<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
நடிகர் ரவிச்சந்திரன் காலமானார்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்த ரவிச்சந்திரன் 25.7.11 அன்று மாலை சென்னையில் காலமானார். சில காலம் அவர் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். 1964 ஆம் ஆண்டு வெளிவந்த காலஞ்சென்ற இயக்குநர் ஸ்ரீதர் அவர்கள் இயக்கிய காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது. பின்னர் தொடர்ச்சியாக அவர் நடித்த பல படங்கள் வெள்ளி விழா கொண்டாடியதை அடுத்து, வெள்ளிவிழா கதாநாயகன் என்று அன்புடன் அழைக்கப்பட்டார். நடிப்பு, நடனம், நகைச்சுவை ஆகிய மூன்றும் சரியான வீதத்தில் அவரிடம் இருந்தன. அது அவரது வெற்றிக்கு பெரிதும் உதவியது. அதே கண்கள், குமரிப்பெண், நான், மூன்றெழுத்து, உத்தரவின்றி உள்ளே வா என்று அவரது வெற்றிப் படங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். எம் ஜி ஆர், சிவாஜி, ஜெமினி போன்றவர்கள் ஆளுமை செலுத்திய காலத்திலும் கூட ஜெய்ஷங்கர், ரவிச்சந்திரன் ஆகியோர் தமது நடிப்பின் மூலம் தனியொரு இடத்தை பெற்றனர். மலையாள திரையுலகில் பிரபலமாக இருந்த நடிக்கை ஷீலாவை திருமணம் செய்து கொண்டார், ஆனால் இருவரும் பின்னர் பிரிந்தனர். காதலிக்க நேரமில்லை படத்தில் அவரது வசன உச்சரிப்பு, நடனம், நகைச்சுவை உணர்வு காலத்தை விஞ்சி நிற்கின்றன. அதே போல அதே கண்கள் படத்தில் திகிலுடன் கூடிய நடிப்பு, மெக்ஸிகன் நடனம், ஓ ஹோ எத்தனை அழகு இருபது வயதிலே, பூம் பூம் மாட்டுகாரன் வேலன் வராண்டி பாட்டு ஆகியவை என்றும் பசுமை. உத்தரவின்றி உள்ளே வா திரைப்படத்தில் ஜெமினி மகாலிங்கம், நாகேஷ் மற்றும் ரமாபிரபாவுடனான நடிப்பு அற்புதம். திரையுலகில் இளமை, செழுமை மற்றும் குறுப்புடன் கூடிய ஒரு கதாநாயகனாகவே திகழ்ந்தார் ரவிச்சந்திரன். திரையுலகில் மிகவும் அமைதியானவர் என்றும் அனைவரையும் மதித்து நடந்து கொள்பவர் என்றும் அறியப்பட்டவர்...சிறந்த நடிகராக விளங்கிய அவரால் ஏனோ சிறந்த இயக்குநராக பரிமளிக்க முடியாமல் போயிற்று.
|
#2
|
|||
|
|||
அதிர்ச்சியான செய்தி.
|
#3
|
||||
|
||||
ஷீலாவின் கணவர்... சமீபத்தில் ஏதோ ஒரு தமிழ் படத்தில் பார்த்ததாக ஞாபகம்.. ஹிந்திப் படத்தின் தழுவல்... தமன்னா ..... பரத்.. என்று நினைக்கிறேன்...
ரவிச்சந்திரன் ஆன்மா சாந்தி அடைய ப்ராத்திக்கிறோம் |
#4
|
|||
|
|||
அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுவோம்
|
#5
|
|||
|
|||
ஸ்ரீதர் அறிமுகம் செய்த ரவிச்சந்திரன் நன்றாக நடிப்பில் முன்னேறி தனக்கென்று ஒரு முத்திரையை பதித்தார் ! 67 வயது என்பது அப்படியொன்றும் அதிக வயது இல்லை. இன்னமும் உடல் நிலையை கவனித்து நீண்ட நாள் வாழ்ந்து இருக்கலாமே ! அவருக்கு என் வணக்கமும் அவரது குடுமபதினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களும் !
|
#6
|
|||
|
|||
நல்ல ஒரு நடிகர்..சமீபத்தில் அதே கண்கள்' திரைப்படத்தை பொதிகையில் ஒளிபரப்பினார்கள்
அருமையான நடிப்பு.. அவரின் மறைவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.. |
#7
|
|||
|
|||
அவரின் மறைவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்
|
#8
|
||||
|
||||
நல்ல ஒரு பழங்காலத்து நடிகர்.
அவருடைய ஆத்மா சாந்தி அடைய வேண்டிக்கொள்வோம்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#9
|
||||
|
||||
ரவிச்சந்திரன் ராஜஸ்ரீ(காதலிக்க நேரமில்லை), காஞ்சனா(உத்தரவின்றி உள்ளே வா, அதே கண்கள்), ஜெயலலிதா(நான், மோட்டார் சுந்தரம் பிள்ளை) போன்ற நடிகைகளுடன் நடித்த படங்கள் பெரும் வெற்றியைப் பெற்றன! ஜெயசங்கர் அளவுக்கு இவர் அவ்வளவு நண்பர்களைப் பெறவில்லை என்றே சொல்ல வேண்டும்! முதல் மனைவி விமலாதான் அவரை நன்கு கட்டிக் காத்தார்! இடையில் மணம் செய்த ஷீலா மணமுறிவு பெற்றுப் பிரிந்து விட்டார்! நல்ல, அழகான நடிகர், தன் முழு தாக்கத்தைத் திரையில் ஏனோ பதிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்! அவர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்! அவர் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!
|
#10
|
|||
|
|||
தாங்கள் கூறியது அனைத்தும் சரியே, அற்புதமான நடிகர், மறைவு அதிர்ச்சி செய்தி, ஆழ்ந்த அனுதாபங்கள்.
|
|
|
|