<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #21  
Old 28-09-10, 11:29 AM
mrwhite mrwhite is offline
User inactive for long time
 
Join Date: 04 Sep 2010
Posts: 112
My Threads  
வணக்கம் முதிர் கன்னி,
நான் இத்தளத்தின் புதிய உறுப்பினர்,
தங்களின் இப் பணி இன்னும் பல காலங்கள் தொடர
வேண்டும் ஈன வேண்டுகிறேன்
நன்றி
அன்புடன்
Reply With Quote
  #22  
Old 03-10-10, 05:30 PM
muthirkanni muthirkanni is offline
2024 New Member, Not Yet Activated

Awards Showcase

 
Join Date: 29 Aug 2008
Posts: 1,924
iCash Credits: 73,706
My Threads  
அனைவர்க்கும் என் நன்றி கலந்த வணக்கம்................................

Quote:
Originally Posted by மீனாமீனா View Post
இன்று இரண்டாண்டுகள் முடிந்து மூன்றாவது ஆண்டு துவங்கும் முதிர்கன்னியை வாழ்த்துவோம் வாருங்கள்.
இந்த இரண்டு ஆண்டுகளில் காமலோகதிற்கு செய்த தொண்டு எவராலும் மறக்க முடியாது. 1000 திற்கும் மேற்பட்ட பதிவுகள் மிக சிறந்த கதைகள் ஐந்து அவார்ட்கள் என கலக்கும் . முதிர்கன்னியை வாழ்த்துவோம் வாருங்கள்
தோழர். மீனா,

கற்பனையிலும் எழுத்தாற்றலிலும் ஜாம்பவான்கள் நிறைந்த தளம் நம் காம லோகம்.

அன்பும் பண்புமாக அனைவர் எழுத்தையும் உரசிப்பார்த்து, கருத்தளிக்கும், விமரிசிக்கும், வல்லமை பொருந்திய நட்புக்கூட்டத்தால் ஜீவனோடு வாழும் தளம் நம் காமலோகம்.

இதில் என்னையும் நினைத்து வாழ்த்த வந்த உங்களுக்கு முதற்கண் என் நன்றி.

இவ்வளவு நாளும் மெளனமாக இருந்தேன். ஓய்வில்லை (அதுவும் உண்மையான ஒரு காரணமாயினும்) என்ற காரணத்தை இங்கு கூற மாட்டேன்.

முக்கியமான காரணம் இந்த மீனா மீனா யார் என்பதே என் நன்றி கலந்த வியப்பான குழப்பம்.

ஆரம்பத்தில் என்னை தைரியமூட்டி, வழிகாட்டிய சிலருள் ஒருவரா, என் தனிப்பட்ட நன்றிக்கு உரிய ஒருத்தரா என்பதே என் சிந்தனையாக இருந்தது.

இந்த கண்ணாமூச்சிக்கும் ஒரு முடிவு வராதா என்றே காத்திருந்தேன். இன்னமும் குழப்பம் நீங்கியபாடில்லை.

மீனா,

நீங்கள் முன்னம் வேறு எந்த பெயரில் இருந்திருந்தாலும், உங்கள் அன்புக்கு என் மனமார்ந்த நன்றி.

இதற்கு மேலும் பதில் தராமல் காலம் தாழ்த்தினால், இங்கு வந்து என் மீதான, பரிவையும் அக்கறையையும் அன்போடு வெளிப்படுத்தி இருக்கிற நல்ல ஆத்மாக்களை நான் அவமதித்த மாதிரி ஆகிவிடும் என்றே என் மெளனம் கலைகிறேன்.

MACHAN
சீரிய படைப்பு என்கிறார் மச்சான். காக்கைக்கு தன் குஞ்சும் ................ என்ற இவரது அன்புக்கு என் நன்றி.

maja2011
நானும் சிலருக்கு முன் மாதிரியாய் இருக்கிறேன் என்ற - என்னால் ஏறக முடியாத - வாழ்த்தை கொடுக்கும் அன்பு மஜாவிற்கு என் நன்றி

oolvathiyar
ஓள் வாத்தியார். வாத்தி என பலராலும் அன்போடு குறிப்பிடப்படும் என் பெருந்தலைவர்.

