<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
கிரிக்கெட் வீரர் பட்டௌடி மரணம்
மிகவும் வருந்தத் தக்க செய்தி
அவர் அந்தக் காலத்து ஹீரோ... அன்னாரின் ஆன்மா சாந்தி அடையப் ப்ரார்த்திக்கிறோம். |
#2
|
|||
|
|||
கிரிக்கெட் விளையாட்டில் கொடிக்கட்டிய அந்த கால ஜாம்பவான்களில் பட்டொடியும் ஒருவர். பழம் நடிகை சர்மீளா தாகூரை மணந்தவர், ஹைதராபாத்தை சேர்ந்தவரென்று நினைக்கிரேன். அவரது மறைவுக்கு நண்பர் காமராஜனுடன் இணைந்து எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றேன்
|
#3
|
||||
|
||||
ஆமாம் நான் சிறுவனாக இருந்த காலத்தில் கேள்விபட்டிருக்கிறேன் அவரை.
அப்பொழுது மிகவும் பாப்புலர் கிரிக்கெட்டர்... பட்டோடி கிர்மானி சந்திரசேகர் இன்னும் நிறைய பேர் பெயர்கள் நியாபகத்திற்கு வரவில்லை. ஓர் பழம்பெரும் வீரரை இழந்ததற்கு என் இறங்களை தெரிவுத்துக்கொள்கிறேன்... |
#4
|
|||
|
|||
கிரிக்கெட் வீரர் பட்டௌடி நமது நாட்டுக்குப் புகழ் தேடித் தந்தவர் !
அவர் புகழ் என்னென்றும் நிலைக்கும் நம் நெஞ்சங்களில் ! அவருக்கு இரங்கல் தெரிவித்து செய்தி வெளிட்ட ஆசிரியர், அன்பர் காமராஜன் அவர்களுக்குப் பாராட்டுக்களும் நன்றியும் ! |
#5
|
||||
|
||||
எனக்கு சின்ன வயதிலிருந்து கிரிக்கட்டில் அவ்வளவா ஆர்வமில்லாததால் பட்டோடியின் கிரிக்கெட் திறமை பற்றி எதுவும் தெரியாமல் இருந்தேன். மேலும் அவர் நான் பிறப்பதற்க்கு முன்பு கிரிக்கெட்டில் கலக்கியவர் என்று கேள்வி பட்டிருக்கிறேன். ராஜ பரம்பரையை சேர்ந்தவர் என்று என் பெற்றோர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
ஆனால் எனக்கு பட்டோடியை நன்றாக தெரிந்தது எல்லாம் ரெய்மான்ட்ஸ் கோட் விளம்பரம் தான், அந்த கோட் விளம்பரம் எதிலுமே பட்டோடியும் சர்மிளா தாகூரும் தான் வருவார்கள் ஆடம்பரமாக கோட் விளம்பரம் வரும் (இதுவும் 15 வருசங்களுக்கு முன்னால் பார்த்தவையே). பட்டோடியை நினைக்கும் போது கோட் விளம்பரத்தில் வரும் "டேக் தி வோர்ல்ட் டு இட்ஸ் ப்ரைட்" என்ற பாடல் வரியும் நினைவு இருக்கிறது. இன்று ஹிந்துவில் படிச்சேன் கிரிக்கெட்டில் நிறைய சாதனை செய்திருக்கிறார் என்று. அவர் ஆத்மா சாந்தி அடைய நானும் பிராத்திக்கிறேன்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#6
|
||||
|
||||
எனக்கு இவரது பெயர்/யாரவர் என்று ஞாபகத்துக்கு வரவில்லை.
என்னுடைய அனுதாபவங்களை இவருடைய குடும்பத்தாருக்கு தெரிவித்து கொள்கிறேன்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#7
|
|||
|
|||
பட்டெளடி அறுபதுகளின் இறுதியிலும் எழுபதுகளின் துவக்கத்திலும் பாப்புலராகவிருந்தார். மத்திய பிரதேசத்தின் ராஜ குடும்பத்தைச் சார்ந்தவர். மிகச் சிறந்த காப்டன் என்று சொல்வார்கள். பிஷன்சிங் பேடி, பிரசன்னா, சந்திரசேகர் போன்ற ஸ்பின் போன்ற ஸ்பின் பெளலர்களைத் திறமையாகப் பயன்படுத்தினார். எஞ்சினியர் என்ற திறமையான விகட் கீப்பர் இருந்தார். ஒரு பாம்பே டெஸ்ட் மேட்ச்ல் வெஸ்ட் இண்டீஸ் நம்மை துவைத்து எடுத்து விட்டார்கள்.(642- 6 விக்கேட் இழப்பிற்கு). அந்தத் தோல்விக்குப் பிறகு பட்டெளடி ,எஞ்சினியர், சோல்க்கர் என்று பெரிய பட்டாளமே ரிட்டையராகி விட்டது. கிர்மானி, வெங்சர்க்கார், மொஹிந்தர் அமர்நாத்,சேத்த செள்கான் என்று புதியவர்கள் உள்ளே வந்தனர்.
அரசியலிலும் ஈடுபட்டார் என்று நினைக்கிறேன். காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு தோல்வியடைந்தார். வாத்தியார் சொன்ன விளம்பரம் நினைவில் உள்ளது. ஜெண்டில் மேன் லூக் என்றால் அது பட்டெளடிக்குத்தான் என்று சொல்லும் அளவிற்கான விளம்பரம். |
#8
|
|||
|
|||
ஒரு கண்ணில் கிட்டத்தட்ட ஜீரோ பார்வை மட்டுமே இருந்தபோதும், இவரின் விளையாட்டு அபாரமானது. ஒருநாளும் என்னுடைய கண் அப்படி இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் பிரமாதமாக ஆடியிருப்பேன் என்றெல்லாம் சொன்னதே இல்லை. இறந்த பிறகு, நன்றாக பார்வை இருக்கும் கண்ணை தானமாக கொடுத்திருக்கும் பட்டோடி, கிரிக்கெட்டை தாண்டி ஒரு நிஜமான ஹீரோ.
அவருடைய மறைவு ஒரு பெரும் இழப்பு. |
#9
|
|||
|
|||
ஷர்மிளா தாகூருடன் கையில் கோல்ஃப் மட்டையுடன் ஒரு விளம்பரத்தில் பட்டோடி நவாப் வருவார் என்று நினைவு. நல்ல பெர்சனாலிட்டி.
அவர் மறைவுக்கு அஞ்சலி செலுத்தி, அவர் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன். |
#10
|
||||
|
||||
Tags |
மரணம் , வீரர் , கிரிக்கெட் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|