<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
நினைவுக்கதைகள்/ மாதிரிக்கதைகள் எங்கே?
2011 தொடங்கியதிலிருந்தே நினைவுக்கதைகள் / மாதிரிக்கதைகள் போடுவதில்லை. ஏன் என்று யாராவது சொல்வீர்களா? இது பற்றி அந்தத் திரியிலியே நான் கேட்டிருந்தேன். பதிலில்லை.
இப்போது எழுதாத பழைய படைப்பாளிகளின் அருமையான கதைகளை நம் பார்வைக்குக் கொண்டுவந்து நமக்கு ரசிக்கக் கொடுக்கும் சிறந்த பணியை அந்தத் திரியில் நம் நிர்வாகிகள் ஆற்றிக்கொண்டிருந்தனர். ஒருவேளை அது வேறு இடத்தில் புதுப்பெயரில் பதிக்கப்படுகிறதா? |
#2
|
||||
|
||||
ட்ரிம்மர் இது சம்பந்தமாக என்னிடம் முன்னரே தனிமடலில் கேட்டு நான் பதில் தந்திருக்கிறேன், அதனையே இப்போது அறிய தருகிறேன்.
மேற்பார்வையாளருக்கு கூடுதல் பொறுப்பு என தலைமை நிர்வாகி அவர்கள், ஸ்மார்ட்மேன் அவர்களுக்கு, மாதம் ஒரு சவால் கதை நடத்தவும் ஹயாத் அவர்களுக்கு மாதம் சிறந்த கதை போட்டி நடத்தவும் எனக்கு (அசோ) நினைவுக்கதை/மாதிரிக்கதை மாதம் ஒருவர் நினைவில் நிறுத்த அனுமதி கொடுத்தார்கள். ஒவ்வொருமாதமும் செவ்வனே நடத்தப்பட்டது, நான் செய்து வந்த வேலைக்கு அதிக ரெஸ்பான்ஸ் தளத்திலே இல்லை, மற்ற நண்பர்கள் வேலைப்பளு/சொந்த அலுவல் காரணமாக நான் அந்த வேலைகளை செய்ததால் காலப்போக்கில் எனக்கு ஒதுக்கப்பட்டதை நிறுத்தி விட்டேன். பின்னர் தலைமை நிர்வாகி அவர்களே அதனை சமீபத்தில் செய்து வந்தார். இதுபற்றி உங்களிடம் முன்னரே சொல்லியிருந்தும், திரும்ப ஒரு திரி ஆரம்பித்து கேள்வி கேட்பது ஆச்சர்யமாக இருக்கிறது. இப்போதும் தனிமடலில் இதனை கேட்டிருந்திருந்திருக்கலாம். புதியவர்கள் அதிகம் தளத்திலே சேர்க்கப்படும் போது, அவர்கள் நிறைய கதைகள் படித்து மேலும் உத்வேகம் பெற இப்படி கதைகள் அறிமுகப்படுத்த தலைவாசலுக்கு நகர்த்தவும், மறைந்த படைப்பாளிகளை நினைவு கூறவும் என்று அறிமுகப்படுத்தியதே இது, தற்போது புதியவர்கள் எல்லோரும் அடுத்தடுத்த வாசல் சென்றபடியால் ரெஸ்பான்ஸ் குறைந்திருக்கிறது. இதுபற்றி நிர்வாக குழுவில் விவாதித்து ஆவன செய்வோம்.
__________________
|
Tags |
எங்கே |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|