நம் தளத்தில் பன்முகம் காட்டும் இவர் வேகம் ஒருபுறம், மதிப்புறு தோழர். அசோ அவர்களில் இருந்து என் அருமைத்தோழர். நகைச்சுவை துணுக்கு பேரரசன். மரியாசீர் வரை இவரை படுத்தும் பாடு மறுபுறம் என இவரது பொறுமை, சகிப்புத்தன்மை, எதையும் அன்போடு ஏற்று அல்லது புறம் தள்ளி நடைபோடும் உறுதி.......... இன்னமும் சொல்லிக்கொண்டே போகலாம், அத்தனை அம்சங்கள் நிறைந்த இவர் தன்னைத்தானே வயசானவர் என்று சொல்வதை............. நம்பித்தான் ஆகவேண்டும்.

என் கதைகளில் காணப்படும் மன்னிக்க, காணப்பட்ட - மனோத்துவ மருத்துவத்தை - உணர்ந்து பாராட்டும் இவருக்கு என் சிரம் தாழத்திய வணக்கம்.

asho
முன்னால் வரமாட்டார். ஆனால் எலக்ட்ரானிக் கண்ணோடு எங்கிருந்தாலும் நம்மை கண்காணித்துக்கொண்டே இருப்பார். என் மதிப்பிற்குறியவர்.

இங்க வந்தும் வாத்தியை மறக்காமல் (வாத்தி ஜொள்ளர் என்பதை தன்னை மறந்து பதிவு செய்துள்ளதை கண்டு சிரிப்பு வருகிறது.) என வாரிவிடும் இவர்களுக்கிடையேயான - லாரல் - ஆர்டி நட்பை எனக்கு நிறைய பிடிக்கும். அவரே சொன்னதுபோல, மறைந்திருந்தே வாழ்த்தும் இவருக்கு என் அன்பான நன்றி.

எந்திரன்
நான் இன்னம் பல சாதனைகளை படைக்க வாழ்த்தும் தோழர். எந்திரன் (ஊலகம் முழுவதும் அதிர்கிறதாமே) அவர்களுக்கு என் அன்பான நன்றி.

pintoo3
என் எழுத்தின் சொல் வளத்தையும், களத்தையும் உணர்ந்து பாராட்டும் தோழர், - இம்மாத சவால் ராஜா - பிண்டூ அவர்களுக்கு என் அன்பான நன்றி.

Xman
ஆயிரம் பதிவுகளிலேயே ஐந்து அவார்ட் வாங்கி எழுத்து திறமையை லோகம் அறிய செய்த முதிர்கன்னிக்கு என் வாழ்த்துக்கள் என வாழ்த்தி, நான் பின்னூட்டமிடாததையும் வேண்டுகோளாய் சுட்டிக்காடும் அன்பர், எக்ஸ்மேன் அவர்களுக்கும் நன்றி

vsig
என்றும் விக்டர்.....
என் மீது - என் குறைகளையும் தாங்கி - அன்பு பாராட்டும் அன்பர். மதிப்புறு விக்டர். காக்கைக்கு தன் குஞ்சும்............. என்பதுபோல, இவரது அன்பான பாராட்டுக்கு நன்றி
mariaasir
காமத்துணுக்கு பேரரசு இவர். பல துணுக்குகள், காமத்தின் நுணுக்கத்தை, சுவாரசியத்தை, அவலத்தை, பல நேரங்களில் இவரது கற்பனைத்திறத்தின் வல்லமையை பறை சாற்றிக்கொண்டு இருக்கின்றன. தொடர்ந்து - நான் எந்த பின்னூட்டம் அளிக்காத போதும்- அன்பு பாராட்டும் மரியாசீர் அவர்களுக்கு என் நன்றி.

gemini
ஒன்றே செய், நன்றே செய் – அதை இன்றே செய் - எனும் நல்ல கருத்தை தன் கோட்பாடாக கொண்டுள்ள ஜெமினி அவர்களுக்கு என் நன்றி.

sakthim
தளத்துக்கு பல நல்ல படைப்புகளை கொடுத்துக் கொண்டு இருப்பவர் என வாழ்த்தும் சக்திம் அவர்களுக்கு அவர்களுக்கு என் நன்றி.

