<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #1  
Old 06-03-16, 10:53 PM
tamilplus tamilplus is offline
Banned for Limited Period
 
Join Date: 25 Sep 2012
Posts: 1,926
iCash Credits: 27,542
My Threads  
அஞ்சலி : கலாபவன் மணி அகால மரணம்.

மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்து, தன் வித்தியாசமான நடிப்பாலும் தனிச்சிறப்பான வசன உச்சரிப்பாலும் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட நடிகர் கலாபவன் மணி இன்று இரவு 7. 15 மணிக்கு அகால மரணம் அடைந்தார்.

அடிப்படையில் ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆகிய கலாபவன் மணி(கலாபவன் என்பது கொச்சியில் உள்ள ஒரு பிரபல கலைப்பயிற்சி பள்ளி. அங்கு பயின்றவர்கள் அதை பெருமையாக தங்கள் பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்வது மலையாள திரைஉலகில் வழக்கமாக உள்ளது- அதுதான் “கலாபவன்” மணி) ஆரம்பத்தில் சாலக்குடியில் ஓர் ஆட்டோ ஓட்டுனராக வாழ்க்கையை தொடங்கியவர். பின்பு மிமிக்ரி படித்து ஊர் ஊராக ஷோ நடத்தி , பின் திரையுலகிற்கு முன்னேறியவர். நடிகராக மட்டுமின்றி , நாட்டுப்புற பாடகராகவும் புகழ் பெற்றவர் இவர்.

1999 ஆம் ஆண்ட்டில் ”வசந்தியும் லக்ஷ்மியும் பின்னே ஞானும்” என்ற படத்தில் பார்வை இழந்தவர் வேடத்தில் சிறப்பாக நடித்து, மாநில அரசின் விருதுக்கு மிகவும் எதிர்பார்க்கப்பட்டு , இரண்டாம் இடத்தை பெற்று, நடுவர்களின் சிறப்பு விருதை மட்டும் பெற்றார். அந்த ஆண்டு தேசிய விருதுகளிலும் நடுவர்களின் சிறப்பு விருது அதே படத்துக்கு அவருக்கு கிடைத்தது.

அதிகம் மலையாள படங்களில் நடித்து இருந்தாலும், தமிழ்ப்படங்களிலும் சில சிறந்த வேடங்கள் அவருக்கு அமைந்தன. ” மறுமலர்ச்சி “ படத்தில் மம்முட்டியின் விசுவாசமான அநாதை வேலைக்காராக வந்து உயிரை விடும் வேடத்தில் மனதை தொட்டிருப்பார்.

”ஜெமினி” படத்தில் வில்லன் வேசத்தில் வந்து நடிப்போடு தன் மிமிக்ரி திறமையையும் வெளிப்படுத்தி அசரடித்து இருப்பார்.

”ஜே ஜே” படத்தில் சற்று திறமை குறைவான திருடராக வந்து ஒவ்வொரு முறையும் மாட்டிக்கொள்வார். புத்திசாலியாக தேவைக்கு மட்டுமே திருடும் மாதவனிடம் சீடராக சேர்ந்து கொண்டு, அவர் செய்யும் ஒவ்வொன்றும் பிள்ளையார் பிடிக்க பொய் குரங்காக முடியும். கடைசியில் முதல் தடவையாக அவர் சரியாக செய்யும் திருட்டுதான் படத்தையே முடித்து வைக்கும்.

”அந்நியன்” படத்தில் கோர்ட்டில் அப்பாவி வீடு ஓனராகவும், வெளியே வந்தவுடன் அடப்பாவி என்று திட்டு வாங்கும் ஓனராகவும் வந்து அடுத்த காட்சியிலேயே அன்னியனால் தண்டிக்கப்பட்டு இருந்து போவார்.

கடைசியாக ”பாபநாசம்” படத்தில் கெட்ட போலிஸ்காரராக வந்து படம் முழுதும் கமல் குடும்பத்தையும் , படம் பார்பவர்களையும் ஊசிமுனையிலேயே வைத்த காரக்டர்- கலக்கியிருப்பார்

இரு நாட்களுக்கு முன் கல்லீரல் கோளாறுகளுக்காக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மணி இன்று இரவு 7. 15க்கு மரணமடைந்தார் 45 வயதே ஆகி இருந்த மணியின் மரணம் ஒரு நல்ல எதிர்காலம் இருந்த நடிகரை இழந்து விட்டதாக பலரும் கருது தெரிவித்து உள்ளார்கள். ஆச்சரியமாக பிரதமர் நரேந்திர மோதியும் ட்வீடரில் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

அஞ்சலிகள் கலாபவன் மணி. உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்.

