<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
நி: 0039 - ஏப்ரல் '09 மாத சவால் கதைப் போட்டி முடிவுகள்
நண்பர்களே..! நண்பிகளே..!!
ஏபரல் '09 மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான sutsha அவர்கள் எழுதி, முடிக்கப்படாமல் நிற்கும் கதையான " மாற்றான் தோட்டத்து மல்லிகை - பாகம் 1" & 2 என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டு, இந்தக்கதைகள் இரண்டும் காமக்கதைகள் பகுதியில் ஸ்டிக்கியாக வைக்கப்பட்டது, கதைக்கு தொடர் எழுத சொல்லி ஒரு சவால் விடப்பட்டது. அதன் அறிவிப்பு போட்டிக் களம் பகுதியில் உள்ளது. இதற்கு நமது உறுப்பினர்களில் 5 பேர் இந்த முறை ஆர்வமாகக் கலந்து கொண்டு அதில் 5 பேரும் தொடர்ந்து முடித்தனர் அந்தக்கதைக்கு தொடர்ச்சியை எழுத சொல்லி சவால் விடப்பட்டது. அதில் கதைகள் பட்டியலிடப்பட்டு, அதில் சிறந்த ஒரு தொடர்ச்சியை தேர்ந்தெடுக்க வாக்கெடுப்பு வைக்கப் பட்டது, அதை இங்கே காணலாம். இந்த மாத போட்டியில் மொத்தம் 5 பேர் கலந்து கொண்டது, மகிழ்ச்சியாக இருந்தது ஏனென்றால் சென்ற மாதம் 3 பேர் மட்டுமே கலந்து கொண்டார்கள். இது மிகவும் கவலைப்பட கூடிய விசயம், அடுத்தடுத்த போட்டியில் இன்னும் கூடுதலாக பங்கேற்பீர்கள் என்று எதிர்பார்க்கிறோம். கதைகளின் தொடர்ச்சி தந்த ஐவருக்கும் மிக்க நன்றி மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றி..! இந்த மாதப் போட்டியின் இறுதியில் muthirkanni அவர்கள் 42 வாக்குகள் பெற்று முதலிடத்தை பிடித்து, இந்த மாதத்தின் காமலோக சவால் ராணி-யாக இரண்டாவது முறையாகத் தேர்வு பெறுகிறார். அவருக்கு எங்கள் வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள் muthirkanni. வாக்குகள் கிடைத்த விவரம். 1) muthirkanni 42 வாக்குகள் (5 அத்தியாயங்கள்)muthirkanni 16 வாக்குகள் அதிகம் பெற்று முதல் இடத்தை அதிக வாக்கு வித்தியாசத்தில் பிடித்திருக்கிறார். வெற்றி பெற்ற உறுப்பினர் muthirkanni-க்கு எங்கள் வாழ்த்துக்கள். அவர் பரிசாக இந்த மாத சவால் ராணிக்கான மெடலையும், 3000 ஐகேஷ் வெகுமதியும் பெறுகிறார். அவர் முன்னரே தங்க வாசல் உறுப்பினராக இருந்து வருகிறார். இரண்டாம் இடம் பெற்ற smdhabib மற்றும் போட்டியில் கலந்து சிறப்பித்த cembi அவர்கள் இருவரும் இந்த சவால் போட்டியிலும் பங்கேற்றிருக்கிறார்கள். இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நண்பர்களுக்கு உற்சாகம் அளித்து வரும் இவர்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை. இவர்கள் இருவருக்கும் எங்கள் சிறப்பு வாழ்த்துக்கள், நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படுகிறது வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் பாராட்டுக்கள். நால்வருக்கும் 200 இபணம் வழங்கப்படுகிறது. இந்த போட்டிக் கதைகளை படித்து உற்சாகத்துடன் வாக்கு செலுத்தி படைப்பாளிகளை ஊக்கப் படுத்திய உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள். நன்றி...
__________________
|
#2
|
|||
|
|||
வெற்றிப்பெற்ற முதிர்கன்னிக்கு என் வாழ்த்துகள். ஹபிப் மற்றும் ஜெய் அவர்களுக்கும் என் வாழ்த்துகள். கலந்துகொண்ட முதல் சவாலிலே நல்ல ஓட்டுக்கள் பெற்று 3ம் இடம் வந்த ஜெய் அவர்களுக்கு என் சிறப்பு வாழ்த்துகள். கலந்துகொண்ட அனைவருக்கும் என் வாழ்த்துகள்.
போட்டிகளை திறம்பட நடத்திய அசோ அவர்களுக்கு என் வாழ்த்துகள் மற்றும் நன்றிகள். |
#3
|
|||
|
|||
இந்த மாத சவால் ராணியாக வெற்றி பெற்ற முதிர்கண்ணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். போட்டியில் பங்கு கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
|
#4
|
|||
|
|||
சவால் ராணி முதிர்கன்னிக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்...!