லலிதாதாசன்
தோழர். விக்டர். போல உள்ளார்ந்த அன்புடையவர். சூழ்நிலையின் கைதியான என் நிலையை அனுபவபூர்வமாக (சற்றே சலிப்போடு) உணர்ந்தும் என் மீது தொடர்ந்து அன்பு பாராட்டும் அன்புறு.தோழர். லலி அவர்களுக்கு என் நன்றி.

தமிழா
என் எழுத்துக்களை தொடர்ந்து கவனித்து விமரிசிக்கும் அன்பர் தமிழா அவர்களுக்கு என் நன்றி.

kazuthaipuli
என் நன்பர்கள் வட்டத்தில் இருக்கும் வெகு சிலரில் இவரும் ஒருவர், என்று என்னையும் நட்பு வட்டத்தில் இணைத்திருக்கும் அன்பர் கழுதைப்புலி அவர்களுக்கு என் நன்றி.

பச்சி
தோழர். பச்சி. இவரை நினைக்கும்போதே எனக்கு குற்ற உணர்வாக இருக்கும். தானே முன் வந்து உதவ முனைந்த அன்பர் இவர். பலமுறை உதவிக்கரம் நீட்டியும் நான் என் கரத்தை நீட்டவில்லை. அதையும் பாராட்டாது என்மீது இவர் கொண்டுள்ள அக்கறை அளப்பறியது. இவரது அன்புக்கும் சேர்த்து என் நன்றி.

RasaRasan
ஏற்கெனவே எழுதிய மாதிரி, எல்லோரும் நல்லவரே, தாம்பத்திய உறவு புரிதலான அன்போடும், இசைவான காமத்தோடும், நிலைக்க வேண்டும் என்பதே என் நிலைப்பாடு. இதை உணர்ந்து பாராட்டும் தோழர். ராசராசன் அவர்களுக்கு என் நன்றி.

bedroom_salak

நெடுநாள் ஆதரவாளர். தோழர். பெட்ரூம் சலக் அவர்கள். அவர்களுக்கு என் நன்றி. என் கதைகளில் காணும் சமூக கண்ணோட்டத்தை உணர்ந்து பாராட்டும் இவருக்கு என் நன்றி.

mouse1233
அவரே சொன்னதுபோல, அலாதி பிரியத்துடன் பாராட்டும் மெளசார் அவர்களுக்கு என் நன்றி.

mrwhite
புதியவராயினும், அன்போடு வந்து என்னையும் பாராட்டும் தோழர்.மிஸ்டர் ஒயிட் அவர்களுக்கு என் நன்றி.

மதிப்புறு தங்கர்.சி
அவர் இங்கே வந்து வாழ்த்தவில்லையாயினும் அவர் அன்பையும் ஆதரவையும், என்னை அவ்வப்போது தட்டிக்கொடுத்தும், அமைதிப்படுத்தியும் அன்பு பாராட்டிய ஒரு ஆத்மாவை நான் மறக்க முடியாது.

நான் என்றென்றும் குறிப்பிட்டது போல, என் ஆசான். மதிப்புறு தங்கர்.சி அவர்களுக்கும் என் நன்றி.

எங்கிருந்தாலும் அவர் வாழ்வில் எல்லா வளங்களையும் பெற்று இல்லமும், சுற்றமும் நட்பும் சூழ பல்லாண்டு வாழவேண்டும் என்ற் என் பிரார்த்தனையோடு அனைவர்க்கும் என் நன்றி கலந்த வணக்கம்.

