<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#61
|
||||
|
||||
பச்சியின் வேகத்துக்கும் உழைப்புக்கும் அவர் இந்நேரம் இன்னும் சில ஆயிரங்களையும் தான்டி இருக்க வேன்டும் ஆனால் அவர் நிர்வாக உதவியாளராக பனியாற்றுவதால் அந்த வேலையும் குறிப்பாக மத்தவங்களுக்கும் உதவும் வேலையும் இருக்கும். என் படைப்புகளில் எழுத்து பிழையில்லாமல் ஏதாச்சும் படைப்பு இருந்தா அது நான் பச்சிக்கு அனுப்பி திருத்தி பிறகு செஞ்ச படைப்பாதான் இருக்க முடியும். கதைகளும் ஜில்லுனு எழுதி கவருவாரு உல்டா எழுதினா ஓடி போய் படிக்க வச்சிருவாரு இத்தனைக்கு இடையில் உற்சாகபடுத்தும் பின்னூட்டங்கள் போட்டு கொன்டு இருப்பது மெச்ச தக்கதே விரைவில் 5000 எட்ட வாழ்த்துகிறேன்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#62
|
|||
|
|||
4000 பதிப்புகளை கடந்த அருமை நண்பர் பச்சிக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள்..
|
#63
|
||||
|
||||
இனிய நண்பர் பச்சி உதவி என்று கேட்டால் உடன் செய்துவிட்டுத் தனி மடல் அனுப்பி விடுவார்! மகத்தான பண்பாளர், அன்புள்ளம் படைத்தவர். அண்மையில் காமலோக கவிஞர் பட்டம் பெற்றவர்! அவர் பதித்த 4000 ஆவது பதிப்புக்கு என் வாழ்த்துக்கள்! மேலும் உயரிய சாதனைகள் காண வாழ்த்துகிறேன் நண்பரே!
பச்சியின் சாதனையை நமக்கெல்லாம் திரி ஆரம்பித்து நினைவுபடுத்திய நண்பர் தமிழாவுக்கு வாழ்த்துக்கள்! அவர் திரிகள் ஓட்டத்தில் பத்தாவது ஆக இருப்பது பற்றி மிக்க மகிழ்ச்சி! நண்பர் மேலும் முந்த வாழ்த்துக்கள்! Last edited by kay; 05-10-11 at 09:14 PM. |
#64
|
|||
|
|||
பழகுவதற்கு இனியவர், பண்பாளர் பச்சி அவர்கள். பிழையற்ற அழகு தமிழில் நல்ல எழுத்தாளுமையுடன் சுவாரசியமான நடையில் கதைகளைத் தருவதில் வல்லவர். இவருடைய கவிதைகளை வாசிக்கும் தருணங்கள் இனிமையானவை. லேட்டஸ்ட் பாடல்களை உல்டா செய்வதில் மிகவும் திறமைசாலி. (உதாரணம்.... எந்திரா.....).
புதிய எழுத்தாளர்களுக்கு ஓடி வந்து உதவுபவர். இவருடன் தொலைபேசியில் பேசும் நிமிடங்கள் இனிமையானவை. நண்பர் பச்சி அவர்கள் தொட்ட 4000க்குப் பாராட்டுகள் + மேலும் பல்லாயிரம் எட்ட வாழ்த்துகள்! சரியான நேரத்தில் இத்திரியைத் தொடங்கிய நண்பர் தமிழாவுக்குப் பாராட்டுகள் + நன்றி! |
#65
|
|||
|
|||
சபாஷ் பச்சி.
செல்ல தோழர்.
ஆரம்பத்தில் பல இடங்களில் தளத்தில் உதவியவர் - தங்க வாசலுக்கு என்னை கொண்டு வர படாத பாடு பட்டவர். தொடக்க எழுத்தாளர்கள் + நம்ம வாத்தி மாதிரி ஆளுங்களுக்கு பல நேரங்களில் எழுத்துப் பிழை திருத்தும் ஆபத்பாந்தவன் இன்னும் பல ஆயிரங்கள் தொட வாழ்த்துகள். திரி ஆரம்பித்த ரேசில் இன்னும் பத்துக்குள் ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டு இருக்கும் தமிழாவுக்கும் வாழ்த்துகள். |
#66
|
|||
|
|||
பண்பாளர் பச்சி
நான்காயிரம் பதிவுகளை கடந்து இருக்கும் " பண்பாளர் பச்சி " அவர்களுக்கு வாழ்த்துகள். நிர்வாக பணிகளுக்கு இடையில் தளத்தின் அனைத்து தனது பதிவுகளையும், படைப்புக்களையும் கொடுத்து நான்காயிரத்தை தொட்டு இருக்கிறார்.
