<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
முதலில் இவர் யார் என்றே எனக்கு தெரியாது. இன்று தான் அவரை பற்றி முழுசா படிச்சேன். உன்மையில் கனினி விசயத்தில் மௌவுஸ் என்ற முக்கிய டிவைசை அறிமுகபடுத்தியது இவர் என்று படிச்சதும் அது மிக பெரிய சாதனை என்று உனர்ன்தேன். இதனால் பிறகு இவர் பேருக்கு ஏத்தபடி நிறைய பேருக்கு ஜாப் கிடைக்க வழி செஞ்சுட்டாரு. இவர் ஆத்மா சாந்தி அடையட்டும்.
அற்புதமான வசனம். மிகவும் ரசிச்சேன்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#12
|
||||
|
||||
ஸ்டீவன் ஜொப்ஸ் நவீனத்துவத்தை உலகத்துக்கு அறிமுகப் படுத்திய ஒரு மனிதர். இவரின் மரணம் உலகத்தில் இருக்கும் நவீனத்துவத்தை அனுபவிக்கும் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்து விட்டது. இவருக்கு மரணம் அண்மித்து விட்டது என்று அனைவருக்கும் தெரியும், ஆனால் சீக்கிரம் வரும் என்று நினைக்கவில்லை!!!!!! அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இனி நான் அறிந்த செய்திகளை இங்கு பகிர்ந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன். *************************************************************************************************************** இயற்பெயர்: ஸ்டீவன் போல் ஜொப்ஸ் பிறப்பு: பெப்ரவரி 24 1955 சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா இறப்பு: அக்டோபர் 05 2011 (56 வயதில்), பாலோ அல்டோ, கலிபோர்னியா வாழ்விடம்: பாலோ அல்டோ, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா தேசியம்: அமெரிக்கர் தொழில்: ஆப்பிள் நிறுவனத்தில் தலைவர் சொத்து மதிப்பு: $ 8.3 பில்லியன் (2011) சமயம்: பெளத்தம் வழ்க்கைத் துணை: லோரீன் பவல் (1991 ஆரம்பித்து இன்று வரை) பிள்ளைகள்: நான்கு (4) ஸ்டீவ் ஜொப்ஸ், 1976 இல் ஆப்பிள் கம்பியூட்டர் நிறுவனத்தைத் தொடங்கியவர்களுள் ஒருவர். இவர் பிக்ஃசார் அசைபட நிறுவனத்தின் (Pixar Animation Studios) தலைமை ஆட்சியராகவும், வால்ட் டிசினி (Walt Disney) போன்ற பல நிறுவனங்களின் ஆட்சிப் பேராய இயக்குநர்களில் ஒருவராகவும் இருந்தார். ஆகத்து 24, 2011 அன்று உடல்நிலை காரணமாக தலைவர் பதவியிலிருந்து விலகினார். இவரையடுத்து டிம் குக் பொறுப்பேற்றார்.[12] 2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் 06 ஆம் திகதி அதிகாலை அவர் உயிரிழந்தார்.[13] ஸ்டீவ் ஜொப்ஸ், 1970களின் பிற்பகுதியில் இசுட்டீவ் வோசினியாக் (Steve Wozniak), மார்க் மார்குலா (Mike Markkula) ஆகியோருடன் சேர்ந்து ஆப்பிள் நிறுவனத்தை நிறுவினார். 1980களின் முற்பகுதியில் ஆப்பிள் நிறுவனத்தின் திறம்மிக்க மாக்கிண்ட்டாசு (Macintosh) கணினியை அறிமுகப்படுத்தினார். நிறுவன உள்பிணக்குகளால் 1985 இல் ஆட்சிப் பேராயத்தாருடன் மோதி, ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து வெளியேறி உயர்கல்வி நிறுவனத் தேவையை முதன்மைப்படுத்தி நெக்ஃசிட்டு (NeXT) என்னும் கணினித்தளம் நிறுவனத்தை உருவாக்கினார். ஆனால் 1996 இல் ஆப்பிள் நிறுவனம் நெக்ஃசிட்டு நிறுவனத்தை வாங்கிய பின், ஸ்டீவ் ஜொப்ஸ் தான் உடன் நின்று உருவாக்கிய ஆப்பிள் நிறுவனத்திலேயே சேர்ந்தார். அங்கு முதன்மை செயலாட்சியராக (CEO) 1997முதல் 2011 வரை நீடித்தார். நன்றி விக்கிப்பீடியா |
#13
|
|||
|
|||
இனி புதிய வார்ப்புகள் என்பது சிரமமே.. வருந்துகிறேன்
|
#14
|
|||
|
|||
எண் கணிப்பொறி உலகம் புனிதமாகக் கருதப்படும் மிகப்பெரிய அடையாளச் சின்னம் நம்மை விட்டு பிரிந்துவிட்டது!