பிரியங்களுடன்,
முதிர்கன்னி
Reply With Quote
  #23  
Old 05-10-10, 01:09 AM
மீனாமீனா மீனாமீனா is offline
User inactive for long time
 
Join Date: 07 Nov 2006
Posts: 4
My Threads  
முதிர்கன்னி அவர்களே நீங்களாக கேட்கட்டுமே என்று தான் தனி மடல் கூட அனுப்பவில்லை . உண்மையில் நான் உங்கள் ரசிகன் .எனக்கும் சேர்த்து எல்லோர்க்கும் நன்றி சொன்ன உங்களுக்கு என் நன்றி நன்றி

Last edited by மீனாமீனா; 05-10-10 at 01:34 AM.
Reply With Quote
  #24  
Old 05-10-10, 01:58 AM
muthuveeran muthuveeran is offline
User inactive for long time
 
Join Date: 09 Nov 2006
Posts: 1,725
My Threads  
பெயர்தான் முதிர்கன்னியே தவிர படைப்புகள் அனைத்தும் இளமை ததும்பும்படியே உள்ளது மேலும் யதார்த்தம் அவர் கதைகளில் இழையோடுவதை காணலாம். எழுத்துக்களில் அதீதமான வலிமை தென்படும்...அவரது படைப்புகள் மீண்டும் படிக்கத் தூண்டுபவை...
Reply With Quote
  #25  
Old 05-10-10, 02:08 AM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2008
Location: (மதுரை) சவுதி அரேபியா
Posts: 9,255
My Threads  
லேட்டா வந்ததற்கு சாரி முதிர்கன்னி! 2ம் ஆண்டு முடிந்து 3ம் ஆண்டில் நுழைந்து, அதுவும் 5 அவார்டுகளுடன், மென்மேலும் சாதனை புரிய வாழ்த்துகிறேன்.

திரி தொடங்கியதற்கு நன்றி மீனாமீனா!
Reply With Quote
  #26  
Old 05-10-10, 02:24 AM
oshoviji oshoviji is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 06 Mar 2008
Location: பெங்களூர்.
Posts: 5,560
My Threads  
உணர்ச்சிப்பெருக்கான எழுத்துக்களுக்கு சொந்தக்காரரான முதிர்கன்னியின் மூன்றாமாண்டு இனிதாக இன்னும் பல கதைகளை எழுதும் ஆண்டாக அமைய வாழ்த்துகள்.

இவரின் எழுத்துக்களை வாசிக்கும்போது ரமணிச்சந்திரனின் படைப்புகளை படிப்பது போலவே இருக்கும். ராமனிச்சந்திரனைப்போலவே கதைகள் மேல் கதைகளாக எழுதிக்கொண்டிருப்பவர். மூன்று நட்சத்திர எழுத்தாளர் விருதுகளுக்கு சொந்தக்காரர் என்பதில் இருந்தே இவரின் படைப்புகளின் தரத்தை உணர்ந்துக்கொள்ளலாம்.

ஒருவருடம் எழுதியதுமே எழுத தோன்றாமல் சோர்ந்துவிடும் படைப்பாளிகளின் நடுவில் தொடர்ச்சியாக எழுதும் இவரின் ஆர்வத்திற்கு ஒரு சல்யூட். பின்னூட்டங்கள் வருகின்றனவா இல்லையா என்றெல்லாம் யோசிக்காமல் எழுதுவது மட்டுமே என் பணி என்று எழுதும் ஆச்சர்யமான படைப்பாளி.

அசோ இவரின் படைப்பு ஒன்றில் பதித்திருப்பார். முதிர்கன்னி தளத்துக்கு வரும்போதெல்லாம் கதைகளுடனே வருவார் என்று. அது சத்தியமான உண்மை.

இன்னும் பல்லாண்டுகள் இப்படியே தொடர்ந்து நீங்கள் எழுதவேண்டும் என்று வேண்டுகிறேன்,வாழ்த்துகிறேன்.
Reply With Quote
  #27  
Old 05-10-10, 08:41 AM
umameena umameena is offline
User inactive for long time
 
Join Date: 20 Sep 2010
Posts: 1,355
My Threads  
பாராட்டுக்கள் - உங்களின் சேவை தொடர என் இனிய வாழ்த்துக்கள்
Reply With Quote
  #28  
Old 05-10-10, 09:03 AM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Posts: 10,455
My Threads  
முதிர்கன்னியின் 1000 மாவது பதிவிற்கும் அவரின் அவார்டுகளுக்கு வாழ்த்துகள்.
முதிர்கன்னியின் எழுத்தில் ஒரு பரிவு இருக்கும் அது எனக்கு பிடித்தது என்று சொல்லலாம். மற்ற எந்த கதையிலும் பார்த்திரமுடியாத பெண்ணியம் இதில் உண்டு.

