<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #1  
Old 17-10-08, 04:56 PM
muthuveeran muthuveeran is offline
User inactive for long time
 
Join Date: 09 Nov 2006
Posts: 1,725
My Threads  
டெண்டூல்கர் உலக சாதனை..வாழ்த்துவோம்

சச்சின் டெண்டூல்கர் உலக சாதனை


இந்தியாவின் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டூல்கர் உலக சாதனை படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரர் என்கிற பெருமையை அவர் ஈட்டியுள்ளார்.

இதுவரை மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் வீரரான பிரையன் லாராவின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே பஞ்சாபிலுள்ள மொஹாலி கிரிகெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது இந்தச் சாதனையை டெண்டூல்கள் படைத்துள்ளார்.

பிரையன் லாரா டெஸ்ட் போட்டிகளில் 11,953 ஓட்டங்களை எடுத்திருந்தார். தற்போது டெண்டூல்கர் லாராவை மிஞ்சி விட்டார்.

லாரா கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்று விட்டார் என்பதும், டெண்டூல்கர் தொடர்ந்து விளையாடி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுவரை டெண்டூல்கர் டெஸ்ட் போட்டிகளில் 39 சதங்களை அடித்துள்ளார் என்பது மேலும் ஒரு சிறப்பாகும். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் அதிக ஓட்டங்களை எடுத்துள்ள வீரர் என்கிற பெருமையும் டெண்டூல்கருக்கு உண்டு.

இன்று [17.10.2008] ஆட்டத்தின் போது, தேநீர் இடைவேளைக்கு பிறகு ஆஸி வீரர் பீட்டர் சிடில் வீசிய பந்தை தேர்ட் மேன் திசையை நோக்கி தட்டிவிட்டு மூன்று ஓட்டங்களை எடுத்த போது இந்த சாதனையை டெண்டூல்கர் படைத்தார்.

இது வரை 151 டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார். சராசிரியாக 54.02 ஓட்டங்களை அவர் பெற்றுள்ளார்.

தனது முதல் டெஸ்ட் போட்டியை அவர் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடினார். 1989 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் தேதி கராச்சி நகரிலுள்ள தேசிய விளையாட்டு மைதானத்தில் அவரது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை தொடங்கியது.

அதே ஆண்டு டிசம்பர் மாதம் 18 தேதி குஜ்ரன்வாலா நகரில் தனது முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அவர் விளையாடினார்.

1973 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி அவர் மும்பையில் பிறந்தார். அவரது முழுப் பெயர் சச்சின் ரமேஷ் டெண்டூல்கர் என்பதாகும்.

மேலும் வெற்றிகளைப் பெற அவரை வாழ்த்துவோம்..(அவரது கிரிக்கெட் சாதனைகள் குறித்த மேலும் பல செய்திகள் பின்னர்)

Last edited by xxxGuy; 17-10-08 at 06:38 PM.
Reply With Quote
  #2  
Old 17-10-08, 05:04 PM
cena_fan cena_fan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 26 Mar 2008
Posts: 4,930
My Threads  
மிகவும் சந்தோஷமான செய்தி முத்துவீரரே. அதை பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி. சச்சின் நமது நாட்டிற்க்கு ஒரு பொக்கிஷம். சச்சினை நினைத்து பொறாமை படாதா நாடுகளே இல்லை என்னும் அளவுக்கு கிரிக்கெட்டில் சாதனை படைத்தவர்.
அவரின் சாதனை இன்னும் தொடரும். தொடரட்டும்.
Reply With Quote
  #3  
Old 17-10-08, 05:04 PM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Posts: 10,455
My Threads  
டென்டுல்கர் ஒரு மாமனிதர்!

அவரது சாதனைகளை இனிவரும் காலங்களில் எந்த ஒரு இந்தியராலும் எட்டமுடியாது. கங்கூலி நன்கு மேலே வந்தார் பிறகு நிறைய அரசியலால் அவர் அமுங்கிவிட்டார்..

அருமையான தகவலை தந்த முத்து உங்களுக்கு நன்றி
Reply With Quote
  #4  
Old 17-10-08, 05:09 PM
coolanu coolanu is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 04 Aug 2008
Location: அமீரகம் / இந்தியா
Posts: 2,424
My Threads  
எவ்வளவோ அரசியல் இடர்கள், விளம்பர சாடல்களுக்கு மத்தியிலும் தளராது சாதனை புரியும் தெண்டுல்கரை வாழ்த்துகிறேன்.

அவரின் இந்த சாதனைகள் இன்னும் நீடிக்கவேண்டும்.
Reply With Quote
  #5  
Old 17-10-08, 05:18 PM
udhayasuriyan udhayasuriyan is offline
User inactive for long time
 
Join Date: 19 Feb 2006
Posts: 0
My Threads  
சச்சின் டெண்டுல்கரின் இரு உலக சாதனையை மனதார பாராட்டுகிறேன்..
வாழ்த்துக்கள் சச்சின்..

லாராவின் சாதனை முறியடிப்பு..
உலக கிரிக்கெட் வரலாற்றில் 12000 ஓட்டங்களை கடந்தவர் என்ற பெருமை..
பெருமை படுகிறோம்.. கிரிக்கெட் உலக நாயகன் நம்ம ஆளு என்று பெருமை படுகிறோம்..

