Quote:
Originally Posted by venkat8
ஸாரி நண்பா! நான் கூறியதை ஏதோ தவறாக புரிந்துக்கொண்டீர்கள் என்று எண்ணுகிறேன். இலவசமாக புத்தகம் கிடைக்கும் தளத்தில் நாம் தேடும் புத்தகம் கிடைக்காது என்றேன். இலவசமாக புத்தகங்களை தேடுபவர்களை தவறாக கூறவில்லை.
|
ஸாரி நண்பா! அன்று எதோ ஒரு மன உளைச்சலில் இருந்தேன். வேறு எதோ கோபம். உங்களுடைய பதிலுக்குப் பதில் எழுதும் போது பொசுக் பொசுக் என தேவையற்ற வார்த்தைகளை எழுதி விட்டேன். தயவு செய்து என்னை மன்னியுங்கள்.
Quote:
Originally Posted by venkat8
சென்ற வருடம் நண்பர் போத்தன் ராஜா கேள்வி எழுப்பியபொழுது இருந்த பிரச்சினை தற்பொழுது அவ்வளவாக இல்லை. அமேசானின் இந்திய தளத்தில் தமிழ் இபுக் கிண்டில் வர்ஷன் என்று போட்டால் நிறைய வந்து கொட்டும்.
|
இல்லைங்க! நான் அமெசானின் இந்திய தளத்தில் மீண்டும் இன்று உட்கார்ந்து தேடினேன். மிக சொற்பமான மின்னூல்களே தமிழில் அத்தளத்தில் இருக்கின்றன. ஆனால் பேப்பர் பேக் தமிழ் புத்தகங்கள் நிறைய இருக்கின்றன. அதாவது ஆர்டர் கொடுத்தால் வீட்டிற்கு புத்தகம் வரும். இபுத்தகம் குறித்து நான் தேடியதில் ஏதேனும் குறை இருக்கிறதா? ஒருவேளை நீங்கள் பேப்பர் பேக் புத்தகங்களை மின்னூல்கள் என கணக்கில் கொண்டீர்களா? உண்மையிலே தமிழில் நிறைய மின்னூல்கள் அங்கே கிடைக்கின்றன என்றால் மிகவும் சந்தோஷமே! எனக்குத் தனிமடலில் சுட்டி அனுப்புங்கள் ப்ளீஸ்!
அப்புறம் தமிழில் இருந்த மின்னூல் ஒன்றினை பதிவிறக்கி ஆண்டிராய்ட் கிண்டில் ஆப்பில் திறந்த போது அது சரியாக இருந்தது. ஆனாலும் பொருளடக்கம் பகுதியில் எழுத்துருக்கள் இடம் மாறி பல்லிளித்தன.
http://freetamilebooks.com/ தளத்தில் கிடைக்கும் மின்னூலை (கிண்டில் வெர்ஷன் என அவர்கள் சொன்ன பிரதி) ஆண்டிராயிட் கிண்டில் ஆப்பில் திறந்த போது மொத்தமாய் எழுத்துருக்கள் படிக்கும் தரத்திலே இல்லை.
Quote:
Originally Posted by venkat8
பிடிஎஃப் வர்ஷனை நேரடியாக கிண்டிலில் படிக்கும் வசதியை அவர்கள் செய்ய மாட்டார்கள். அப்படி செய்தால் பிறகு கிண்டில் வர்ஷன் புத்தகங்களில் கிடைக்கும் வருவாய் நின்றுவிடும்.
|
பிடிஎப் மற்றும் நாம் வேறு தளங்களில் பதிவிறக்கும் மின்னூல்கள் ஆகியவற்றை இமெயிலில் டாக் அனுப்பும் வசதி மூலம் கிண்டிலில் ஏற்றி வாசிக்கலாம். மின்னூல்கள் உட்பட மற்ற ஃபைல்கள் அவ்வாறு கிண்டிலுக்கு ஏற்றி கொள்ளலாம்.
தமிழ் புத்தகங்களை பிடிஎஃப்-பாக தான் கிண்டிலில் வாசிக்கிறேன்.
மீண்டும் ஏதேனும் முந்தி வந்த பதிப்பால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள். மீண்டும் அது பற்றி நாம் பேசி கொள்ள வேண்டாம்.
லோகத்தில் இருக்கும் டெக்னாலஜி ஜாம்பவான்களே, இந்தக் கிண்டில் பிரச்சனைப் பற்றி சொல்லுங்களேன்!!!