<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#611
|
||||
|
||||
கதை எழுதிய ஆசிரியரை பாராட்டுவதில் எந்தவித கட்டுப்பாடும் கிடையாது. அவரது பயனாளர் பெயர் என்னவோ அதை தாராளமாக குறிப்பிடலாம். தமிழ் ஆங்கிலம் என்ற பேதம் கிடையாது.
__________________
கதைகளைப் படியுங்கள்! கருத்துக்களைப் பதிவிடுங்கள்! பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்! |
#612
|
||||
|
||||
Quote:
ASTK என்ற பெயரை அப்படியே ஆங்கிலத்தில் பதிந்தும் சொல்லலாம், அல்லது ஏஎஸ்டிகே என்றும் சொல்லலாம். பொதுவாக ஒருவர் பெயரில் ஏதும் இல்லை, அந்த பெயரை பெற்றவர் செய்யும் நற்செயல்களில் தான் அந்த பெயர் பெரும் பேறு பெருகிறது, டி.எம்.எஸ், எம்.ஜி.ஆர், எம்,கே.டி என்ற பெயர்கள் பலகாலம் புகழ்பெற்றிருந்திருக்கிறது, அது போலவே ஏஎஸ்டிகே என்ற பெயரும் இங்கே. இருந்தாலும், இங்கே பயனாளர் பெயரை முறையாக நல்ல பெயரில் வைக்கசொல்வது அதற்காக தான் அநேகர் அவரவர் விருப்பத்திற்கு பெயர் வைத்து கொள்கிறார்கள் அதில் சில சுத்த ஆங்கில பெயர் அல்லது குறியீடாக உள்ளது. பின் எப்படி தளத்திலே ஒருத்தரை ஒருத்தர் குறிப்பிட்டு சொல்வார்கள். நைஸ்கைஇண்டியா(ஆங்கிலத்தில்) என்ற பெயருள்ள கதாசிரியரை நைஸ்கை என்று தான் அழைக்கிறார்கள். ஒல்வாத்தியார் (ஆங்கிலத்தில்) உள்ளவரை இங்கே வாத்தியார் என்றோ, வாத்தி என்றும் ஒல்வாத்தி என்றும் அழைக்கிறார்கள். இங்கே பெயர் ஒரு சுட்டுப்பெயரே அன்றி ஒரிஜினல் அல்ல. ஒரே பெயரில் இருவர் இருந்தால் (ஒருவர் தமிழிலும், இன்னொருத்தர் ஆங்கிலத்திலும்) தான் சிரமம். ஆனால் ஒரு கதையை ஒருவர் தானே எழுதியிருக்க முடியும். அதே போல எஸெம்டிஹபிப்(ஆங்கிலத்தில்) என்று ஒருவர் நிர்வாக உறுப்பினராக இருந்தார் அதற்கு முன் கதாசிரியராக இருந்தார் அவரை ஹபிப் என்றே அழைப்பார்கள். ஒருவர் பெயரை எப்படி வேண்டுமானலும் அழைக்கலாம் அது அவர்களுக்கு கெளரவம் தருவதாக இருக்க வேண்டும். அவர்களை கிண்டல் செய்வதாக இருக்க கூடாது, முடிந்தவரை தமிழில் சொல்ல முடியுமா என்று பார்க்க வேண்டும் இல்லாவிட்டால் ஆங்கிலத்தில் பதிந்தும் செல்லலாம். இந்த வருடம் இன்று தான் கணக்கு துவங்கியது, இதுவரை கணக்கு துவங்கியவர்களில் ராட்சசன் ராட்சசி என (ஆங்கிலத்தில்) பெயர்கள் வைத்தும் இருந்தனர், ஆனால் இம்மாதிரி நபர்கள் நீண்ட காலம் நிலைத்திருக்க பெயர் வைப்பதில்லை, அந்த இரண்டு பெயரும் ஒருவரே வைத்து இரட்டை கணக்கு துவங்கியதால் கணக்கை இழந்தார்.. கடைசியாக ஒருவர் விக்நேஸ்தமிழ்டோட்டல்(ஆங்கிலத்தில்) பெயர் வைத்துள்ளார், இவர்களை எல்லாம் மற்றவர் எப்படி எளிதில் அழைப்பார்கள் என்று தெரியவில்லை. பார்ப்போம் எப்படி அழைக்கிறார்கள் அல்லது அவர்கள் அறிமுகப்படுத்திகொள்கிறார்கள் என்று.
