Quote:
Originally Posted by dreamer
நீங்கள் தெரிவித்த ஆலோசனைகளும் செய்த பிரார்த்தனைகளும் வீணாகவில்லை. என் உடல் நலத்தில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டதனால் மச்சானின் வேண்டுகோளைத் தட்டமுடியாமல் சிறுகச்சிறுக எழுதத் தொடங்கி, நாற்பத்தைந்து நாட்களில் மூன்று கதைகள் எழுதிப் பதித்துள்ளேன்.
|
நீங்கள் நலமடைந்ததற்கு உதவி புரிந்த கடவுளுக்கும் மற்றும் பிரார்த்தனை செய்த நம் தள நண்பர்களுக்கு நன்றிகள்.
Quote:
Originally Posted by dreamer
போட்டிக்கு வந்த எல்லாக் கதைகளுக்கும் பின்னூட்டமும் இட்டுள்ளேன். இவை முழுக்கமுழுக்க உங்கள் நல்லெண்ணங்களாலேயே நிகழ்ந்தன. நன்றி.
|
உங்கள் இந்த கருத்தை படித்த பின் எனக்கு குற்ற உணர்வு எழுந்ததேதேன்னவோ நிஜம், உங்கள் உடல்நிலை சிறிது சரியில்லாத நிலையிலும் நீங்கள் வாசகர் சவாலில் பங்கு கொண்ட போது நம்மால் கலந்து கொள்ள முடியவில்லையே என்று சிறு வருத்தம். இதற்கு காரணம் நான் அலுவலகத்தில் கணினி உபயோகிப்பதால் அதில் அதிகம் நேரம் ஒதுக்க முடிவதில்லை. இப்போது ஒரு மடிக்கணினி வாங்கலாம் என்று முடிவு செய்து விட்டேன். அதன் பின்பு நானும் அனைத்து போட்டிகளிலும் கலந்து கொள்வேன் என்று உறுதி அளிக்கிறேன்.