உங்களுக்கு அந்த தகுதி உள்ளது நண்பரே!
சிறிய காலத்தில் இமாலய வளர்ச்சி பெற்று இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். நாங்கள் பல காலம் எழுதி பெற்ற பரிசுகளை குறுகிய காலத்தில் பெற்று மிக பெரிய சாதனைகளை அடைந்து இருக்கிறீர்கள். உங்கள் திறமையே காரணம்.
ஏராளமான கதைகள் எழுதி இருக்கிறீர்கள். என் உடல் நிலை காரணமாக நான் படிக்க முடியவில்லை. ஆனால், படித்த சில கதைகள் மிக அருமையாக எழுதப்பட்டுள்ளதை உணர முடிகிறது.
காமலோகத்தில் நிலைத்து, நீடித்து இருக்க வாழ்த்துக்கள்.
மௌனி
Quote:
Originally Posted by ASTK
லோக நண்பர்கள் அனைவரும் முன்கூட்டிய தீபாவளி நல்வாழ்த்துகள் !
நான் லோகத்தில் நுழைந்து ஒன்பது மாதங்களாகின்றன. நான் உள்ளே வரும் போது எல்லோரையும் போல வெறுங்கையோடு தான் வந்தேன். ஆனால் இன்று ( 21/10/2019 ) என்னிடம் உள்ள இபணங்களின் மதிப்பு ஒரு லட்சத்தை தாண்டி விட்டது. இது இங்கேயே இந்த தளத்திலேயே நண்பர்களால் எனக்கு அளிக்கப்பட்ட வெகுமதியாகும்.
மிகவும் குறுகிய காலத்தில் என் கணக்கில் ஒரு லட்சம் இபணங்கள் சேர்ந்துள்ளன. இதற்கு காரணம் நண்பர்கள் அளித்த பின்னூட்டங்கள் , நட்சத்திரங்கள் , பரிசுகள் போன்றவையே. இத்தோடு எனது சிறிய உழைப்பும் காரணம். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை இந்த லோகத்தில் என்பதற்கு நானும் ஒரு உதாரணம் என்று நினைக்கிறேன். லோகத்தில் ஒரு லட்சம் இபணம் சம்பாதித்திருக்கும் இருபது பேரில் நானும் ஒருவனாக நுழைந்திருக்கிறேன். லோகத்தின் ஜாம்பவான் படைப்பாளர்களுடன் என்னை வரிசைப்படுத்திய நிர்வாக உறுப்பினர்களுக்கு நன்றி !
என் படைப்புகளை படித்து பாராட்டி எழுதிய நண்பர்களுக்கும் வாக்களித்த உறுப்பினர்களுக்கும் தொடர்ந்து உற்சாகப்படும் நிர்வாக உறுப்பினர்களுக்கும் என் நன்றி !
என் மீது புதிய சுமை ஏற்றப்பட்டுள்ளது. இந்த இனிய சுமையை தொய்வின்றி எடுத்துச் செல்வேன். லோக நண்பர்களுக்கும் நிர்வாக உறுப்பினர்களுக்கும் மீண்டுமொரு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
|