<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
நிர்வாக உறுப்பினர் அசோவின் 9000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்! (updated: 02.03.13)
7000 பதிவையொட்டி ஆரம்பித்த திரி இந்த திரியுடன் இனைக்கப்பட்டது, அந்தப்பதிவு #36 ல் உள்ளது - அசோ
நம் காமலோகத்தில் அசோவை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது, எந்த ஒரு திரி புதிதாக தொடங்கினாலும் அதனை முதலில் பார்த்து சரியாக இருந்தால் அதற்கான பாராட்டுக் கருத்துக்களை தருவதிலும் தவறாக இருந்தால் பண்பாக சுட்டிக் காட்டுவதிலும் வல்லவர். நண்பர்களை வைத்து நகைச்சுவை கதை எழுதுவதாகட்டும், சித்திர காம சிரிப்புகளை பதிப்பதாகட்டும், கதம்பக் கதைகளை வெளியிடுவதாகட்டும் காமப்படங்களை/அசைப்படங்களை தருவதாகட்டும் எல்லாவற்றையும் தரமாகவும் , சிறப்பாகவும் தருவதில் முதன்மையானவர், இவரின் ஒவ்வொரு திரிகளும் மிகவும் பயனுள்ளவை. தெளிவான பின்னூட்டங்கள் பதிவதில் வல்லவர் அதனால் இவரை பின்னூட்டங்களின் சிகரம் என அழைத்தால் மிகப் பொருத்தமாக இருக்கும். கணினி சந்தேகம் கேட்க அசோவுடன் சாட் பண்ணும் வாய்ப்பு கிடைத்தது அப்போது இவரின் இன்னொரு அன்பான முகத்தை தெரிந்து கொண்டேன்.எந்தவொரு கணினி சந்தேகம் என்றாலும் அசோவிடம் கேட்டுத் தெரிந்துக் கொள்ளலாம், அதற்கான விளக்கங்களை தன் விரல் நுனியில் வைத்திருப்பவர். விதிமுறைகளை மீறிய திரிகளில் தன் நிர்வாக நடவடிக்கை மூலம் உறுப்பினர்களுக்கு கசப்பான மருந்தை தந்தாலும் அந்த மருந்து நல்லதையே விளைவிக்கும் என ஒவ்வொரு உறுப்பினர்களும் புரிந்துக் கொள்ளும் வகையில் சிறப்பாக செயல்படுபவர். அனைவரின் நண்பர் அசோவின் 5000 பதிவுகளும் அற்புத பதிவுகள் என்பதை இந்த நேரத்தில் நினைவு கூர்வதோடு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் வாழ்த்துக்களை சாதாரணமாக ஒரு வரியில் தெரிவிக்காமல் அசோவைப் பற்றி உங்களுக்கு தெரிந்ததை சொல்லி விளக்கமாக விரிவான வாழ்த்துக்களை தெரிவிக்குமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே, நீ நடந்தால் அதுவே பாதை. அன்பிற்காக என்றென்றும் ஹயாத். Last edited by asho; 17-02-10 at 12:23 PM. |
#2
|
|||
|
|||
என் மரியாதைக்கும் அண்புக்கும் உரிய என் பாசமிகு அண்ணன் அஷோவுக்கு என் மனம் நிறைந்த வாழ்துகள்.
அநேகமாக இந்த திரையை பார்வையிட வரும் சமயங்களில் அவர் நிச்சயம் "அம்பி அஷோ" வாக தான் வருவார். அதில் எனக்கு சந்தேகம் இல்லை... அதனால் என் அண்ணனை நன்பர்களே பயம் இல்லாமல் கொஞ்சூன்டு கலாய்க்கலாம்.. மனதில் அவர் எப்பொழுது வேன்டுமானாலும் "அன்னியன் அஷோ" வாக மாறலாம் என்ற நினைவுடன். உங்கள் லோக வாழ்க்கை மேலுல் மேலும் சிறக்க என் மனம் நிறைந்த வாழ்துகள். |
#3
|
||||
|
||||
இந்த திரியை நானே ஆரம்பிக்க வேண்டும் என என்னினேன் நீங்கள் முந்திக்கொண்டீர்கள்.