என் கதைக்கு வாக்களித்து, என்னை தொடர்ந்து சவாலில் பங்கு பெற ஆதரவளித்துக்கொண்டு இருக்கும் முகம் தெரியாத உள்ளங்களே..! நீங்கள் வாழ்க வாழ்க என்று வாழ்த்துகிறேன்..! ராஜ், சமிப காலமாக ஆக்டிவாக இருக்கிறார். பங்கெடுத்த முதல் சவாலிலேயே 16 வாக்குகள். பாராட்டுகள் நண்பரே... சிறப்பான பாராட்டுக்கள்...! சவாலில் பங்குகொண்ட நண்பர்கள் செம்பி மற்றும் சுமா இருவ்ரையும் மனதார வாழ்த்துகிறேன்...! எதிர்பாராமால் இந்த சவாலில் 5 பேர் கலந்துக்கொண்டது... 104 நண்பர்கள் வாக்களித்தது.. எல்லாமே ஆச்சிரியமாக இருக்கிறது. அதே நேரத்தில் சந்தோசமாகவும் இருக்கிறது...! நிர்வாகத்தினருக்கு எனது தனிபட்ட மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன்...! அன்புடன் ஹபிப் |
#5
|
|||
|
|||
போட்டியில் வெற்றி பெற்று சவால் ராணியாகிய முதிர்கன்னிக்கு எனது பாராட்டுகள்
|
#6
|
|||
|
|||
சவால் ராணி பட்டத்தை மீண்டும் வென்றிருக்கும் சவால்ராணி முதிர்கன்னிக்கு வாழ்த்துக்கள். படைப்பாளிகளுக்கு பெரும் சவாலாக இருக்கும் அவரைக் காண பெருமையாக இருக்கிறது.
நிர்வாக சவால் சாதனை எழுத்தாளர் ஹபீப் மற்றும் முதல் சவால் போட்டியிலேயே குறிப்பிடத்தக்க வாக்குகள் பெற்று தனது இருப்பை நிலைநிறுத்தி இருக்கும் ஜெய்க்கும் வாழ்த்துகள்... நவநாகரீக மாந்தர்களையும், வித்தியாசமான 'பேண்டசி'களையூம் தனது கதைகளில் பதிவு செய்து காட்டும் நண்பர் செம்பிக்கும், புதிதாக சவால் கதை போட்டியில் பங்கேற்று அருமையான படைப்பினை நல்கிய சுமா அவர்களுக்கும் பாராட்டுகள்... நிறைய நண்பர்கள் வாக்களித்து இருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. நிர்வாக சவால் போட்டிகளை திறம்பட நடத்தி முடித்திருக்கும் நண்பர் அசோவிற்கும் பாராட்டுகள்... |
#7
|
||||
|
||||
இரண்டாம் முறையாக நிர்வாக சவாலில் வெற்றிபெற்று சவால் ராணியாகியிருக்கும் முதிர்கன்னிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஒவ்வொரு மாதமும் சவால் போட்டியில் தவறாமல் பங்கேற்று சிறப்பான தொடர்ச்சியை தந்து கொண்டிருக்கும் நண்பர் ஹபீப் இந்தமுறை இரண்டாவது இடத்தை பெற்றதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் முதல்முறை பங்கேற்றாலும் சிறப்பான தொடர்ச்சியை தந்து மூன்றாமிடம் பெற்ற நண்பர் ஜெய் அவர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள். அடுத்தடுத்த இடங்களில்வந்த நண்பஎ செம்பி, சுமா ஆகியோருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். சிறப்பான ஒரு சவால் போட்டியை நடத்திமுடித்த அசோவுக்கு வாழ்த்துக்கள். |
#8
|
||||
|
||||
சவால் ராணியின் மகுடத்தில் இன்னும் ஓர் கோகினூர் வைரம் !
தோழி muthirkanni க்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள் ! கடின உழைப்பிற்கு, திறமைக்கு கிடைத்த பரிசு ! மற்றும் போட்டியில் கலந்து கொண்ட நண்பர்கள் smdhabib , itsjai , cembi,suma ஆகியோருக்கும் பாராட்டுக்கள் ! மீண்டும் அடுத்த மாத சவாலில் கலந்து வெற்றி வாகை சூட வாழ்த்துக்கள் ! அசோ மற்றும் நிர்வாக நண்பர்களின் கடின முயற்சியில் 104 வாக்குகள் பதிவு செய்யப்பட்டு சவால் போட்டியை மகத்தான வெற்றியாக மாற்றியதற்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள் ! |
#9
|
|||
|
|||
ஹேய்!!!! நல் வாழ்த்துக்கள். உங்களுடைய கதையின் போக்கும், அழகான நடையும், பிழையில்லாத் தமிழும் தான் உங்களின் வெற்றிக்குக் காரணம். தொடருங்கள். மற்ற இரு நண்பருக்கும் என் வாழ்த்துக்கள். அடுத்த வெற்றி உங்கள் கையில் அது வெகு தூரத்தில் இல்லை.
|
#10
|
|||
|
|||
சவால் ராணியாக இரண்டாம் முறை தேர்ந்தெடுக்கப்பட்ட முதிர்கன்னிக்கு வாழ்த்துக்கள்.
அடுத்த இடங்களில் வெற்றி பெற்ற தோழர் ஹபீப் மற்றும் ஜெய்க்கு வாழ்த்துக்கள் |
|
|
|