<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
தளத்தின் நட்பின் அருமை
காமலோகம் கதை படிக்க மட்டும் இல்லை. இந்த தளம் முகமறியாதவர்களுடன் முகம் தெரியாமல் நட்பாகவும் இருக்க வைப்பதோடு தைர்யம் இருப்பவர்களுக்கு முகம் தெரிய வைக்கும் தளமாகவும் உள்ளது. எனக்கு இந்த தளம் வெகு அற்புதமான மனிதர்களை நட்பாக்கியது என்றால் அது மிகையில்லை. என்றென்றைக்கும் மரியாதைக்குரிய காஞ்சனாதாசன், கூப்பிட்ட குரலுக்கு கணனியில் ரிப்பேர் என்றால் ஓடி வந்து உதவும் நண்பர் அசோ, அன்னிய தேசத்திலிருந்தாலும் உதவி என்றதும் மறுபேச்சில்லாது செய்த ஆதி, விருந்தோம்பலில் என்னை மிஞ்ச யாராலும் முடியாது என்று நெஞ்சை நிமிர்த்தி வரும் பில்லா(இப்போது எங்கு இருக்கிறார் என்று யாராவது கண்டு பிடித்து தாருங்களேன் ), நான் சென்னையில் இந்த இடத்தில் இருக்கிறேன் என்று தொடர்பு கொண்டால் அடுத்த 15 நிமிடத்தில் நேரில் வந்து அலைத்துச் செல்லும் திரு. ராசு அவர்கள், ஒரு நிலப்பிரச்சனையில் ஒருவருடமாய் அலையாய் அலைந்து வெறுத்துப் போயிருந்த நேரத்தில் என் ஊர்க்காரர் என்பதற்காக என் அலைபேசிக்கு மதிப்பளித்து இரண்டே மாதத்தில் அந்தப் பிரச்சனையை வெற்றிகரமாய் முடித்துக் கொடுத்த நண்பர் முரட்டுக்காளை(வழக்கறிஞர்) என இன்னும் பல நண்பர்களை இந்த தளம் எனக்கு பரிசாய் தந்திருக்கிறது. வேறு எந்த தளத்திலாவது இப்படி நாம் நண்பர்களை பெற முடியுமா? நானும் இந்த தளத்தின் அங்கத்தினர் என்பதில் பெருமை கொள்கிறேன்.
__________________
அன்புடன் நந்தபாலன் ________________ "காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தைப் போலே இன்பம் எது சொல்லு காண்பவை யாவுமே சொர்க்கமே தான்" |
#2
|
|||
|
|||
நூற்றுக்கு நூறு மிகவும் உண்மையான வார்த்தைகள்தாம் இவை யாவும் அய்யா அம்மணி !
நம்முடைய நண்பர் சொல்லிவிட்டார் ஆனால் எம் போன்ற பல வாசகர்கள், இதுநாள்வரை, வாயிருந்தும் வார்த்தையின்றி சொல்லாமல் விட்டுவிட்டார்கள் என்பதும் உண்மை அய்யா அம்மணி ! எங்களுக்காக இந்த பாராட்டுகளை எடுத்துச் சொல்லிய நண்பர் திருவாளர் நந்தபாலன் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தலை வணங்கி சொல்லிக்கொள்கிறேன், மிகுந்த நன்றியறிதலுடன் அய்யா அம்மணி ! கூடவே ஓர் ஐந்து நட்ச்சத்திர மதிப்புக் குறியீடும் அய்யா அம்மணி ! |
#3
|
|||
|
|||
Quote:
காமம் மட்டுமே இத்தளமல்ல அதைத்தாண்டி பல செய்தி சொன்ன தங்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும். |
#4
|
|||
|
|||
நானும் பெருமை கொள்கிறேன்.. வாழ்க காமலோகம்.
