<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
நிர்வாகக் கதாநாயகன் என்று ஒரு திரியில் சமீபத்தில் பார்த்ததாக ஞாபகம்.
நான் அது தலைமை நிர்வாகி என்று நினைத்துக் கொண்டிருந்தேன்....!!! ஒரு திரியில் அடுத்து அடுத்து இரண்டு பதிப்புக்கள் பதிப்பது விதிமுறை மீறல் என்றும் சமீபத்தில் யாரோ கூறியிருந்தார்கள்.. விதிமுறைகளில் அவ்வாறு எனக்குத் தெரிந்து இல்லை.. தெளிவுபடுத்தினால் சிறப்பாக இருக்கும்.!!! |
#12
|
||||
|
||||
காமராசன் தளத்தின் செல்லக்குழந்தை என்று நினைத்து பதிந்து வருகின்றார். செல்லாக்கிழவன் என்பதை விரைவில் உணரட்டும்.
இது ஒரு பதிவாக நான் பதிந்தேன் என்று வைத்துக்கொள்ளுங்கள், நான் சொன்னதால் காமலோகத்தின் செல்லாக்கிழவனாக காமராசன் ஆகி விடுவரா?. அவரவர் மனதிற்கு தோன்றியதை பதிவதை வேதவாக்காக எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள் என்று தெரியவில்லை, மறுப்பு தெரிவிப்பதென்றால் தனியாக நேரம் எடுத்து அந்த வேலை மட்டும் செய்து கொண்டிருக்க வேண்டும். நீங்கள் சொல்லும் திரிகள் சுட்டிகளை கொடுத்து கேள்வி கேளுங்கள், பதில் தரப்பார்க்கிறேன். அடுத்தடுத்து மற்றவர் பதிக்கும் முன் தானே ஒரு திரியில் பதிந்து வருவது, தனது கருத்துக்களின் எண்ணிக்கை அளவை கூட்டும் தந்திரம் என்பதற்காகவும், யாருமே கண்டுகொள்ளாத தனது கருத்துக்களை மேலே எழுப்பி மற்றவர்கள் கவனத்தை கவருவதற்கு சிலர் செய்யும் சேட்டை என்பதாலும் அம்மாதிரி செய்யக்கூடாது என்று சொல்லப்படுகிறது. இங்கே கருத்துக்களின் எண்ணிக்கையில் அனுமதிகள் வழங்கப்படுவதால் இம்மாதிரி சித்துவேலை காட்டும் ஆரம்ப கால உறுப்பினர்கள் கண்டிக்க/தண்டிக்கப்பட்டனர். இம்மாதிரி ஒருவரே அடுத்தடுத்து பதிந்து அதனை சிற்சில வேளைகளில் நிர்வாகம் அனுமதித்ததும் உண்டு, அதற்கான சுட்டிகளை தேடிப்பதிக்க நேரமில்லை, உங்களுக்கு நேரமிருந்தால் அதெல்லாம் செய்யுங்கள்.
__________________
|
#13
|
||||
|
||||
Quote:
நிர்வாக உருப்பினர்கள் மற்றும் பலரும் தனிமனிதத்தாக்குதல்களில் ஈடுபடுவதை பல இடங்களிலும் காண நேரிடுகிறது... எதையாவது லூஸ்தனமாக சொல்லிவிட்டு... அப்படி சொல்லியிருந்தேன் என்று வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னால், அதைச் சொல்லவில்லை என்று அர்த்தப் படுத்தலா?? ஆனால் அசட்டுத்தனம் என்ற ஒரு குணாதிசயம் கொண்ட பாத்திரம் ஒரு கதையில் வந்தால் அது தன்னைத்தான் குறிக்கிறது என்று சொந்தம் கொண்டாடிப் புலம்புவதையும் பார்த்திருக்கிறோம்... உல்டா பகுதியில் சில சந்தேகங்களை பதித்தேன்.. யாரும் இதுவரை பதில் சொல்ல வில்லை!!! Last edited by காமராஜன்; 17-12-12 at 06:42 PM. |
#14
|
||||
|
||||
மன்றத்தின் அங்கத்தினர் பட்டியல் (மெம்பர்ஸ் லிஸ்ட்) .. கடைசியாக எட்டிப் பார்த்த தேதி.. (Date of Last Visit) சிலருக்கு மட்டும் N/A என்று வருகிறதே...? என்றறிய ஆவல்..!!
|
#15
|
||||
|
||||
பரவாயில்லையே...
