<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
Newzealandல் இந்தியா பெற்ற முதல் ஒருநாள் தொடர் வெற்றி
இதுவரை Newzealand பயணம் சென்ற இந்திய அணி ஒருமுறை கூட ஒருநாள் தொடரை வென்றதில்லை. இந்த ஏக்கத்தை (அவமானத்தை) தோனியின் இளம் சிங்கங்கள் முறியடித்து சாதனை படைத்தது இருகிறார்கள். அவர்களை வாழ்த்துவோம். இன்னும் ஒரு போட்டி பாக்கி இருந்தாலும் கூட நாம் 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றுவிட்டோம்.
இந்த அணி டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற வாழ்த்துவோம்.. |
#2
|
|||
|
|||
என்ன சூப்பர்ஸ்டார் இந்த நியூஸை நாங்க தின பத்திரிகையிலேயே பார்த்துக்கலாமே ! அல்லது டிவி நியூஸ்லே கேட்டுக்கலாம் . இதற்கும் தனியா திரி துவங்கி இருக்கீங்க .
இருந்தாலும் அவவர்களை உங்கள் சார்பாக வாழ்த்தலாம் . வாழ்த்துப்பா ! |
#3
|
||||
|
||||
என்னோடைய நோக்கம் தனி திரி துவக்க வேண்டும் எனபது இல்லை நண்பரே. ஒரு மகிழ்சியான செய்தியை நம் லோகத்தில் பகிர்ந்துக்கலாம் என்று நினைத்தேன். தவறு என்றால் மன்னிக்கவும்.
|
#4
|
|||
|
|||
சூப்பர் ஸ்டார் இந்தியாவின் வெற்றியை நாம் கொன்டாடுவோம்.. 0 விக்கெட்டில் அடிச்சி தூள்கிளப்பிட்டாங்க... சபாஷ்..... எப்பவுமே இந்தியா கிரிக்கெட்டில் வென்றால் நம்ம மனசு லேசாயிடுது.... மகிழ்ச்சி பொங்குது....
நீங்க பெற்ற சந்தோசத்தை நண்பர்களோடு பகிர்ந்துக்கொள்ளும் உங்க நல்ல மனசுக்கு ஒரு சலாம்..... அன்புடன் பில்லா நண்பர்களின் சந்தோசமா நேரங்களில் இதுமாதிரி சொல்லி அதை குறைச்சிடாதீங்க... உங்களுக்கு இவர் திரி தொடங்கியதில் சங்கடம் இருந்தாலோ அல்லது இந்த திரி தேவையற்றது என நினைத்தாலோ ரிப்போர்ட் பட்டனை அழுத்தி நிர்வாகத்துக்கு சொல்லுங்க..... தப்பா நினைச்சிக்காதீங்க.... |
#5
|
|||
|
|||
போன முறை இந்தியா நியுசிலாந்தில் சுற்று பயணம் செய்த போது இந்திய அணியை நியுசிலாந்து போட்டு துவைத்து எடுத்தது
இந்த சுற்றுபயணத்தில் நிலமை தலை கீழ் இந்த பேட்ஸ்மேன்களை கட்டுபடுத்த முடியாமல் நியுசிலாந்து பவுலர்கள் திணருகிறார்கள் மேலும் 4வது போட்டியில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமை அசாருதினிடமிருந்து ஷேவாக் தட்டி சென்று விட்டார் அவர் 60 பந்துகளுக்கு 102 ஓட்டங்கள் எடுத்து இந்த சாதனையை படைத்தார் |
#6
|
|||
|
|||
நம் நாட்டு வெற்றி வீரர்களுக்கு என் கனிவான பாராட்டுகளை இத்தருணத்தில் தெரிவித்து மகிழ்கிறேன்,வெல்டன் பாய்ஸ்
|
#7
|
|||
|
|||
மென்மேலும், இன்னும் பல வெற்றிகளை அள்ளி குவிக்க நம் இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்....
__________________
சாலையில் கவனமாய் பயணம் செய்யவும். எப்போதும் நாவை அடக்கி பேசவும்,வார்த்தைகள் கொடூரமானவை. |
#8
|
|||
|
|||
நல்ல வெற்றி, பெருமிதமாக இருக்கிறது... நியூசிலாந்தில் விக்கெட் மழையாக எப்பவுமே இருக்கும், ஆனால் மட்டைக்காரர்களுக்கு சாதகமாக ஆடுகளத்தை மாற்றியது ஆட்டத்தின் போக்கே மாறிவிட்டது.
நம்மவர்கள் திறமை வாய்ந்தவர்கள் தான் என்று நிரூபித்திருக்கிறார்கள், இந்திய அணிக்கு எப்பவுமே ஒரே ஒரு பிரச்சனை தான், நிலையான நம்பகத்தன்மை ஏற்படுத்த மாட்டார்கள், பார்ப்போம் தோனியின் கையில் சாட்டை எத்தனை நாட்கள் வெற்றிப் பாதையில் செல்லும் என்று. முன்பு உலகக் கோப்பை என்று ஒரு திரி பிரபலமாக ஓடியது, கிரிகெட் சம்மத்தமான அனைத்தும் ஒரே திரியில் இணைத்துவிடுவது நல்லது... எதிர்காலத்தில் நிறைய கிரிக்கெட் வாழ்த்துத் திரிகள் உருவாவதை தடுக்கலாம். |
#9
|
|||
|
|||
நண்பர்களே, ஒரு நாள் போட்டியில் மட்டுமில்லாமல் தமது அணியினர் 5நாள் போட்டியிலும் ஒரு கலக்கு கலக்குராங்க. தங்க தலைவர் டோனியின் காட்டுல மழை.
|
#10
|
|||
|
|||
நியூஸ்லாந்தில் இன்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் , அதன் சொந்த மண்ணிலே, ஒரு நாள் மீதமிருக்கையிலே இந்திய அணி வெற்றி பெற்று, 1-0 என்ற நிலையில் முன்னிலை பெற்று.. டெஸ்ட் தொடரையும் வென்று வரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கு..
|
|
|
|