வாழ்த்துக்கள் ஆசோ அண்ணா. |
#4
|
|||
|
|||
காமலோகத்தில் நான் கண்ட ஒரு நடுநிலையான மனிதர்தான் அசோ. நிர்வாகப் பணிகளை சீராக செய்வதில் இவரையே நான் முதன்மைப் படுத்துவேன். அதைதான் நண்பர் ஹயாத் இந்தத்திறியின் தலைப்பாகவும் தந்துள்ளார்.
கண்டிப்பான அன்பான பன்பான மனித நேயம் மிக்க ஒரு நல்ல நண்பர்தான் அசோ. பொதுவாக அணைத்து புதிய உறுப்பிணர்களுக்கும் அவரது உதவி நிச்சியம் கிடைத்திருக்கும். என் வளர்ச்சியிலும் அவரது உதவியை பல தடவை பெற்றிருக்கின்றேன். உங்கள் உழைப்பு தொடர எனது வாழ்த்துக்கள். |
#5
|
||||
|
||||
அசோ இங்கே வந்த புதிதில் அவரின் சுறுசுறுப்பால் என்னை மிகவும் கவர்ந்தவர். என்னை ஆச்சர்யப்படுத்தியவரும் கூட அதே நேரம் அன்புக்கும் சொந்தக்காரர். ஹாயாத் குறிப்பிட்டதை போல் கணிணி சந்தேகங்களை தீர்க்கும் ஒரு மகா கில்லாடி. எப்போது சந்தேகங்களை கேட்டாலும் முகம் சுளிக்காமல் விளக்குவதில் ஒரு வள்ளல் என்று கூறினால் அது மிகை ஆகாது.
அவரிடம் நான் தொலைபேசியில் பேசும் போதெலாம் அவரின் அன்பான அனுசரனையான பதில்கள் ஒரு சகோதரனைபோல் இருக்கும். அவ்வளவு அன்யோன்யம் இருக்கும் அவரின் பேச்சில். அன்பின் சிகரம். அசோவால் இந்த 5000ம் பதிப்பு மட்டும் அல்ல இன்னும் பல ஆயிரம் பதிப்புகள் கொடுக்கமுடியும். அது ஒவ்வொவொண்றும் ஒரு விதத்தில் சிறப்பாக இருக்கும். நன்றி. ( ஹயாத் ஒரு வரியில் இல்லை என் பதிப்பு ஓகே. இன்னும் எழுத நினைத்தேன் அது காமமில்லா கதையாகிவிடும் ) |
#6
|
|||
|
|||
நம்மளுக்கு என்ன சந்தேகம்னாலும் அசோ அண்ணனுக்கு ஒரு மெஸேஜ் அனுப்புனாப்போதும் அடுத்த 5 நிமிஷத்துல நம்ம சந்தேகத்தை ரொம்ப எளிதா நாம புரிஞ்சிக்குற அளவுக்கு தீர்த்துடுவாறு.
அண்ணன் அசோ அவர்களுக்கு 5000 பதிப்புகளைத்தாண்டியதற்கு எனது வாழ்த்துக்கள். |
#7
|
|||
|
|||
5000 பதிப்புக்கள் கண்ட அசோ அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
தேவையான உதவிக்கு உடனுக்குடன் உதவுபவராகவும், நிர்வாக நடவடிக்கைகளில் துடிப்புடன் செயல்படுபவராகவும், பழகுதற்கு ஒரு நல்ல நண்பராகவும் நான் அசோ அவர்களை அடையாளம் காணுகிறேன். அவரின் பணி தொடர்ந்து சிறக்க வாழ்த்துகிறேன்.