|
#5
|
|||
|
|||
பண்பாக பழகும் நண்பர் குழு,
சுக, துக்கங்களிலும் பங்கெடுத்துக் கொள்ளும் பாங்கு. உற்சாகப்படுத்தி வழிகாட்டும் உறுப்பினர்கள், இங்கு மகளிரின் கண்ணியம் காக்கப்படுகிறது. காமத்திற்கு எத்தனையோ தளங்கள் இருந்தாலும், இங்கு கூடியிருக்கும் கூட்டம் தமிழால் கூடியது. இதுபோன்ற உறுப்பினர்களால் தளத்திற்கு பெருமை. இதுபோன்ற தளத்தில் உறுப்பினராக இருப்பது நமக்கு பெருமை. ஓய்வு நேரத்து பொழுதுபோக்காகவும்... சோம்பலின்போது புத்துணர்ச்சியாகவும்... விரக்தியின் போது ஆறுதலாகவும்... சந்தோஷத்தில் கூடுதல் உற்சாகமாகவும் இருக்கிறது நமது லோகம். எனக்கு இப்போதெல்லாம் ஒரு நாள் தளத்திற்கு வரமுடியாமல் போனாலும் உள்ளம் லோகத்தையே நினைத்து தவிக்கிறது. லோகத்தில் உலவுவது ஒரு போதை போன்று ஆகிவிட்டது. |
#6
|
|||
|
|||
அண்ணன் ராசு மட்டும் அல்ல அண்ணன் டி. ஆர்., கேப்டன் மச்சான், கேடி, gunkay எலியார் மாமன்னர் ராசராசர் இப்படி இன்னும் பல நல்ல நட்பு வட்டம் கிடைத்ததும் இந்த லோகத்தில்தான். இது காமத்தை தாண்டிய ஒரு பந்தம்.
__________________
கண்ணன் என்றும் நட்பை விரும்பும் உங்கள் நண்பன்.... |
#7
|
|||
|
|||
கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது...
|
#8
|
|||
|
|||
இந்த தளத்தினால் எனக்கு கிடைத்த நட்ப்பு வட்டம் மிக பெரியது. நான் நேரில் சந்தித்தவர்கள் நல்லவன், ராசு, td ராஜேஷ், ட்ரீமர், அநபாயன், புழு, கன்னன்60, கண்ணன் 76, சிவா 19, மச்சான், ராரா, முரட்டுக்காளை, எலி, ஓஷோவிஜி, லலித்தாதாசன், பில்லா, கண்கை, வந்தியத்தேவன், ms வாசன், நந்தபாலன், ஆண்டிசிடிசன், ஸ்திரீலோலன். அனைவரும் மிக அருமையான நண்பர்கள். அலைபேசி மூலமாக நட்ப்புபாராட்டியவர்கள் பச்சி, வென்கட்8, மரியா, குரு, ஜல்சா, ராம்ராஜ், அசோ, நானா, ஆதி போன்று பலர்.
மற்ற பல நட்ப்பு வட்டங்களுக்கு எல்லாம் மேலான நண்பர்கள் எனக்கு இந்த லோகத்தின் மூலமாக கிடைத்தது மிகவும் சந்தோசமாக உள்ளது. இன்னும் இந்த வட்டம் பெருகும். |
#9
|
|||
|
|||
எப்படி இத்தனை பேர் நேர்ல சந்திக்க முடிகிறது! லன்டன் நன்பர்கள் இருந்தா சந்திக்க ஆவல்? (அ) சென்னை வரும்போது சந்திக்க வேண்டும்
|
#10
|
||||
|
||||
நானும் தான் நண்பரே...
நம் தளத்தில் மனித நேயம் உள்ள உறுப்பினர்கள் உள்ளனர். எந்த தளத்திலும் இப்படி பட்ட உறுப்பினர்கள் அமைவது இல்லை. அன்பும், பண்பும், பாசமும் உள்ள நண்பர்கள் இருப்பது நம் லோகத்தில் மட்டுமே. நானும் மிகவும் பெருமை கொள்கிறேன்... இங்கே நானும் ஒரு உறுப்பினராக இருப்பதால்....
__________________
என்றும் அன்புடன், கா த ல ன் காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை யாமத்தும் ஆளும் தொழில் - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - காதல் என்பது சிற்றின்பம்!
காமம் என்பதோ பேரின்பம்! |
|
|
|