<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
நீண்ட பதிப்புகளின் நகல் வைத்துக் கொள்க!
நண்பர்களே..
நாளை பெப்ரவரி 10-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நமது தளத்தின் எழுத்துருவில் சில அடிப்படை மாறுதல்கள் செய்ய முயற்சிக்க இருக்கிறோம். சென்ற முறை இந்த முயற்சியை நமது மற்றொரு தளத்தில் முயற்சிக்கும் போது அதன் தகவல்தளம் சிதைந்து 15 நாட்களின் பதிப்புகளை இழக்க நேரிட்டது. அதனால், இந்த முறை இங்கு இன்றுவரையுள்ள பேக்-அப் எடுத்துக் கொண்டு தான் இந்த முயற்சியில் இறங்குகிறோம், இருந்தாலும் நீங்கள் முன்னெச்சரிக்கையாக நீங்கள் நீண்ட பதிப்புகளோ, கதைகளோ பதிக்கும் போது அவற்றினை உங்கள் கணிணியில் தட்டச்சு செய்து சேமித்து வைத்துக் கொண்டு பிறகு இங்கே பதிக்கவும் என்று வேண்டுகிறேன். இது இந்த 5 நாட்களுக்கு மட்டுமல்ல, எப்போதுமே இப்படி செய்தாலும் நல்லது. சில வாரங்கள் அல்லது மாதங்கள் ஆன பின் அவற்றை உங்கள் கணிணியில் இருந்து அழித்து விடலாம். நன்றி..
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 09-02-08 at 05:36 PM. |
#2
|
||||
|
||||
இதுவரை பதித்த கதைகள் என்னாவது ?
லோகத்தின் வளர்ச்சிக்கு எங்கள் ஆதரவு எப்பவும் உண்டு தலவா. |
#3
|
||||
|
||||
இன்றுவரை நம் தளத்தில் பதிக்கப்பட்டவைகளை நம் நிர்வாகமே பேக்அப் எடுத்துவிட்டுதான் பின் பராமரிப்பு வேலைகளில் இறங்குகிறது என்று நம் தலைவர் சொன்னதை கவனிக்கவும். இனிமேல் பதிக்ககூடியவற்றை நகலெடுத்துக்கொண்டு பின் பதியுங்கள்.
|
#4
|
|||
|
|||
சரிங்க தலைவரே.
|
#5
|
|||
|
|||
தளத்தை மேம்படுத்த தாங்கள் எடுக்கும் முயற்சிக்கு கண்டிப்பாக ஒத்துழைப்போம் தலைவரே! முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
|
#6
|
||||
|
||||
ஆமாம் நண்பர்களே, எப்போதுமே, கதை பதிப்பவர்கள், முதலில் notepad \ word இவற்றில் செய்து தகுந்த திருத்தம் இருந்தால் செய்து பின் இங்கே பதிப்பதை பழக்கமாக வைத்து கொள்ளுங்கள். சில வாரம்/மாதம் கழித்து உங்கள் ஒரிஜினலை அழித்து கொள்ளலாம்.
அதே போல இம்மாதிரி தள வேலை நடக்கும் போது மற்ற பணிகள் சற்று தாமதப்படும். பொறுத்துக் கொள்ள வேண்டும். சிலவசதிகள் தற்காலிகமாக தடை பட்டாலும் நாம் அமைதி காக்க வேண்டுமே அன்றி அது பற்றி ஒரு திரி ஆரம்பித்து அதற்கு பதில் தர வேண்டும் என்று எதிர்பார்த்து, நிர்வாகத்திற்கு சிரமம் கொடுக்க கூடாது. எல்லாம் நமது தள நண்மைக்கே.
__________________
|
#7
|
|||
|
|||
முன்னறிவிப்பிற்கு நன்றி தலைவரே, அப்படியே செய்கிறோம்.
|
#8
|
|||
|
|||
தளத்தை மேம்படுத்த தாங்கள் எடுக்கும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
பதிவுகளை நகல் எடுத்து வைக்கும்படி தாங்கள் முன்னறிவிப்பு செய்ததற்கு நன்றி நன்றி நன்றி.
__________________
|
#9
|
|||
|
|||
புதிய முயற்சி எவ்வித சிக்கலுமின்றி முடிவுற்று காமலோகம் மேலும் ஜொலிக்க வாழ்த்துக்கள்.
இப்பணியில் இடையறா முயற்சியில் ஈடுபட்டுள்ள நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.. |
#10
|
|||
|
|||
தளத்தினை மேம்படுத்த தலைவர் எடுக்கும் அத்தனை முயற்சிக்கும் தோள் கொடுத்து நாம் அனைவரும் இருப்போம்...
தளத்தினை மேம்படுத்த ஒவ்வொரு படியாக முன்னேறும் நம் தலைவருக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகள்... |
|
|
|