நண்பர்களே... நண்பிகளே...!,
செப்டம்பர் மாதம் வெளிவந்தவற்றில் முடிவடைந்த கதைகளில் சிறந்த கதையை தேர்வு செய்யும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டி இங்கே துவங்கி விட்டது. இந்த மாதம் சிலர் விடுப்பில் சென்றுள்ளதாலும், பலர் விடுப்பில் இருந்த தற்போது தான் திரும்பியுள்ளதாலும் குறைந்த கதைகளே முடிவடைந்துள்ளன. அவர்களுக்கு உங்கள் பொன்னான வாக்குகளை செலுத்தி உற்சாகப் படுத்த வேண்டுகிறேன்.
http://www.kamalogam.com/new/showthread.php?t=27837
கதைகளை படைப்பவர்கள் கதைகள்
முடிந்தது [End], தொடரும் [Cont] என்று சரியான Prefix-களை தேர்வு செய்ய தவறுகிறார்கள், நாங்கள் prefix-ஐ வைத்து தான் ஒரு கதை முடிந்து விட்டதா இல்லையா என்று முடிவு செய்கிறோம். இதனால் அவர்கள் கதைகள் போட்டியில் பங்கு பெறாமல் போகலாம். போட்டிகளை சரியான முறையில் நடத்த எங்களுக்கு அனைவருடைய ஒத்துழைப்பும் தேவை. படைப்பாளிகள் தவறான Prefix-ஐ தேர்வு செய்யும் போது வாசகர்கள் கூட எங்களுக்கு PM மூலம் சுட்டிக் காட்டலாம்.
தங்கள் கதைகளுக்கு அதிக வோட்டுகளை விரும்பும் கதாசிரியர்கள் தங்கள் அத்தனை கதைகளின் கடைசியிலோ அல்லது துவக்கத்திலோ, அல்லது தங்கள் பதிப்பில் தெரியும் கையெழுத்திலோ, வாசகர்களை ஓட்டெடுப்பில் கலந்து கொள்ள கூறி செய்திகள் வெளியிடவும், அதன் சுட்டிகள் கொடுக்கவும். இது பங்கேற்பவர்களின் எண்ணிக்கையை கூட்ட மிகவும் உதவும்.
நமது
போட்டிக் களம் பகுதியில் மேலும் போட்டிகள் நடைபெறுகின்றன, குறிப்பாக நம் மன்றத்தில் நடைபெறும் மேலும் ஒரு போட்டி
மாதம் ஒரு சவால் போட்டி, அதாவது முடிவுறா கதைகளை முடித்து வைக்கும் போட்டி. விருப்பம் உள்ளவர்கள் தவறாமல் கலந்து கொள்ளவும்.
நன்றி..