<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
ஒன்றுக்கு மேல் username: விதிமுறை மீறியர்வர்கள்
நண்பர்களே...
நமது தளத்தில் ஒன்றுக்கு மேல் கணக்கு (username) வைத்திருக்க கூடாது என்று பல முறை எச்சரித்தும், நமது விதிமுறைகளில் கூறியும், புதியவர்கள் பலர் இதை மதிக்காமல் 2 - 3 என்று பல கணக்குகள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இதற்கு காரணம், இவர்கள் எப்படி கண்டு பிடிக்கிறார்கள் என்று பார்ப்போம் என்ற அலட்சிய போக்கே காரணம். எங்களிடன் உங்கள் கணக்கை கண்டு பிடிக்க சக்தி வாய்ந்த மென்பொருள் உள்ளது. அது நீங்கள் நமது தளத்தில் நுழைந்த உடனேயே உங்கள் பெயரில் எத்தனை கணக்கு உள்ளது என்று ஒவ்வொரு நேரமும் எங்களுக்கு தகவல் கூறிவிடும். இந்த தகவல் 99.5% சரியானது, இதில் 0.5% மட்டுமே தவறான தகவல் வர வாய்ப்புள்ளது. இது நாள் வரை பல கணக்குகள் வைத்திருப்பவர்களை தனிமடல் (PM) மூலம் தான் எச்சரித்து வந்தேன், ஆனால் இனி என்னால் அவ்வாறு தகவல் அனுப்ப நேரமில்லை. அதனால், அவ்வாறு ஒன்றுக்கு மேல் கணக்கு வைத்திருப்பவர்களின் பெயர்களை இங்கே ஒவ்வொரு வாரமும் 5 முதல் 10 பெயர்களை கீழே உள்ள பதிப்பில் கொடுக்க போகிறேன். அவர்கள் ஏன் அவ்வாறு விதிமுறை மீறி கணக்குகள் துவங்கினார்கள் என்று சரியான விளக்கம் கொடுத்தால் அவர்கள் விரும்பு ஒரு கணக்கை விட்டு மற்றவை மட்டும் நீக்கப் படும். அவர்கள் விளக்கம் 15 நாட்களுக்குள் வராவிடில் அவர்கள் பெயரில் உள்ள அத்தனை கணக்குகளும் தடை செய்யப் படும். மேலே கூறியுள்ளபடி, இதில் 0.5% தவறான தகவல் வரவும் வாய்ப்புள்ளது. ஒரு வேளை எங்கள் மென்பொருள் உங்கள் பெயரை தவறாக காட்டினால், எனக்கு தனிமடல் மூலம் தெரியப் படுத்தவும். நன்றி..
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 22-01-07 at 07:00 PM. |
#2
|
||||
|
||||
22-01-2007 - முதல் லிஸ்ட் இதோ
1) xen / maggi / superman_82 - ஒருவரே மூன்று கணக்கில்... 2) nivethan / sjeyag / kumar123994 - மீண்டும் ஒருவரே மூன்று கணக்குகளில்... 3) anuraghavan / thiru12345 4) thasjay / balajiajithfan@yahoo ... 5) seelanpip / dilini ஒரு சிலர் எனக்கு தனிமடல் அனுப்பினர் அவர்கள் பெயர் ஞாபகமில்லை. மீண்டும் தனிமடலில் நினைவூட்டவும். அடுத்த லிஸ்டில், சில பழைய உறுப்பினர்களும் உள்ளனர்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 22-01-07 at 06:52 PM. |
#3
|
||||
|
||||
பொண்டாட்டிதான்....
ரெண்டு மூனுன்னா..... இங்கயும்..... டபுள் அக்கவுன்ட்டா.... சாமிகளா? |
#4
|
||||
|
||||
எங்க ஊர் கோயில்ல சுண்டல் தரும்போது தான் இரண்டு தபா மூணு தபா வாங்குவோம்..இங்கேயுமா???
|
#5
|
|||
|
|||
லவ் லெட்டர் தான் 2,3 பேருக்கு கொடுத்து பார்க்கிறது..!!எது ஒர்கவுட் ஆனாலும் ஒகே....என்று.
இங்கேயுமா..?நெட் கேம் மாதிரி யூசர் நேம் பாஸ்வேர்டு விற்பதற்காக இருக்குமோ.......? |
#6
|
|||
|
|||
ஒரு அக்கவுன்டில் நிறைய பதிப்புகள் பதியவே முடியவில்லை.
இவர்கள் ஏன் பல அக்கவுன்ட்கள் வைத்துக் கொண்டு நிர்வாகிக்கு சிரமம் தருகிறார்கள். |
#7
|
|||
|
|||
உண்மையிலே எனக்கு மற்றொன்று கிடையாது
ஐயா..நான் இரண்டா...இல்லை இல்லைவே இல்லை ..அப்படி ஒரு காரியமா...மன்னிக்கவும்..என்னை மன்னிக்கவும் ..
ஐயா ..என்னை மன்னிக்க வேண்டுக்கிறேன்..ஏன்யெனில் உண்மையிலே எனக்கு மற்றொன்று கிடையாது.. Last edited by அனு; 23-01-07 at 09:43 AM. Reason: ஐயா ..என்னை மன்னிக்க வேண்டுக்கிறே |
#8
|
|||
|
|||
எங்க ஆயா சொல்லும்
"அறுக்க தெரியாதவன் கையில் ஆறு அரிவாளாம்.... ************* தெரியாதவனுக்கு ஒம்போது பொண்டாட்டியாம்...." முன்னு ஒழுங்கா ஒன்னை வைத்து திருப்தியாக இருங்கள் நன்பர்களே... |
#9
|
|||
|
|||
அடப்பாவிங்களா! ஒண்ணை வைச்சுகிட்டு மனுஷன் என்ன பாடுபடுறான்........இதுல ரெண்டு மூணு வைச்சுகிட்டு எப்படிப்பா சமாளிக்கிறீங்க...... கணக்கைச் சொன்னேன்பா..........
தலைவாசல், அப்புறம் தமிழ்வாசல்......காமக்கதைகள்........என்று நிலை உயர்கிறது. மனசு சந்தோசமாகிறது. உற்சாகத்துடன் இன்னும் அதிகம் பதிப்போம் என்பதின் விளைவாக தகாத உறவுக்கதைகள் படிக்க அனுமதி. என்று படி உயர்வதற்க்குள் முட்டு ஸாரி கீபோர்டு தேய்ந்துட்டுப்பா...... அப்புறம் நமக்குத்தான் தகுதிதான் வந்துடுச்சே.......தலைவர் ஏன் இன்னும் நமக்கு வெண்கலவாசலை திறக்கவில்லை என்று ஆயிரம் கேள்விகளுடன் வார்னிங் பாயிண்ட் ஏதாவது இருக்கோமா என்று பார்க்க அதுவும் இல்லை என்றவுடன் சரி இன்னும் பதிப்பை அதிகமாக பதிப்போம் என்று தொடர்ந்து அடிக்கிறோம் ஸாரி டைப் அடிக்கிறோம். ஆனால் நீங்க எல்லாம் எப்படிப்பா ரெண்டு, மூன்று என வரிசையாக ஆரம்பிச்சு என்ன செய்யப் போறீங்க? ஒண்ணே ஒண்னுனாலும் அதை ஒழுங்கா அடிக்கனும் மீண்டும் ஸாரி நிறைய பதிக்கனும். ஒருவேளை உங்களுக்கு ஸால்ரா (அதாங்க ஜிங் ஜிங்ஷாங் ஜிங்) கோஸ்டி உருவாக்குறீங்களோ? எப்படியோ தலைவர் சாட்டையை சுழட்டிவிட்டார். சாட்டை யார் மீதெல்லாம் பதியப் போகிறதோ? யார் பெயரெல்லாம் இந்த பகுதியில் வெளியிடப் போகிறாரோ? வாழ்க நிர்வாகி............ |
#10
|
||||
|
||||
Quote:
நண்பர் maggi க்கு, தனிமடலில் என்னிடம் கேட்டிருந்த கேள்விகளுக்கு பதில் இங்கே (தலைவரின் பதிப்பு) வந்துள்ளது பார்த்தீர்களா? ( நண்பர்களே... ஒரு உருப்பினர் பெயர் மட்டுமே வைத்து சந்தோஷப்படுங்கள்.) Last edited by ஆதி; 23-01-07 at 01:46 PM. Reason: வாக்கியங்கள் இணைக்க |
|
|
|