__________________
Last edited by asho; 14-01-24 at 05:46 PM. |
#613
|
|||
|
|||
கதையில் ஒரு சில குறிப்பிட்ட வரிகளை மட்டும் குறிப்பிட்டு பின்னூட்டம் இடுவது எப்படி?
|
#614
|
||||
|
||||
அதற்கு கோட் பட்டனை அழுத்தி தேவையான வரிகளை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றை டெலீட் செய்து விடலாம்.
__________________
கதைகளைப் படியுங்கள்! கருத்துக்களைப் பதிவிடுங்கள்! பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்! |
#615
|
|||
|
|||
அப்படியானால், கதையெனப்படுவது இங்கே பத்தியாக பதிகப்படும் போது, வெவ்வேறு வரிகளை குறிப்பிட்டு கருத்து சொல்ல தனித்தனியாகத்தான் பின்னூட்டங்கள் இடவேண்டுமா?
|
#616
|
||||
|
||||
Quote:
நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு முன்னரே பதில் இங்கே பதிக்கப்பட்டு இருக்கலாம். காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > மற்ற உதவிகள். > Multi Quote எப்படி செய்வது? http://kamalogam.com/new/showthread.php?t=33103
__________________
Last edited by asho; 14-01-24 at 10:10 PM. |
#617
|
||||
|
||||
நான் சரியாக விதிமுறைகளையும் மூத்த உறுப்பினர்களின் வழிகாட்டலும் பின்பற்ற தவறி விட்டேன் என்பது உண்மைதான் மறுக்கவில்லை. புதியதாக சேர்ந்துள்ளதால் இத்தளத்தில் எங்கு பதிப்புகளை பதிக்க வேண்டும் பதிக்க கூடாது என்ற புரிதல் இல்லாமல் தவறுகளை செய்து விட்டேன். ஆர்வ மிகுதியால் செய்த தவறுகளை மன்னிக்க வேண்டுகிறேன். எனது தவறுகளை மன்னித்து மறுபரிசீலனை செய்து அடுத்த வாசலுக்கு அனுமதி தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
|
#618
|
||||
|
||||
Quote:
இந்த திரியில் வாசல் அனுமதி கேட்க வேண்டும் என்று யார் சொன்னது? இதற்கு முன் ஒரு திரி, அனுமதி எங்கே கேட்பது என்று ஆரம்பித்து சந்தேகம் கேட்டதற்கு, அந்த திரியிலே மூத்த உறுப்பினர் ஒருவர் தெளிவாக பதில் தந்தார், பின்னர் நான் அந்த திரியில் பின்னர் சந்தேகம் இங்கே(அந்த மாதிரி தனி திரி ஆரம்பித்து) கேட்க கூடாது, இந்த திரியில் (புதியவர்களே:- உங்கள் கேள்விகளை இந்த திரியில் கேளுங்கள்) தான் கேட்க வேண்டும் என்றால், திரும்ப இங்கே அனுமதி கேட்டிருக்கீறீர்களே, இந்த திரி முழுதும் படித்திருந்தால் தெரிந்திருக்கும் உரிய இடத்தில் அனுமதி கேட்காமல் இங்கே கேட்டவர்களுக்கு என்ன கிடைத்தது என்று?. ஒன்றுமே தெரியாமல் அல்லது புரிந்து கொள்ள இயலாத அப்பாவி போல நடப்பது நல்லதில்லை. உங்களுடன் சேர்ந்தவர்களில் அநேகர் உரிய இடத்தில் பதிந்து அனுமதி கேட்டு அடுத்தடுத்து செல்லும் போது உங்களுக்கு மட்டும் எப்படி தெரியாமல் போகிறது?. அந்த அனுமதி கேட்கும் திரிகள் எல்லாவற்றையும் பார்த்துள்ளீர்கள் என்று உங்கள் ப்ரவுசிங் ஹிஸ்டரியில் தெரிகிறது. பின் அங்கே முதல் பதிவை முழுதும் படித்து விட்டு ஒரு பதிப்பு பதிந்து வைப்பதில் என்ன பிரச்சினை?. உங்கள் விசயத்தில் நிர்வாக குழுவில் கலந்தாலோசித்து ஒரு முடிவு எடுக்கப்படக்கூடும். பின்னர் பதிந்தது. முன்னரே முறையாக சுட்டிக்காட்டியும் திரும்ப, தவறான இடத்தில் அனுமதி கேட்டுப்பதிந்ததற்கு 25 எச்சரிக்கை புள்ளிகள் தரப்பட்டது, அதனால் ஒரு வாரம் தளம் உள்நுழைய தடை பெறுகிறார்.
__________________
Last edited by asho; 19-03-24 at 05:02 PM. |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|