<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
06-04-2011. பிரபல நடிகை சுஜாதா மரணம்.
அவள் ஒரு தொடர்கதை படத்தின் மூலம் பிரபலமான நடிகை சுஜாதா உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று(06.04.11) காலமானார்.
இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் "அவள் ஒரு தொடர்கதை" படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை சுஜாதா. 1968ல் தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய சுஜாதா தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் 300 படங்களில் நடித்திருக்கிறார். இதுதவிர தமிழில் சிவாஜி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்திருக்கிறார் சுஜாதா. இவரது நடிப்பில் வெளிவந்த அந்தமான் காதலி, அண்ணக்களி, அவள் ஒரு தொடர் கதை, அவர்கள், விதி உட்பட பல படங்கள் பிரபலமானவை. நடிகையாக நடிக்க ஆரம்பித்து பின்னர் அம்மா மற்றும் குணச்சித்திர கேரக்டரில் நடித்து வந்தார். இந்நிலையில் சிறிதுகாலம் நடிக்காமல் இருந்து வந்த சுஜாதா கடைசியாக 2004ம் ஆண்டு அஜீத்தின் வரலாறு படத்தில் நடித்தார். அதன்பின்னர் நடிப்பிற்கு முழுக்கு போட்டார் சுஜாதா. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நடிகை சுஜாதா சென்னையில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். சுஜாதாவின் உடல் நிலைமை மோசமடைய வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட அவர் இன்று(06.04.11) மரணம் அடைந்தார். மலையாளத்தை சேர்ந்தவரான சுஜாதா, 1952ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் தேதி இலங்கையில் பிறந்தவர். இவருக்கு திவ்யா என்ற மகளும், ஷாஜித் என்ற மகனும் உள்ளனர். சுஜாதாவின் கணவர் ஜெயகர் தொழிலதிபராக இருக்கிறார். சுஜாதாவின் மறைவிற்கு பல்வேறு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துளள்னர். நன்றி:தினமலர். திரை உலகில் எல்லோரும் மதித்து போற்றும் நடிகைகளில் ஒருவராய் திகழ்ந்து எல்லோருக்கும் பிடித்த நல்ல நடிகையாய் குடும்ப கதாபாத்திரங்களில் நடித்து மறைந்த நடிகை சுஜாதாவின் மறைவிற்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். |
#2
|
|||
|
|||
ஒரு நல்ல கதாநாயகியாக, அம்மாவாக என்று தனக்கு கொடுக்கபட்ட எல்லா பாத்திரங்களிலும் சிறப்பாக நடித்த சுஜாதாவின் மரணம் வருத்ததிற்கு உறியதுதான்.
அவருடைய குரல் எனக்கு ரொம்ப பிடிக்கும். எனது வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். Last edited by kazuthaipuli; 07-04-11 at 12:29 PM. |
#3
|
|||
|
|||
நல்ல நடிகை. அவர்கள் படத்தில் இவரின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்தது. பாந்தமான நடிகை. அவரின் மறைவுக்கு என்னுடைய வருத்தங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
|
#4
|
||||
|
||||
இவருடைய ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றேன். அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்
மிகவும் நல்ல நடிகை என பெயர் எடுத்தவர் . . புகழ் உச்சிக்கு போகாவிட்டாலும் தமிழ் சினிமாவின் சொல்லக்கூடிய நடிகைகளில் ஒருவராக இருந்தவர் சுஜாதா . . |
#5
|
|||
|
|||
எனக்கு மிகவும் பிடித்த நடிகைகளில் ஒருவர்.
கூடுதலாக உணர்ச்சிகளை காட்டாமல், கதை அறிந்து அதற்குள் தன்னை ஒற்றிக் கொள்ளும் திறம் படைத்தவர். அவரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வணங்குகிறேன்.. |
#6
|
|||
|
|||
நடிக்கும் வேடத்தை மனதிலே இருப்பதை நிஜமாக்குபவர்.. அவரின் மறைவால் பிரிந்து வாடும் அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த வருத்தங்கள்....
|
#7
|
|||
|
|||
ஆழ்ந்த அனுதாபங்கள் - என்னைக் மிகவும் கவர்ந்த அம்மா நடிகை. அவரின் ஆத்மா சாந்தி அடைய எனது பிரார்த்தனைகள்.
|
#8
|
||||
|
||||
ஆரம்ப காலத்தில் சுஜாதாவின் அழகு ஒரு குடும்பப் பெண்ணின் அழகாக மிளிர்ந்தது! பின்னாட்களில் எல்லாக் கதாநாயகர்களுடனும் நடித்தார்! பிறகு அம்மா நடிகையாகப் பல படங்களில் உணர்ச்சியுடன் நடித்தார்!
அவர் மறைவுக்கு வருந்துகிறேன்! சுஜாதா ஆன்மா சாந்தி பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்! |
#9
|
||||
|
||||
இது தமிழ் சினிமா உலகத்திற்கு இழப்பு. ரசிகர்களாகிய நாமும் ஒரு நல்ல நடிகையை இழந்து விட்டோம்! அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டிக் கொள்வோம்!
__________________
ராசு |
#10
|
|||
|
|||
நடிகர்களில் சிவாஜி போல நடிகைகளில் சுஜாதா மிகவும் ஈடுபாட்டுடன் நடிப்பார் முகபாவனை, குரல் என்பன காட்சியை தெளிவாக நமக்கு காட்டும்..
அவரின் மறைவு தமிழ் ரசிகர்களுக்கு கவலை தரும் ஒன்று. அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம் |
Tags |
சுஜாதா , நடிகை , பிரபல , மரணம் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|