இரண்டான்டுகளில் அதிக பதக்கங்களை வாங்கிய பெருமையுடையவரான மு.கன்னியை பாராட்டுகிறேன்
Reply With Quote
  #29  
Old 05-10-10, 12:35 PM
Mreena Mreena is offline
User inactive for long time
 
Join Date: 22 Sep 2010
Posts: 1,450
My Threads  
முதிர்கண்ணியின் காமலோக சேவைக்கும் அவர் பெற்றிருக்கும் எவார்ட்டுகளுக்கும் எனது வாழ்த்துக்கள். இன்னும் பல படைப்புக்களைத் தந்து எங்களை மகிழ்விக்குமாரு பணிவுடன் வேண்டுகின்றேன்.
Reply With Quote
  #30  
Old 06-10-10, 10:22 AM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 166,626
My Threads  
Quote:
Originally Posted by muthirkanni View Post
பச்சி
தோழர். பச்சி. இவரை நினைக்கும்போதே எனக்கு குற்ற உணர்வாக இருக்கும். தானே முன் வந்து உதவ முனைந்த அன்பர் இவர். பலமுறை உதவிக்கரம் நீட்டியும் நான் என் கரத்தை நீட்டவில்லை. அதையும் பாராட்டாது என்மீது இவர் கொண்டுள்ள அக்கறை அளப்பறியது. இவரது அன்புக்கும் சேர்த்து என் நன்றி.
குற்ற உணர்வெல்லாம் வேண்டாம் நண்பரே. விரைவில் கரம் நீட்ட முன்வந்தீர்கள் என்றால் சந்தோசமே.

Quote:
Originally Posted by muthirkanni View Post
மதிப்புறு தங்கர்.சி
அவர் இங்கே வந்து வாழ்த்தவில்லையாயினும் அவர் அன்பையும் ஆதரவையும், என்னை அவ்வப்போது தட்டிக்கொடுத்தும், அமைதிப்படுத்தியும் அன்பு பாராட்டிய ஒரு ஆத்மாவை நான் மறக்க முடியாது.

நான் என்றென்றும் குறிப்பிட்டது போல, என் ஆசான். மதிப்புறு தங்கர்.சி அவர்களுக்கும் என் நன்றி.

எங்கிருந்தாலும் அவர் வாழ்வில் எல்லா வளங்களையும் பெற்று இல்லமும், சுற்றமும் நட்பும் சூழ பல்லாண்டு வாழவேண்டும் என்ற் என் பிரார்த்தனையோடு அனைவர்க்கும் என் நன்றி கலந்த வணக்கம்.

பிரியங்களுடன்,
முதிர்கன்னி
உங்க மெசேஜை நண்பர் தங்கருக்கு சேர்த்தாச்சு.. அவரது நன்றிகளை தெரிவித்தார். விரைவில் அவரே வருவார்.

தங்கர் அவர்கள் தொடர்ந்து தளம் வரவில்லையென்றாலும் அவரை நாங்களெல்லாம் மறக்கவில்லை தான். அவரை ரொம்பவே மிஸ் பண்றோம் என்பதும் மறுக்க முடியாது. ஆனால் நீங்கள் அவர் மேல் வைத்திருக்கும் அன்பு, மரியாதையை நினைத்து தங்கருக்காக நானும் பெருமை படுகிறேன். உங்களையும் பாராட்டுகிறேன்.

இதுதான் லோகமும், உலகமும்.. நாம் நடந்து கொள்வதை பொறுத்து (நாம் இல்லையென்றாலும்) நம்மை நினைத்துப்பார்த்து 'நாலு பேர் நல்லதா' பேசுனாங்கன்னா அதுக்கு மேல என்னங்க வேணும்...
Reply With Quote
Reply

Tags
முதிர்கன்னியை , வாருங்கள் , வாழ்த்துவோம்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 07:55 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,