கேட்காமலேயே உதவி செய்யும் மனப்பான்மையும், மென்மையான அனுகுமுறையுமே இவருக்கு இந்த அளவுக்கு நண்பர்கள் வட்டத்தை உருவாக்கி இருக்கின்றது. எல்லா புதியவர்களை போல் என்னையும் ஆரம்ப நாட்களில் எழுத தூண்டியவர்களில் முக்கியமானவர். தளத்தில் அதிக நண்பர்களை உடையவராக தாராளமாக இவரை அடையாளம் காட்டலாம். இவரிடம் அவ்வப்போது நடக்கும் தொலைப்பேசி உரையாடலும், சாட்டும் கூட மறக்க முடியாததாக அமைந்து விடுகிறது. தளத்தில் நுழையும் புதியவர்களுக்கு பச்சி ஒரு கலங்கரை விளக்கம். தொடரட்டும் அவரது சேவை. நான்காயிரம் பதிவை கண்ட அனைவரின் நண்பருக்கு வாழ்த்துகள். திரி தொடங்கிய தமிழா அவர்களுக்கும் வாழ்த்துகள். |
#67
|
|||
|
|||
Quote:
கழிந்த 2010 வருடம்மானது பச்சியை லோகத்தில் பன்முகம் கொண்டவராய் காட்டியுள்ளது. 2010ம் வருடத்திற்கான சிறந்த கவிஞராகவும் பலான புத்தகம் மூலம் சிறந்த மாத கதை ஆசிரியராகவும் விருது பெற்றுள்ளார். மேலும் தள நண்பர்கள் மூலம் பண்பாளர் பச்சி என்ற மகுடத்தையும் பெற்றுள்ளார். நண்பர் பச்சி அவர்கள் தனது தனிப்பட்ட வாழ்வில் சிறக்கவும், லோகத்தில் இன்னும் பல ஆயிரம் பதிவுகளை தொடரவும் வாழ்த்துகிறேன். திரி தொடங்கிய நண்பர் தமிழாவுக்கும் வாழ்த்துக்கள். Last edited by RasaRasan; 05-10-11 at 06:38 PM. |
#68
|
|||
|
|||
பலான புத்தகம் கதை மூலம் சிறந்த மாத கதை ஆசிரியராகவும் அண்மையில் காமலோக கவிஞராகவும் விருது பெற்றவர், அனைவரின் அன்புக்கும் பாத்திரமானவர், அன்புள்ளம் கொண்டவர், என் அருமை நண்பர் பச்சி அவர்கள் 4000 பதிப்புகளுக்கு பாராட்டுக்கள். இது மேலும் பல்லாயிரமாக பெருக வாழ்த்துக்கள்.
இதற்கு மேல் என்ன சொல்ல வேண்டும். பாராட்டுக்கள் நண்பரே! |
#69
|
|||
|
|||
மக்காஸ் எல்லாரும் ஏற்கனவே சொல்ல இருந்ததை எல்லாம் சொல்லிட்டாங்க. வேற என்ன சொல்றதுன்னு தெரியல. படையப்பாவாக பட்டையை கெளப்பும் பச்சி நான்காயிரம் தாண்டி இன்னும் பல ஆயிரங்களை தொட வாழ்த்துகள். வாத்திக்கு ஃபைட் குடுங்க பச்சி.
வழக்கம் போல சரியான நேரத்தில் திரிதுவக்கிய தமிழாவுக்கும் வாழ்த்துகள். |
#70
|
|||
|
|||
பச்சி அண்ணாவைப் பற்றி எனக்கு எதுவும் சொல்லத் தெரியவில்லை. எது சொன்னாலும் அது குறைவாகவே தோன்றும் என்பதால் அன்பை மட்டுமே விட்டுச் செல்கிறேன்.
|
|
|
|