சில விஷயங்கள் 'கவனி'க்கப்படுகின்றன என்பது சந்தோஷமான விஷயம்.. இப்போது அந்த N/A போயே போச்சு.. என்.ஏ. ஆக இருந்தபோது திரியை வாசித்த அங்கத்தினர் பட்டியலிலும் பெயர் வராது என்பதும் குறிப்பிடத் தக்கது!!! பழைய பல நண்பர்களும் அவ்வப்போது வந்து எட்டிப் பார்த்து விட்டு 'ஸைலண்ட் மோட்'-இல் அமைதியாகப் போய் விடுகிறார்கள் என்பதையும் கவனிக்க முடிகிறது. ஆனால் "பங்கெடுப்பு" என்பதே வந்து போவதுதானே?? |
#16
|
||||
|
||||
ஆலோசனைகளை ஆக்ககரமான-பாரபட்சமற்ற-சமத்துவக் கண்ணோட்டத்துடன் அணுகினால் எந்த அமைப்புக்குமே நல்லதாகவே இருக்கும்!
|
#17
|
|||
|
|||
தளம் மிகவும் ஜனநாயக அமைப்போடும் , ஆர்வமுள்ள அனைவருடைய பங்களிப்போடும் நடைபெறுவதை இந்த திரியை வாசிப்பதில் உணர்கிறேன்.
எந்த கேள்விகளுக்கும் பொறுமையாகவும் அனைவருக்கும் புரியும்படியாகவும் விளக்கங்கள் கொடுத்து உள்ளீர்கள். நன்றிகள். தொரட்டும் இந்த சேவை. |
#18
|
||||
|
||||
நன்றி நண்பரே...!
|
#19
|
|||
|
|||
மிகவும் நல்ல தகவல்கள் பரிமாற்றங்கள் நிறைந்து திரிதான் அய்யா அம்மணி !
|
#20
|
|||
|
|||
எனது ஆலோசனை ஒன்றை பணிவோடு தெரிவிக்கிறேன்-
சிரிப்பு பதிவுகளுக்கு ஒரு தொகுப்பு திரி ஒன்று இருந்தால் நன்றாக இருக்கும் என தோன்றுகிறது. ஏன் என்றால் என் அடுத்தடுத்த இரு சிரிப்பு பதிவுகள் முன்பே பதிக்கப்பட்ட சிரிப்புகள் என்பதால் பூட்டப்படவேண்டியதாகி விட்டது. ஒவ்வொரு முறையும் ஜாக்கிரதையாக தேடுபொறிமூலம் தேடி பதித்தும் கூட இப்படி ஆகி விட்டது.நல்ல வேலையாக நிர்வாக குழுவினரின் கருணையால் எச்சரிக்கை புள்ளிகளில் இருந்து தப்பித்தாகி விட்டது. இதை தவிர்க்க இரு வழிமுறைகளை கையாளலாம்.- 1] சிரிப்புகளுக்கு மட்டும் ஒரு தொகுப்புதிரி இருந்தால் , புதியதாக சிரிப்பு பதிக்கும் முன்பாக ஒரு முறை பரிசோதித்துவிட்டு பதிவிட வசதியாக இருக்கும் - ஏன் என்றால் , இருக்கும் இரண்டாயிரத்திற்கு மேற்பட்டசிரிப்பு திரிகளை படித்து , நினைவில் நிறுத்தி , நாம் ஒரு புதிய சிரிப்பை கண்டுபிடித்தி பதிவிடுதல் நடைமுறையில் சற்று கடினமாக உள்ளது. இதே போல் தொகுப்பு திரி சந்தேகங்களுக்கு உள்ளது அல்லவா, அதைப்போல் இருந்தால் நல்லது என்று நினைக்கிறேன். என்றாலும் நடைமுறையில் இதை செய்வது கஷ்டம் , நிறைய உழைப்பு தேவைப்படும். அதனால் , இன்னொரு எளிய வழியும் தோன்றுகிறது . அது- 2]நிர்வாகிகளில் சிரிப்பு விஷயங்களில் அப்டேடட் ஆக உள்ள ஒருவரை , நிர்வாகிகள் தேர்வு செய்து , சிரிப்பு பதிவுகளின் மேற்ப்பார்வையாளர் ஆக நியமித்தால் போதும். புதிய சிரிப்புகள் பதியுமுன், அவருக்கு தனிமடலில் மொத்த சிரிப்பையோ, சுருக்கத்தையோ அனுப்பி , இந்த சிரிப்பு ஏற்கெனெவே பதிவிட்டதா என்று கேட்டு , அவர் இல்லை என்று தெரிவித்தபின் பதிவிடலாம் ;இது சற்று எளிய , நடைமுறைக்கு உகந்த வழியாக இருக்கும் என்று நினைக்கிறேன். நிர்வாகிகள் இதை அன்போடு ஆராய்ந்து , சாதக பாதகங்களை யோசித்து , முடிவெடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். தாங்கள் எடுக்கும் எந்த முடிவுக்கும் எனது ஆதரவு உண்டு என்பதையும் தெரிவித்து கொள்கிறேன், - தமிழ்பிளஸ் |
Tags |
சீருடை , ஒருங்கிணைத்தல் |
Thread Tools | |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|