Last edited by Kanchanadasan; 07-03-16 at 01:13 PM.
Reply With Quote
  #2  
Old 07-03-16, 04:48 AM
MARK S MARK S is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 12 Sep 2011
Posts: 1,313
My Threads  
மிமிக்ரியுடன் கூடிய அவரது வசன உச்சரிப்பு வித்தியாசமாக இருக்கும்.
ஒரு திருத்தம்: இயற்கை மரணத்னத 'அகால' மரணம் என்று குறிப்பிட மாட்டார்கள்.
Reply With Quote
  #3  
Old 07-03-16, 08:33 AM
sinna vaaththiyaar sinna vaaththiyaar is offline
User inactive for long time
 
Join Date: 11 Dec 2005
Location: சிங்கப்பூர்
Posts: 8
My Threads  
Thumbs up

மிக சிறந்த நடிகர்...படைப்பாளி..

வேல் படத்தில் அவரது வில்லன் வேடத்தை சிறப்பாக செய்திருப்பார்...

சமீபத்தில் கல்லீரல் பிரச்சனையால் காலமான இரண்டாவது மலையாள வி.ஐ.பி. ...ஆன்மா சாந்தி அடையட்டும்
Reply With Quote
  #4  
Old 07-03-16, 09:33 AM
MANJU_4U's Avatar
MANJU_4U MANJU_4U is offline
User inactive for long time
 
Join Date: 25 Sep 2003
Posts: 3,865
My Threads  
அவர் கிராமீய பாடல்கள் மல்லு உலகில் மிக பிரசித்தம்..
ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்..
Reply With Quote
  #5  
Old 20-03-16, 11:30 PM
tamilplus tamilplus is offline
Banned for Limited Period
 
Join Date: 25 Sep 2012
Posts: 1,926
iCash Credits: 27,542
My Threads  
Quote:
Originally Posted by MARK S View Post
ஒரு திருத்தம்: இயற்கை மரணத்னத 'அகால' மரணம் என்று குறிப்பிட மாட்டார்கள்.
இயற்கை மரணமா என்று சந்தேகம் உள்ளது மார்க் அவர்களே. பிரேத பரிசோதனை எல்லாம் பண்ணி இருக்கிறார்கள். விசாரணை தொடர்கிறது.
மேலும் வயது முதிராத ஒரு மரணம் இயற்கை என்றாலும் , விபத்து என்றாலும் அதை அகால மரணம் என்றுதான் குறிப்பிடுவார்கள் என்றுதான் நான் கருதுகிறேன், மற்ற தமிழ் ஆர்வலரான உறுப்பினர்கள்- நல்லவன் போன்றோர் தான் விளக்கம் சொல்ல வேண்டும்.

அஞ்சலி செலுத்தி இருக்கின்ற சக பதிவர்களுக்கு நன்றி,
Reply With Quote
  #6  
Old 21-03-16, 02:15 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,652
iCash Credits: 376,012
My Threads  
அந்த ஒப்பற்ற நடிகருக்கு என் அஞ்சலி i அய்யா அம்மணி !
Reply With Quote
  #7  
Old 21-03-16, 04:02 AM
tjayak tjayak is offline
Bronze Member (i)
 
Join Date: 05 Dec 2005
Posts: 262
iCash Credits: 1,290
My Threads  
சிறந்த நடிகர். ஆன்மா சாந்தியடைய எல்லம் வல்ல இறைவனை ப்ரார்த்திக்கிறேன்
Reply With Quote
  #8  
Old 21-03-16, 03:04 PM
sathy555's Avatar
sathy555 sathy555 is offline
User inactive for long time
 
Join Date: 19 Nov 2002
Location: கிழக்கு கோதாவரி
Posts: 153
My Threads  
மணி அவர்களின் மரணம் கலை உலகுக்கு பேரிழப்பு ..சில தெலுங்கு படங்களிலும் கலக்கி இருக்கிறார் அன்னார் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் ..
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 09:58 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios