<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#31
|
||||
|
||||
நலம்தானே? என்ன விசேஷங்கள்?
இப்படித்தான் ஆரம்பிக்கும் பச்சியின் தனிமடல்கள் ஒவ்வொன்றும். எந்த புள்ளியில் எனத் தெரியாமல் ஆரம்பித்த அழகான நட்பு தொடர்கிறது. பண்பாளர் பச்சி என அழகான பொருத்தமான அடைமொழி இட்டு திரி தொடங்கிய ரசிக்கு நன்றிகள். பச்சியின் ஈடுபாட்டிற்கு தளத்தில் 3000 பதிப்புகள் என்பது குறைவுதான். புதியவர்களுக்கு “மே ஐ ஹெல்ப் யூ?” என வலிய உதவுபவர். என்னை மாதிரி, விஜி மாதிரி சோம்பேறிகளின் அறிமுகத்திரியை கதைச்சுட்டிகளால் அவ்வப்போது உரிமையுடன் அப்டேட் செய்பவர். இன்னும் பல ஆயிரங்களை தொட வாழ்த்துக்கள் பச்சி. |
#32
|
|||
|
|||
நண்பர்கள் ஒவ்வொருவரின் வாழ்த்திலும் பொதிந்திருந்த அன்பை பார்த்து தான் முதலில் உச்சி குளிர்கிறேன். மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது நண்பர்களே... நெஞ்சார்ந்த நன்றிகள்!
உங்கள் பதிப்புகள் மூலம் ஒன்றை மட்டும் உணர வைத்திருக்கிறீர்கள்... ஆம்... என் 'பொறுப்பை' எனக்கு உணர வைத்திருக்கிறீர்கள். அது தனி மனிதனான 'பச்சி' என்றாலும் சரி... நிர்வாக உறுப்பினராய் இருக்கும்(வரை) 'பச்சி' என்றாலும் சரி... உங்களோடு இதே அன்பை பெற்றவனாக இறுதி வரை இருக்க வேண்டும் என்பதே என் ஆசை. அதற்குரிய வகையில் நானும், என் நடத்தைகளும் நிச்சயம் இருக்கும் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது. <><><><><> நண்பர்கள் பலர் குறிப்பிட்ட 'உதவி' என்பது ஒரு நிர்வாக உறுப்பினராய் இருந்த வகையில் தான் என்னால் அதிகம் செய்ய முடிந்தது என்பதை உணர்கிறேன். அந்த வகையில் என்னை நிர்வாக உறுப்பினராய் பணியில் அமர்த்தி உங்களுக்கு உதவிட வாய்ப்பளித்திருக்கும் நம் மரியாதைக்குரிய தலைமை நிர்வாகி xxxGuy அவர்களுக்கு என் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். நான் நிர்வாக உறுப்பினராய் இணைய என்னை விரும்பி, அழைத்த நண்பர் ஹயாத் (முன்னாள் மேற்பார்வையாளர்) அவர்களை நினைவுபடுத்திக் கொண்டு... நிர்வாக உறுப்பினராய் என் பணிகளுக்கு ஒரு முன்னுதாரணமாக, வழிகாட்டியாக இருந்து வரும் அசோ அவர்களுக்கும், அவ்வப்போது ஆலோசனைகள் வழங்கி வரும் விக்டர், அனுசுயா அவர்களுக்கும், ஒத்துழைப்புகள் வழங்கி வரும் நிர்வாக உதவியாளர்களுக்கும் என் நன்றிகளை இங்கே உங்கள் முன்னிலையில் தெரிவித்து கொள்கிறேன். <><><><><> நண்பர் ஓஷோ விஜி ஒரு விஷயத்தை குறிப்பிட்டார். என்னவென்றால், 'மென்மை' என்று சொல்ல வரும்போது அவர் என்னையும், ஸ்மார்ட்மேன் அவர்களையும் குறிப்பிட்டார். அவர் தெரிந்து சொன்னாரோ.. தெரியாமல் சொன்னாரோ.. ஆனால் அதில் ஒரு விஷயம் இருக்கிறது. 'எப்போதும் மென்மைக்கு' ஸ்மார்ட்மேன் அவர்களை குறிப்பிடுவது ஓகே. ஆனால், 'பச்சி' தனிமனிதனாக அப்படி இருப்பதாய் சொன்னாலும் கூட நிர்வாக உறுப்பினராக (கண்டிப்பு, நடவடிக்கை என்ற பெயரில்) அவன் சில நேரங்களில் அந்த மென்மையை தவற விட்டிருக்கிறான் என்பதே உண்மை. ஆனால், அந்த நேரங்களில் ஒரு நிர்வாக உறுப்பினராகவும் எப்படி மென்மையாக நடந்து கொள்ளலாம்... கண்டிப்பு, நடவடிக்கைகளை கூட எப்படி கையாளலாம் என்பதை சொல்லி கொடுத்தவர் ஸ்மார்ட்மேன் அவர்கள் தான். அதன் காரணமாகவோ என்னவோ இன்று அவரோடு இணைத்து நானும் பேசப்படுகிறேன். நன்றி ஸ்மார்ட் மேன் அண்ணா! <><><><><> இந்த திரியில் கருத்துக்கள் பதிந்து என்னை வாழ்த்திய அன்பு நண்பர்களுக்கும், இனி வாழ்த்த இருக்கும் நண்பர்களுக்கும் மீண்டும் நன்றிகள்! நன்றிகள்!! நன்றிகள்!!! இறுதியாக, நான் 3000 பதிப்பை பதிந்தவுடன் வாழ்த்து திரி ஆரம்பிக்க வேண்டும் என்று இரவு பல மணி நேரங்கள் விழித்திருந்து திரி தொடங்கிய நண்பர் ரசிக்கும், அவருக்கு துணையாக இருந்த நண்பர் பிண்டூவிற்கும் என் நன்றிகள். (குறுகிய கால பழக்கத்திலேயே என் மேல் இவ்வளவு அன்பா!)