இன்று அடித்த ஓட்டம் ஒரு நாள் போட்டி போல் இருந்தது..
கடைசியில் விளாசி தள்ளியுள்ளார்..
கங்குலி கடைசியில் இவருக்கு சரியாக நேரம் ஒதுக்கி தரவில்லை.. இருந்தாலும்.. 109 பந்துகளில் 88 ஓட்டங்களை எடுத்து இதன் மூலம் உலக சாதனைகளை படைத்து சச்சின்.. உன்னை குறை சொல்ல அனைவருக்கும் தகுதி இருக்கு.. ஏனென்றால் எல்லோரிடம் நாக்கு மட்டுமே உள்ளது..
உன் சாதனைகளை முறியடிப்பவனுக்கே.. உன்னை விமர்சிக்கும் தகுதி இருக்கிறது என்று நான் சொல்கிறேன்..

இளைஞர்களுக்கு உன்னுடைய பேட் மூலம் பதில் சொல்லியிருக்கிறாய்..

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்
Reply With Quote
  #6  
Old 17-10-08, 07:04 PM
கழுகு கழுகு is offline
User inactive for long time
 
Join Date: 10 Aug 2008
Location: சென்னை
Posts: 873
My Threads  
மனம் நிறைவடைய செய்த இந்த செய்தியை தந்த முத்துவீரனுக்கு நன்றி!
மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினின் இந்த உலக சாதனை இன்னொருவரால் அவ்வளவு விரைவில் முறியடிக்கபடுமா? என்பது கேள்விக்குறியே!
தொடரட்டும் சச்சினின் சாதனைகள்!
Reply With Quote
  #7  
Old 17-10-08, 07:34 PM
msvasan's Avatar
msvasan msvasan is offline
User inactive for long time
 
Join Date: 27 Dec 2005
Location: ஈரோடு,தமிழ் நாடு
Posts: 3,701
My Threads  
இன்னும் பல சாதனை புரிய ஆண்டவன் அவருக்கு அருள் புரியட்டும்
Reply With Quote
  #8  
Old 17-10-08, 08:17 PM
ramjiram ramjiram is offline
User inactive for long time
 
Join Date: 08 Dec 2005
Posts: 2,367
My Threads  
இந்தியாவின் பெருமைக்குரிய அம்சங்களில் சச்சினும் ஒருவர்.
Reply With Quote
  #9  
Old 17-10-08, 08:24 PM
muthuveeran muthuveeran is offline
User inactive for long time
 
Join Date: 09 Nov 2006
Posts: 1,725
My Threads  
கருத்துக்களை பகிர்ந்து கொண்ட நன்பர்களுக்கு மனமார்ந்த நன்றி...

டெண்டூல்கர் குறித்து மேலும் சில ருசிகர தகவல்கள்:

இதுவரை 151 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி தற்போது வரை( அதாவது மொஹாலியில் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கும் வரை)12,027 ஓட்டங்களை எடுத்துள்ளார்.

யாருடைய பந்து வீச்சில்( பீட்டர் சிடில்) தனது சாதனையைப் படைத்தாரோ அவரது பந்து வீச்சிலேயே ஆட்டத்தையும் இழந்தார்.

டெண்டூல்கர் இதுவரை ஆடியுள்ள 246 இன்னிங்கிஸில் 25 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஆட்டத்தில் அவர் எடுத்த அதிகபட்ச ஓட்டம் 248 ( ஆட்டமிழக்காமல்)...39 சதங்களும் 49 அரை சதங்களும் அடித்த பெருமையும் அவருக்கு உண்டு.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் மேதை டான் பிராட்மேன் சச்சின் டெண்டூல்கர் விளையாடும் விதத்தைப் பார்த்துவிட்டு அவர் தன்னைப் போலவே விளையாடுகிறார் என்று தமது மனைவியிடம் பாராட்டி தெரிவித்துள்ளார்.( இதை விட பெரிய பாராட்டு என்னவாக இருக்க முடியும்)

ஒரு நாள் போட்டிகளைப் பொறுத்த வரை இதுவரை 417 போட்டிகளில் ஆடியுள்ள டெண்டூல்கர் 16.361 ஓட்டங்களை எடுத்துள்ளார். இதில் 42 சதங்களும் 89 அரை சதங்களும் அடங்கும்.

20-20 போட்டிகளிலும் அவருடைய பங்களிப்பு இருந்துள்ளது. 12 போட்டிகள் 356 ஓட்டங்கள் .

லாராவும் சிறந்த வீரரே

முழுப்பெயர் பிரையன் சார்லஸ் லாரா...பிறந்த தேதி 01.05.1969 சொந்த நாடு டிரினிடாட்.

முதல் டெஸ்ட் போட்டி டெண்டூல்கரைப் போலவே பாகிஸ்தானுக்கு எதிராக 1990 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி லாகூர் நகரில்..கடைசி டெஸ்ட் போட்டியும் பாகிஸ்தானுக்கு எதிராகவே கராச்சியில் 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி...

அதிகபட்ச ஓட்டங்கள்: இங்கிலாந்துக்கு எதிராக ஆண்டிகாவில் நடைபெற்ற போட்டியில் ஆட்டமிழக்காமல் 400 ஓட்டங்கள்(டெஸ்ட் போட்டியில்).

டெஸ்டில் 34 சதங்கள் 48 அரைசதங்கள்...



ஒரு நாள் போட்டிகளைப் பொறுத்த வரையில், 299 போட்டிகள் 10,405 ஓட்டங்கள். அதில் 19 சதங்கள் 63 அரைசதங்கள்..

டெண்டூல்கர் வலது கை ஆட்டக்காரர் லாரா இடதுகை ஆட்டக்காரர்.
Reply With Quote
  #10  
Old 17-10-08, 09:07 PM
bemercyb bemercyb is offline
User inactive for long time
 
Join Date: 07 Nov 2006
Posts: 369
My Threads  
லாராவின் இதுநாள் வரையிலான உலக சாதனையை முறியடித்த நம் பாரதத்தின் கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு வாழ்த்துகள்.. அவரது சாதனை தொடரட்டும்..
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 11:37 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios