View Single Post
  #10  
Old 24-05-14, 04:48 PM
jaya6 jaya6 is offline
RIP நம் புதிய விண்ணுலக பிரதிநிதி
 
என் அருமை நண்பர் அன்பிற்குரிய என் மதிப்புக்குரிய திரு:"மச்சான்" அவர்கள் (தமிழகத்தில் "அம்மா" போல.....மத்தியில் "பிஜேபி" போல..... அதிக எண்ணிக்கையில் வாக்குகளைப் பெற்று) வெற்றி பெற்றதற்கு என் மனப் பூர்வமான வாழ்த்துக்கள்....

(ஆமாம்...நீங்கள் "வெற்றி அரசராக" அறிவிக்கப்பட்ட செய்தியை உங்க பெயரை மூச்சுக்கு முந்நூறு தரம் "மச்சான்" ..."மச்சான்"....என்று சொல்லிக் கொண்டு இருக்கும் "தமிழக திமிசுக்கட்டை" "நமீதாவுக்கு" தெரிவித்தீர்களோ ......? )

உங்களின் பரிசுப் பணத்தை நம் மதிப்புக் குரிய நண்பர்கள் மரியாதைக்குரிய சக ஆசிரிய ஜாம்பவான்களான திருவாளர்கள் "knantham".... "snehan".....ஆகியோருக்கு தாங்கள் பகிர்ந்த அளித்ததும் அல்லாமல் அவர்களின் எழுத்து நடையையும் பாராட்டி எழுதிய தங்களின் பெருந்தன்மைக்கு முன் லோக வாசகர்கள் ஆன நாங்கள் பெருமிதத்தோடு தலை வணங்கி வணக்கம் செலுத்துகிறோம்...



எல்லாவற்றிக்கும் மேலாக ஒன்று நான் சொல்லியே ஆகவேண்டும்....அது.....
"இது போல ஒரு போட்டி நடக்கப் போகிறது...கதைகளைப் படித்து பின்னூட்டம் இட்டு தங்களுக்கு பிடித்ததிற்கு மறக்காமல் வாக்களித்து போட்டியில் பங்குகொள்ளுங்கள் என்று எங்களின் கவனத்தை ஈர்த்து இதில் பங்கு கொள்ளும்படி செய்தீர்கள் .....பாருங்கள்....அதற்கு நான் நன்றி சொல்லியே ஆக வேண்டும்....

Last edited by jaya6; 24-05-14 at 05:03 PM.
Reply With Quote