<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
அனுக்ஷாவுக்கு உதவுங்கள்
அனுக்ஷா என்ற பிறந்து 18 மாதமே ஆன ஒரு குழந்தையின் எதிர் காலம் கேள்விக் குறியாய் உள்ளது. அவளால் பேசவும், கேட்கவும் முடியவில்லை. இதற்கு "Cochlear Implantation" என்ற உயரிய சிகிச்சை செய்யவேண்டும் என்றும் அதற்கு 8 லட்சங்கள் செலவாகும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.
ஊனமில்லாத பெண்களுக்கே வாழ்க்கையில் பல கஷ்டங்கள் இருக்கும் போது, இந்த சின்னக் குழந்தை இந்த ஊனத்துடனேயே இருந்தால் இன்னும் என்னென்ன கஷ்டங்களை சந்திக்க நேரிடும் என்று யோசித்துப் பாருங்கள். அனுக்ஷாவின் தாயாருக்கு சமீபத்தில் தான் ஒரு கிட்னி ஆபரேஷன் நடந்து இறக்கிற பணத்தை அனைத்தையும் செலவழித்து விட்ட தந்தை, மகளுக்கு எப்படி சிகிச்சை செய்வது என்று தவிக்கும் வேளையில், இங்குள்ள கருணை உள்ளம் படைத்த நண்பர்கள் அவர்களுக்கு உதவி செய்ய முன் வந்துள்ளார்கள். அவர்களுடன் சேர்ந்து நானும் நமது தளத்தில் கிடைத்த நன்கொடையில் ஒரு பகுதியை இந்த பிஞ்சு குழந்தையின் செலவுக்கு வழங்கியுள்ளேன். நீங்களும் உங்களால் இயன்றதை செலுத்தி அனுக்ஷாவின் சிகிச்சைக்கு உதவுங்கள். மேலும் விவரங்களுக்கு: http://www.helpanuksha.cjb.net/ நன்கொடை பற்றிய விவரங்களுக்கு: vavjeeva@gmail.com உங்களால் ஒரு குழந்தையின் வாழ்வு மலரட்டும். நன்றி.. பின்குறிப்பு: இந்த நற்செயலில் காமலோகம் பெயர் வரவேண்டாம் என்பதால், தமிழ்மன்றம் பெயரை உபயோகப் படுத்தவும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 27-03-06 at 03:28 PM. |
#2
|
|||
|
|||
திரு நிர்வாகி அவர்களின் பிறருக்கு உதவும் மனம் கண்டு மனம் நெகிழ்ந்தேன் இன்னும் இரண்டு முன்று நாட்களில் என்னால் இயன்றளவு எவ்வளவு முடியுமோ அதனை அந்த பிஞ்சு குழந்தை நலத்திற்க்கு அனுப்பி வைக்கிறேன் என்று உறுதி கூறுவதோடு உங்களுடன் இணைந்து நம் தள ஏனைய மற்ற நண்பர் நண்பிகளயும் கருணையுள்ளத்துடன் அக்குழந்தைக்கு உதவ முன் வர வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன் - அநபாயன்.
Last edited by anabayan; 27-03-06 at 04:30 PM. |
#3
|
||||
|
||||
உங்கள் உதவும் உள்ளத்திற்கு நன்றி anabayan,
உங்களால் ஒரு குழந்தையின் வாழ்வு மலரட்டும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#4
|
||||
|
||||
அனுக்ஷா உங்களுக்கு பூரண சுகம் கிடைக்க என் இறைவனை வேண்டுகிறேன்...அத்துடன் என்னால் இயன்ற தொகையை உங்கள் வைத்திய செலவிற்காக வரும் மாதம் அனுப்பிவைக்கிறேன்.
உங்களின் முன்னேற்றத்தை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்.... |
|
|
|