<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
ஸ்டீபன் ஹோக்கிங் காலமானார்
தலைசிறந்த அறிவியலாளர் என போற்றப்படும் உலகப் புகழ்பெற்ற இயற்பியலாளரும், வானியல் விஞ்ஞானியுமான ஸ்டீபன் ஹாக்கிங் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 76.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இவர் 1963 ம் ஆண்டு மோட்டோ நியூரோன் என்ற நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு நிகரான புத்திகூர்மை உடையவர் என போற்றப்பட்டவர் ஸ்டீபன் ஹாக்கிங். இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜில் உள்ள தனது இல்லத்தில் அவர் காலமானார். இன்று காலமான விஞ்ஞானி ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் 1942ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பகுதியில் பிறந்தவர். இவர் 21வது வயதில்(1963ம் ஆண்டு) மோடோர் நியூரான் எனும் நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டார். 1965 ம் ஆண்டு இவருக்கு ஜேன் வில்டி என்பவருடன் திருமணம் நடந்தது. ஸ்டீபன் ஹாக்கிங், இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தார். அண்டவியலும்(Cosmology), குவாண்ட்டம் ஈர்ப்பும்(Quantum gravity ) ஆகியவை இவர் ஆய்வு செய்ததில் முக்கியமானதாகும். கருந்துளையினும் ( Black holes) துணிக்கைகள் (Particles) வெளியேறுகின்றன. அதன் மூலம் காலப்போக்கில் இல்லாமல் போய் விடுகின்றன என ஹாக்கிங் தனது ஆராய்ச்சி முடிவில் ஆதாரத்துடன் காட்டினார். இவர் எழுதிய அறிவியல் நூல்களான, நேரத்தின் ஒரு சுருக்க வரலாறு (A Brief History of Time), The Universe in a Nutshell ஆகிய இரண்டும், உலகம் முழுவதும் மிகப் பிரபலமாக விற்பனையாகிச் சாதனை படைத்தன. சாதாரண மக்களும் வாசித்துப் பயனடையும் வகையில் இலகுவான மொழியில், அறிவியற் சமன்பாடுகளைத் தவிர்த்து எழுதப்பட்ட இந்நூல்கள் பலரையும் கவர்ந்தனதனது பெயருக்கு அவர் காப்புரிமை பெற்றிருந்தார். (நன்றி: தினமலர்,தமிழ் விகிபிடியா) |
#2
|
|||
|
|||
மிகவும் வருத்தமான செய்தி தான்...அவரின் புத்தககங்கள் என்னை மட்டுமல்ல..பலரில் அறிவியல் சிந்தனையை தூண்டியது...
மேற்கே உதித்த இன்னொரு "சுஜாதா"... ஆழ்ந்த வருத்தங்கள்... |
#3
|
|||
|
|||
மிகவும் வருந்தத்தக்க செய்தி... நாம் ஒரு சிறந்த அறிவியல் அறிஞ்சரை இழந்து விட்டோம். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி பிரார்த்தனை செய்கிறேன்.
|
#4
|
|||
|
|||
அவருடைய காலத்தின் சுருக்கமான வரலாறு என்ற புத்தகம் படித்துள்ளேன். ரொம்ப நல்ல புத்தகம்.
அவருடைய ஆத்மா சாந்தி அடைவதாக. |
#5
|
||||
|
||||
எனக்கு தெரிந்த மிக சில விஞ்ஞானிகளில் ஒருவர். அவரது ஒரு புத்தகத்தை படித்து பல நாட்களுக்கு அதைப்பற்றியே சிந்தித்திருந்தேன். முப்பது வயதிற்கு முன்னரே இறந்துவிடுவார் என பலர் கூற எழுபத்தி ஆறு வயது வரை வாழ்ந்தது மட்டும் இல்லாமல் உலகில் தலை சிறந்த அறிவாளிகளில் ஒருவராகவும் திகழ்ந்தார்.
|
#6
|
|||
|
|||
உலகின் மிகச் சிறந்த வானவியல் விஞ்ஞானி.
வீல் சேரிலேயே வாழ்ந்து நேரத்தின் வலிமையை விவரித்த விஞ்ஞானி இன்று நம்மிடையே இல்லை எனும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். - ராஜ் - |
#7
|
|||
|
|||
அந்தப் பெரிய விஞ்ஞானி அவர்களின் இந்த மறைவு ஈடு செய்யவொண்ணாத இழப்புதான் ! அவரின் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் !
|
#8
|
|||
|
|||
அவருடைய 'காலத்தின் குறுகிய வரலாறு' படித்திருக்கிறேன். மிகவும் சிந்தனையைத் தூண்டும் படைப்பு. வாழ்க்கை அவருக்கு இயலாமையைக் கொடுத்தது. அதையும் தனது தன்முயற்சியால் வென்றார்.
|
#9
|
||||
|
||||
ஸ்டீபன் ஹேக்கிங்க்ஸ் எழுதிய புத்தகங்கள் எதையும் நான் படித்ததில்லை அவர் கண்டுபிடிப்புகள் பற்றி புரிந்து கொள்ளும் ஆற்றல் எனக்கில்லை என்றாலும் பேச முடியாமல் நடக்க முடியாமல் சைகை கூட செய்ய முடியாத அவரை பற்றி பத்திரிக்கைகளில் செய்திகள் பலமுறை வந்த போது மிகவும் ஆச்சர்ய படுவேன். மிக பெரிய சாதனையாளராக அவர் என் மனதில் இருக்கிறார். அவர் மறைவு துக்கம் அடைந்தேன். அவர் ஆன்மா சாந்தி அடைய கடவுளை பிராத்திக்கிறேன்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#10
|
|||
|
|||
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
|
|
|
|