<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#31
|
||||
|
||||
நேரில் கண்டு அதை பகிர்ந்து கொண்ட திரு.ராசு அவர்களுக்கு மிக்க நன்றி. நம் பிரார்த்தனை எப்போதும் உண்டு.
|
#32
|
|||
|
|||
அன்பு நண்பர் ட்ரீமர் அவர்களே! தங்களின் சுறுசுறுப்பு பார்த்து வியந்தவன் நான். தங்களின் நிலை கண்டு வருந்தி தாங்கள் பூரண நலம் பெற ஆண்டவனை பிராத்தனை செய்கிறேன்.சீக்கிரம் தாங்கள் குணம் அடைவீர்கள்
|
#33
|
||||
|
||||
ஆண்டவா இப்பொழுதுதான் இந்த திரியைப் பார்க்க நேர்ந்தது,,,,, ட்ரீமருக்கா.....நம்ப முடியவில்லை......நீங்கள் எத்தகைய விளக்கம் கொடுத்தாலும் அவற்றை மனம் மறுக்கிறது. உங்கள் உடல் நலமடைய எனது வேண்டுதலை இரக்கமில்லா இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் ஏனென்றால் அவன் என்ன செய்தாலும் இறுதியில் அவன் அருளைத்தானே வேண்டி நிற்க வேண்டி இருக்கிறது கல்நெஞ்சக்காரன். நண்பரே எனக்கும் இரண்டு வருடங்களுக்கு முன் மாரடைப்பு வந்து வைத்தியசாலைக்கு சென்று அஞ்சியோகிராம் மூலம் இரு அடைப்புக்களை நீக்கி எனது இறுதிக் காலம் வரை மாத்திரை மூலம் உடலை கட்டுப்பாட்டில் வைத்திருக்க மருத்துவர் சொன்னார். அவர் கூற்றுப்படி இந்த நிமிடம் வரை கடைப்பிடிக்கிறேன். நான் வைத்தியசாலையில் இருந்து வந்தவுடன் எனது மனநிலையை திசைதிருப்ப பெரிதும் உதவியது இந்தக் காமலோகம்தான்.
உங்கள் நிலமையை எண்ணி வருந்தாமல் நீங்களும் காமலோகத்துக்கு வந்து முடிந்தவரை பங்குகொண்டு உங்கள் மனச் சோர்வை நிவர்த்தி செய்ய அன்புடன் அழைக்கிறேன். உங்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக. தளத்தின் விடையங்களையும், நடப்புக்களையும் ட்ரீமருக்கு அவ்வப்பொழுது தெரியப் படுத்தி அவர் உடல் சோர்வை நிவர்த்திபண்ணும் நண்பர் ராஜேஷ் அவர்களுக்கு தளத்து நண்பர்கள் சார்பில் நன்றிகளை தெருவித்துக் கொள்கிறேன். அவர் நிலை அறிந்து அவரை நேரில் சென்று பார்த்து வந்து நண்பர் ராசு அவர்களுக்கு எங்கள் சார்பில் நன்றிகள். ட்ரீமரே தளத்தில் நான் ஏதாவது சுடு சொற்களை பாவித்து உங்களை மனம் நோகவைத்தால் மன்னித்து விடுங்கள். விரைவில் சுகமடைந்து எங்கள் ட்ரீமராக வந்து எங்களை மகிழ்ச்சி அடைய வைக்க அந்த சக்தியை வேண்டுகிறேன். |
#34
|
|||
|
|||
தனித்தனியாகப் பெயர் சொல்லி நன்றி தெரிவிக்க இயலவில்லை. அனைத்து நல்லுள்ளங்களின் ஆலோசனைகளுக்கும் பிரார்த்தனைகளுக்கும் நன்றி, நன்றி, நன்றி.
|
#35
|
|||
|
|||
ராஜேஷ் அண்ணன் சொல்லிதான் உங்களின் உடல் நல குறைவு பற்றி அறிந்தேன் அண்ணா, ரிலாக்ஸா இறுங்க எல்லாம் சரியாகிடும், கொஞ்சம் டாக்டர் கிட்டவும் காட்டுங்களேன்....எல்லாம் சரியாகிடும் அண்ணா.
|
#36
|
||||
|
||||
தங்களது இந்தத் திரியை இன்று தான் காணக்கிடைத்தது. அதிகம் எழுதி அதை வாசிக்கும் சிரமத்தைக் கூட உங்களுக்குத் தர விரும்பவில்லை.
நீங்கள் நிச்சயம் வெகுவிரைவில் காமலோகத்தில் முன்பு போல பங்களிப்பீர்கள். எனக்குத் தெரியும். உங்கள் மனது எந்தளவு இளமையானது உறுதியானது என்பதை நான் உங்களைக் கண்டிராவிட்டாலும், பேசியிராவிட்டாலும் உங்களுடன் லோகத்தில் பழகியதில் தெரிந்து வைத்துள்ளேன். உங்களுக்கு ஒன்றும் நடவாது. இன்னும் பத்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் நீங்கள் எங்களுடனேயே இருப்பீர்கள். |
#37
|
|||
|
|||
ஐயா ட்ரீமர் அவர்கள் உடல் நலம் தேறி வர அனைத்தும் வல்ல இறைவனை ப்ரார்த்திக்கிறேன்.
|
#38
|
||||
|
||||
பூரண நலம் பெற வாழ்த்துக்கள்!
|
#39
|
|||
|
|||
நண்பரே இப்பொழுதுதான் இத்திரியை பார்க்கிறேன்... மனதில் எழும் துயரத்தையும் தாண்டி உங்களின் தன்னம்பிக்கையான பதிவுகளும் நண்பர் ராசுவின் கரிசனமான பதிவும் நம் தள நண்பர்கள் பலரின் வாழ்த்துக்களும் பிரார்தணைகளும் மனதை நெகிழவைத்துள்ளது.
இப்புத்தாண்டில் நீங்கள் மறுபடியும் புது பொலிவுடன் சிரமம் குறைந்து வலம் வர என்னுடைய பிரார்தனையும்... அருமையான புனை பெயர் வைத்துள்ளிர்கள்... இந்த லோகம் கனவுலகம் என்றாலும் இதிலும் நனவுலகதுக்கான நண்பர்களை பெற்றிருக்கிறிர்கள்.... அனைவரின் பிரார்த்தனையும் வாழ்த்துக்களும் நீங்கள் மீண்டெழுவதற்கு உறுதுணையாக இருக்கும் என உளமாற நம்புகிறேன். |
#40
|
||||
|
||||
இந்த திரியை இன்று தான் வாசித்தேன்.
உங்கள் உடல்நிலை முக்கியம். சீக்கிரமே குணமைடைந்து விட்டு இங்கே வந்து எங்களுக்காக இன்னும் கதைகளை தாருங்கள்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|