<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#41
|
|||
|
|||
வணக்கம் ட்ரீமர் அண்ணா. உங்களின் உடல் நலத்தை பற்றி நண்பர் ராஜேஷ் அவர்கள் மூலம் தொலை பேசியில் கேட்டு அறிந்தேன். நம் தளத்தில் உங்கள் பதிவுகளின் மூலம் எண்ணற்றோரை நீங்கள் நண்பராக கொண்டுள்ளீர்கள். என் மனதிலும் நீங்கா இடம் பெற்றுள்ளீர்கள். உங்களை நண்பராய் கொண்டமைக்கு பெருமை படுகிறேன். கழிந்த 2 வருடங்களாக எந்தவொரு புதிய திரி வந்தாலும் உங்களின் தெளிவான பதில் இருக்கும்.
க*ழிந்த வருடம் சென்னை வந்த போது உங்களையும் மற்ற நண்பர்களையும் சந்திக்க எண்ணம் கொண்டிருந்தேன். ஆனால் அவசரம்மாக சென்னை வந்து போனதால் முடியவில்லை. தற்போதைய உங்கள் உடல் நிலையை கருத்தில் கொண்டு நீங்கள் ஓய்வு எடுப்பதுதான் அவசியம். அதனால் லோகத்திற்கு அடிக்கடி வந்து உங்கள் கண் பார்வைக்கும் உடல் நலத்திற்கும் இன்னும் தொந்தரவு கொடுக்க வேண்டாம். மேலும் நல்ல மன அமைதியோடு இருக்கும் படி கேட்டு கொள்கிறேன். உங்களின் உடல் நலத்திற்காக நானும் தினமும் ஜெபிக்கிறேன். என்னை போன்ற லோக நண்பர்களின் பிரார்த்தனை உங்களுக்கு மன வலிமையையும், உடல் வலிமையும் நிச்சயம் தரும். உங்களை பற்றி அடிக்கடி நண்பர் ராஜேஷ் அவர்கள் மூலம் கேட்டு தெரிந்து கொள்கிறேன். மீண்டும் உடல் நலம் பெற்று வர இறைவனிடம் வேண்டி உங்களுக்காக காத்திருக்கிறேன். |
#42
|
|||
|
|||
அன்பு நண்பரின் உடல் நிலை பற்றிய தகவல்களை இப்பத்தான் படித்தேன்... விரைவிலே குணம் அடைந்து, முன்பு போல இங்கே வலம் வர,..விரைவாக குணமடைந்து, விரைவிலே வருவார்..
அவரை நேரிலே காணும் நண்பர்கள், அவருடைய உடல் நிலை பற்றி அவ்வப்போது, தகவலகளை தர வேண்டுகிறேன்.. |
#43
|
|||
|
|||
லோகத்தில் எனது மதிப்பிற்குரிய நண்பர்களில் ஒருவரும், என் மீது அன்பு கொண்டவருமான ட்ரீமர் அவர்களின் உடல் நலன் கவலை அளிப்பதாக இருந்தாலும்... விரைவில், அவர் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு நம்முடன் வழக்கம் போல் இந்த லோகத்தில் கலந்திருப்பார் என நம்புகிறேன். அவரது உடல் நலத்திற்காக வேண்டிக் கொள்கிறேன்.
__________________
|
#44
|
|||
|
|||
இந்த வயதில் இவ்வளவு உடல் உபாதைகள் இருந்தும் இதோ இன்றுக்கூட எனக்கு பின்னூட்டமிட்டு வாழ்த்தும் மனமுடைய ட்ரீம்மர் அவர்களை எண்ணும் போது ஆச்சர்யமாக உள்ளது..
உங்கள் உடல் நலமாக என்னுடைய பிரார்த்தனை. நான் சுமார் 12 வருடங்களாக என் பிரார்த்தனையில் எந்தக் கோரிக்கையும் வைப்பதில்லை இறைவனுக்கு நன்றி சொல்வது மட்டும்தான்.. இன்று எனக்கு உங்களைப் போல ஒரு நன்பர் கிடைத்ததுக்கு ஆண்டவனுக்கு நன்றியைத் தெரிவித்து உங்கள் உடல் நலமாக எனது கோரிக்கையையும் இறைவனிடம் வைக்கிறேன். |
#45
|
||||
|
||||
நண்பர் ட்ரீமர் அவர்களே..
மனம் தளர வேண்டாம். உங்களின் நல்ல மனதிற்கு விரைவில் குணம் அடைவீர்கள். உங்களின் வாழ்வில் உத்வேகம் பிரக்கட்டும். |
#46
|
|||
|
|||
உங்கள் உடல்நலம் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.
|
#47
|
|||
|
|||
மே முதல் தேதி பிற்பகல் என் கால்களின் வீக்கம் மிக அதிகமாக ஆகிவிட்டதாலும் மீண்டும் ஒரு முறை விழுந்து அடிபட்டுக்கொண்டதாலும் ஹோம் வார்டன் என் மகள் & மருமகனுடன் தொடர்பு கொண்டார். அவர்கள் உடனே வந்து என்னை வலுக்கட்டாயமாக மலர் ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் சென்று அட்மிட் செய்துவிட்டனர். அங்கு எல்லாவிதமான டெஸ்டுகளையும் செய்துவிட்டு சில ட்ரீட்மென்ட்டுகளை முடித்துவிட்டு இங்கு மேற்கொண்டு செய்துகொள்ளவேண்டிய ட்ரீட்மென்ட்டுகளையும் எழுதிக்கொடுத்துவிட்டு நேற்று (மே 04) பிற்பகல் இங்கு அனுப்பிவிட்டனர்.
அந்த ட்ரீட்மென்ட்டுகள் தொடர்வதால் இன்னும் சில தினங்களுக்கு என்னால் எந்த பின்னூட்டமும் போட இயலாது. சரியானபின் முடிந்த அளவு பின்னூட்டம் இட முயல்கிறேன். என் இயலாமைக்கு மன்னிக்கவும் |
#48
|
|||
|
|||
மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய அய்யா dreamer அவர்கள் உடல் நலம் பூரணமாகத் தேறி வர என்னுடைய மனமார்ந்த பிரார்த்தனைகள் !,
|
#49
|
|||
|
|||
Quote:
நீங்கள் பூரண குணமடைந்து மீண்டும் லோகத்தில் எங்களை குட்டி வழி நடத்த சீக்கிரமே வர ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். |
#50
|
|||
|
|||
முதலிலே உடல் நிலையை நன்கு கவனித்துகொள்ளுங்கள்..
மற்றதை பின்னாலே பார்த்துகொள்ளலாம்.. விரைவிலே குணமடைந்து,,விரைவாக நலம் பெறுவீர்கள்... |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|