__________________
Last edited by பச்சி; 20-12-08 at 12:05 PM. |
#8
|
|||
|
|||
5000 பதிப்புக்கள் கண்ட அசோ அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இவரிடம் வாங்கியது தான் என்னுடைய முதல் குட்டு......ஒரு கத்ரீனா கைபா இல்ல கரீனா கபூரானு தெரியலை அவங்களோட படம் ஒண்ணு இண்டர்நெட்டில் கிடைத்து நல்லா பளீர்னு தெரியுற மாதிரி அந்த படத்தை இங்கே பதித்தேன்.. அதனை இவர் இது ஒட்டு என்று என்னை குட்டினார்... அந்தத் திரியின் மூலம் அவருக்கு நண்பர் ஸ்மார்ட்மேன் அவர்களின் அன்பான ஒரு அறிமுகம் கிடைத்தது என்று என்னுடைய படைப்பாளிகள் திரியில் பதித்துள்ளார்.. மேலும் எனது தனிப்பட்ட முறையில் சில கணினி சந்தேகங்களையும் இவர் தெளிவு படுத்தி கொடுத்திகிறார்.. அவற்றிற்கு எல்லாம் இந்த நேரத்தில் ஒரு நன்றி பத்தாது.... ஆயிரம் நன்றிகளை கூறிக் கொள்கிறேன். பின்குறிப்பு: இப்போது கூட அவருக்கு ஒரு கணினி சம்பந்தமான சந்தேகத்தை இ-மெயில் அனுப்பி விட்டு வந்து தான் இங்கே இதனை டைப் செய்கின்றேன்.. ஆக அதுக்கும் சேர்த்து ஒரு நன்றிய போட்டிருவோம்.. |
#9
|
|||
|
|||
5000ம் பதிவு கண்ட அசோ அண்ணனுக்கு என் வாழ்த்துக்கள்.
5000ம் பதிவுகளும் தரமான பதிவுகள். ஒவ்வொன்றும் ரசனையுடனும், ரசிக்க கூடியவைகளாகவும் இருக்கும் தேவையான இடங்களில் நகைச்சுவைம் இருக்கும். இவருடைய படைப்புகள் அனைத்தும் தரம், மணம், சுவை நிறைந்ததாக இருக்கும். இவருடைய பதிவுகள் என்றால் ஓடி போய் பார்த்துவிடுவேன் அவ்வளவு ரசமான பதிவுகள். நண்பர்களின் திறமை அறிந்து அவர்களை ஊக்குவிப்பதிலும் அவருக்கு நிகர் அவரே. நண்பர்களுக்கு பிறருக்கு உதவி செய்வதில் இன்பம் காண்பவர். எனக்கு லோகத்திலும் கணிணியிலும் நிறைய உதவிகள் செய்திருக்கின்றார்.(இப்ப கொஞ்சம் பிஸியாக இருக்காங்க போலிருக்கு) அசோ அவர்களை வாழ்த்துவதில் பெருமை அடைகின்றேன், பெரு மகிழ்ச்சியடைகின்றேன். |
#10
|
|||
|
|||
திரு அஷோ அவர்களின் 5000வது பதிப்புக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். அவரின் பயணம் நம் காமலோகத்தில் இன்னும் தொலைதூரம்.
பெரும்பாலோர் கூறியது போல அஷோ அவர்கள் சில சமயம் கொடுக்கும் மருந்து கசப்பானதாக இருந்தாலும் அது தேவையான நல்ல விதமான முடிவையே கொடுத்துள்ளது. அதே சமயம் அரவணைப்பிலும் அவருக்கு நிகர் அவர் தான். அதிகம் கூறாமல் மீண்டும் வாழ்த்துக் கூறி மகிழ்ச்சியடைகின்றேன். |
Tags |
பதிவுகளுக்கு , வாழ்த்துக்கள் , கதாநாயகன் , அசோ , அசோவின் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|