்சத்திர கிரிகட் ஆட்டக்காரர், என்ற அந்தஸ்தில் ஒரு விளையாட்டு வீரருக்கு இந்த பாரத் ரெத்னா விருது வழங்கி இருபதற்கு நாமும் நடுவண் அரசுக்கு மக்கள் சார்பாக நன்றி சொல்லி, விருது பெற்ற டெண்டுல்கருக்கு வாழ்த்து சொல்லி மகிழ்வோம்.
வாழ்த்துகள்.

_____________
ramraj
Reply With Quote
  #27  
Old 19-11-13, 03:08 PM
hnysam79's Avatar
hnysam79 hnysam79 is offline
User inactive for long time
 
சச்சின் இந்த விருதுக்கு பொருத்தமானவர் தான் .......... ஆனால் இந்த தருணத்தில் அவசர அவசரமாக விதிமுறைகளை திருத்தி இந்த விருதை அவருக்கு அளித்ததில் தான் அரசியல் தெரிகிறது. அவருக்கு முன்னாள் சாதனை செய்தவர்கள் பட்டியல் அதிகம் அவர்களுக்கு எல்லாம் விருதை வழங்கி விட்டு பிறகு அளித்து இருக்கலாம் நம்ம லிட்டில் மாஸ்ட்டர்க்கு ...........
Reply With Quote
  #28  
Old 19-11-13, 04:25 PM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
உலகிலுள்ள மற்ற நாட்டு ரசிகர்கள் கூட சச்சினுக்கு இணையதளங்கள் மூலமாகவும், நேரிலும், தொலைபேசியிலுமாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்தியரான நம்மில் சிலரே அவர் மீது சேற்றை வாரி இறைப்பது வேதனையான விஷயம்தான்..!

"அவருக்கு பாரத் ரத்னா பட்டம் கொடுக்கப்போவது சரியா தவறா..? அதில் அரசியல் கலந்திருக்கிறதா இல்லையா..? அரசியலே ஒரு சாக்கடை... அதே போல் கிரிக்கெட்டும் சாக்கடைதானே..? பல்லாயிரக்கணக்கான முட்டாள்கள் பார்க்கும் அந்த விளையாட்டை நாமும் பார்க்கலாமா கூடாதா..? கிரிக்கெட் சங்கத்தின் தலைவருக்கு தகுதியானவர் யார்..? அந்த வீரர் நாட்டுக்காக என்ன செய்தார்.. இந்த வீரர் நமக்காக என்ன செய்தார்..? பத்தாம் வகுப்பு மற்றும் +2 தேர்வுக்கு படிக்காமல் மாணவர்கள் கிரிக்கெட்டை பார்ப்பதற்கு சச்சின் மட்டுமேதான் காரணம்...!" என்பது போன்ற கேள்விகளுக்கும் கருத்துகளுக்கும் பதில் சொல்ல எனக்கு நேரமும் இல்லை.... இந்த திரியில் அதற்கு வழியும் இல்லை நண்பர்களே..! ஏனென்றால் தலைவாசலில் இருக்கும் வாழ்த்துகள் பகுதியில் இத்திரியை பதித்திருப்பதால் நமது இஷ்டம் போல் வெவ்வேறு கருத்துகள் பதிப்பதற்கு நிர்வாகிகள் அனுமதியும் தரமாட்டார்கள். அதனால் நிர்வாக விதிகளை மதித்து சரியான பகுதியில் வேறு ஒரு திரி தொடங்கியோ அல்லது ஏற்கனவே இருக்கும் கிரிக்கெட் விவாத திரியிலோ இது போன்ற விஷயங்களை தாராளமாக விவாதித்துக் கொள்ளுங்கள்.

சச்சினுக்கு வாழ்த்து சொல்ல மட்டுமே இந்த திரியை பயன்படுத்துமாறு நண்பர்களை மச்சான் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
Reply With Quote
  #30  
Old 19-11-13, 05:42 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Quote:
Originally Posted by MACHAN View Post
தலைவாசலில் இருக்கும் வாழ்த்துகள் பகுதியில் இத்திரியை பதித்திருப்பதால் நமது இஷ்டம் போல் வெவ்வேறு கருத்துகள் பதிப்பதற்கு நிர்வாகிகள் அனுமதியும் தரமாட்டார்கள். அதனால் நிர்வாக விதிகளை மதித்து சரியான பகுதியில் வேறு ஒரு திரி தொடங்கியோ அல்லது ஏற்கனவே இருக்கும் கிரிக்கெட் விவாத திரியிலோ இது போன்ற விஷயங்களை தாராளமாக விவாதித்துக் கொள்ளுங்கள்.
இங்கு வேண்டாத விவாதங்களை தவிர்ப்போமே!
Quote:
Originally Posted by kamakodangi68 View Post
ஒக்கே மச்சி.. இது ஒன்னும் விவாத மேடை அல்ல.. நாம் கருத்துமோதல் பண்ணுவதற்கு.. எனவே நாம் எப்போதும்போல் ஒருவருக்கொருவர் அன்புடன் அதே நக்கல் நையாண்டியுடன் இருப்போம்..
நண்பர் அழகாக சொல்லிவிட்டார். இனிமேல் இங்கு விவாதிக்க ஒன்றுமில்லை என்பது என் கருத்து.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 11:32 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,