__________________
Last edited by பச்சி; 03-10-10 at 01:31 AM. |
#33
|
|||
|
|||
நண்பர் பட்சி அவர்களை நானும் வாழ்த்துகிறேன்
உங்களை வாழ்த்தும் திரில் நானுன் பங்குகொண்டு மகிழ்கிறேன் |
#34
|
|||
|
|||
பச்சி - ரிமிக்ஸ் கில்லாடி. இவர் ரிமிக்ஸ் பாட்டை இப்பதான் படிச்சேன். நல்லா ரிமிக்ஸ் பண்றாரு. 3000 போஸ்ட் ஆ நான் இப்பதான் 40 போட்டிருக்கேன். அவரை ரோல் மாடலா வைச்சிக்கிட்டு என் பயணத்தை ஆரம்பிக்குறேன். ஆல் தி பெஸ்ட் பச்சி.
|
#35
|
|||
|
|||
மூவாயிரம் தொட்ட உங்களது படைப்புக்களை படிக்க ஆவல். மேலும் பல ஆயிரங்களைக் கான வாழ்த்துக்கள்.
|
#36
|
|||
|
|||
உன் அன்புக்கு அது சாத்தியமே........................
பிரதிபலன் பாராதது
எதிர்பாரா நேரத்திலும் உதவிக்கரம் நீட்டுவது சுணக்கம் இன்றி தோள்கொடுப்பது புன்னகையாய் வலம் வருவது முகம் காட்டும் அழகே அகத்திலும் உறைவது பாகுபாடு காட்டா மனம் அது இவையெல்லாம் அன்பின் அடையாளங்களாயின்........... உருவம்????????? பச்சி........... எவரும் மனமுவந்து ஏற்கும் பச்சி என் அன்பின் திரு உருவம் பச்சி.......... இன்னமும் சிகரங்களை நீ அடைவாய் உன் அன்புக்கு அது சாத்தியமே பிரியங்களுடன் முத்ரிகன்னி |
#37
|
||||
|
||||
அன்புள்ளம் கொண்ட பசீர் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். நேற்று வந்தவர் போல் இருக்கிறது. 3000 பதிப்புகளா? ஆச்சர்யம். சந்தோஷம்.
|
#38
|
|||
|
|||
கண்காணிப்பாளர் பச்சிக்கு என் இதையம் கனிந்த வாழ்த்துக்கள்
|
#39
|
|||
|
|||
தாமதமாக வாழ்த்துவதற்கு வருத்தப்படுகிறேன். அனைவரது கருத்துடனும் முற்றிலும் உடன் படுகிறேன். பச்சி ஒரு பண்பாளர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. தனிப்பட்ட முறையில் அவரது அன்பைப் பெற்றவன் என்கிற ரீதியில் இதை என்னால் உறுதி செய்ய முடியும்,. வாழ்க அவர்.....
|
#40
|
|||
|
|||
இங்கே சவுதியில்....அலுவலக வேலை உடலையும், மனதையும் நொறுக்கி வீடு திரும்பும் நாட்களில், அன்போடு செல்பேசி அழைப்பு வரும் பச்சியிடமிருந்து.
என்னைப் பற்றியும், குடும்பத்தினரைப் பற்றியும் உள்ளார்ந்த அன்புடன் அக்கறையுடன் விசாரிப்பார் தன் வசீகரக் குரலில். லோகத்தில் விறுவிறுப்பான பதிப்பு இருந்தால் அதைப் பற்றிப் பேசுவார். நான் பதிந்த புதிய கதைகளை மேற்கோளிடுவார். நெஞ்சில் மயிலறகால் வருடுவதுபோல் இருக்கும் அந்த மணித்துளிகள். புதியவர் பதிவுகளில் பிழை இருப்பின் பூவிதழ் பிரிப்பதுபோல் சுட்டிக் காட்டுவார். நாம் அப்படிச் சுட்டிக்காட்டினால், அன்றிரவே அவரிடமிருந்து தனிமடலும் அன்பளிப்பும் கண்டிப்பாக எதிர்நோக்கலாம். `நலம்தானே நண்பரே? என்ன விசேஷங்கள்?`...ஆஹா.... அவரின் இந்த ஆத்மார்த்தமான நலம் விசாரிக்கும் பாணியை என் கடிதங்களிலும் பயன்படுத்திக் கொள்கிறேன். கதைகளிலும், உல்டா பாடல்களிலும் தனக்கென ஒரு பாணியைக் கொண்டு வலம் வருபவர். இவரின் தூய தேன் தமிழுக்கு நான் அடிமை. நண்பர் பச்சி 3000 அடைந்ததற்குப் பாராட்டி, அவர் மென்மேலும் பல ஆயிரங்கள் தொட வாழ்த்துகிறேன். சரியான சமயத்தில் இத்திரியைத் தொடங்கிய நண்பர் ரசிகேம்ரனுக்கு நன்றிகள்! Last edited by KANNAN60; 06-10-10 at 10:13 PM. |
Tags |
பண்பாளர் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|