கடவுள் கொடுமையானவர்தான்! 56 வயது நிரம்பாத ஒரு விஞ்ஞானி அவர்! அவரது கனவுகளை நினைவுகளாக ஆக்கி நம் எல்லோருக்கும் இந்த நவீன காலத்தில் புது வாழ்வு தந்தவர்! பலருடைய வாழ்க்கை முறைகளை மாற்றியவர் அவர்! கம்பியின் தொடர்பு இல்லாமல் இசையை கேட்க முடிந்தது அவரது வியத்தகு கண்டுபிடிப்பால்தான்! ஒலி , ஒளிக் கருவிகள் எல்லாமே கம்பியின் தொடர்பு இன்றி இயக்கமுடிந்தது அவரது வியத்தகு கண்டுபிடிப்புகள் மூலம்தான்! அவரது நினைவாஞ்சலியை தொகுத்துத் தந்த ஆசிரியர, அன்பர் sinna vaaththiyaar அவர்களுப்பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் ! |
#15
|
|||
|
|||
கார்களை நடுத்தர வர்க்கத்தினராலும் வாங்க முடியும் என்ற நிலையை அமெரிக்காவில் உருவாக்கியவர் ஹென்றி ஃபோர்டு என்றால் தகவல் தொழில்நுட்பத்தை ஒவ்வோர் அமெரிக்கரின் உள்ளங்கையிலும் சேர்த்த பெருமைக்கு உரியவர் என்பதால் அவருக்கு இணையாகப் பேசப்படுகிறார் ஸ்டீவ் ஜாப்ஸ்.
2005-ம் ஆண்டு வரையிலும்கூட, ஆப்பிள் நிறுவனத்தின் பங்குவிலை 50 டாலராகத்தான் இருந்தது. ஐ-பாட், ஐ-போன் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் மளமளவென உயரத் தொடங்கிய பங்கு மதிப்பு, கடந்த ஆகஸ்ட் மாதம் 364 டாலராக உயர்ந்தது என்பதுதான், இவரது தொழில்நுட்ப சாமர்த்தியத்தின் வெற்றி. ஆப்பிள் நிறுவனத்தின் "தாரக மந்திரம்' என்ன தெரியுமா? "மாத்தி யோசி' என்பதுதான். அதுதான் முழுக்க முழுக்க ஸ்டீவ் ஜாப்சுடைய வாழ்க்கைத் தத்துவம் என்றாலும் தவறில்லை. |
#16
|
||||
|
||||
இனிமேல் ஆப்பிள் நிறுவனத்தின் பாடு திண்டாட்டம் தான்..
ஒரு ஸ்டீவ் ஜாப்ஸ் சீனாவில் ஒராயிரம் 'ஸ்டீவ் ஜாப்ஸை உருவாக்கி விட்டிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.. சீனர்கள் மற்றும் கொரியர்களின் ஆதிக்கம் இனிமேல் கணினி மற்றும்..போன் உலகில்.. |
#17
|
|||
|
|||
அவரை இழந்ததால் நாம் புதிய படைப்புளையும் இழ்ந்தோம் என்பதே உண்மை
அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுவோம், |
|
|
|