<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#51
|
|||
|
|||
உடம்பை பாருங்க ட்ரீமர் .. மத்தெல்லாம் ஏதும் முக்கியம் இல்லை.
|
#52
|
|||
|
|||
டிரீமர் ஐயா
இந்த ஒரு கஷ்டமான சூழ்நிலையிலும் நீங்கள் அளித்த தன்நிலைவிளக்கம் மெய்சிலிர்க்க வைக்கிறது. நீங்க முதலில் உங்க உடல் நலனை கவனியுங்கள் மற்றதெல்லாம் பிறகு பார்த்து கொள்ளலாம். உங்களுக்காக ஜெபிக்கிறேன் |
#53
|
|||
|
|||
ட்ரீமர் அவர்களே முதலில் உங்கள் உடல் நிலை முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள். உங்களின் உடல் நிலைதான் முன்னேற்றம்தான் எங்களுக்கு முக்கியம்.
|
#54
|
|||
|
|||
ஐயா ட்ரீமர் அவர்களே தாங்கள் இவ்வளவு வயதானவர் என்பதையும் தங்கள் சுகவீனதையும் இப்பொழுதுதான் இந்த திரியை பார்த்து தெரிந்து கொண்டேன். நீங்கள் பூரண நலத்துடனும் ஆயுளுடனும் எங்களுடன் உங்கள் நல்லுறவை தொடர்ந்து பகிர்ந்து கொள்ள வரவேண்டும் .அதற்கு எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.
|
#55
|
|||
|
|||
ட்ரீமர் அண்ணாச்சி, முதலில் நமக்கு தேவை மன தையிரியம், அதனுடன் சேர்ந்து மருத்துவம் நம்மை விரைவில் குணபடுத்தும்.
எனக்கு நம்பிக்கை இருக்கு நீங்கள் விரைவில் நலம்பெற்று லோகத்திற்கு திறம்பட சேவையாற்ற வந்து விடுவீர்கள் என்று. |
#56
|
||||
|
||||
ட்ரீமர் அண்ணா, நான் உங்களிடம் தாயகம் வரும்போது சந்திக்க அனுமதி கேட்டிருந்தேன், ஆனால் தங்களைச் சந்திக்க முடியாமைக்கு வருந்துகிறேன். இந்த திரி இப்போதுதான் நான் கண்டு, படித்து விட்டு இந்த பதிவிடுகிறேன். எல்லாம் அவன் செயல், அவனிடம் உங்கள் உடல் நலத்தை கேட்கிறேன். நிச்சயம் தருவான். பின்னூட்டம் எதுவும் இட முயற்சிக்க வேண்டாம் அண்ணா, நீங்கள் இந்த பதிவை வாசித்தாலே போதுமானது. விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்.
__________________
எத்தனை இளம் நெஞ்சங்களின் ஏக்கப் பெருமூச்சுக்கள் துளைத்தனவோ இந்த இரவு வானத்தில் இத்தனை ஓட்டைகள் |
#57
|
|||
|
|||
லோகத்தில் மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரியவர் அன்பு அண்ணன் ட்ரீமர் சார்... நிறைய ஊக்குவிக்கும் பண்பும், தவறுகளை புண்படாமல் பண்பட எடுத்துரைக்கும் குணமும் கொண்டவர். அவரின் உடல் நலத்திற்காக வேண்டி நண்பர்களுடன் சேர்ந்து அடியேனும் அரங்கனைப் பிரார்த்திக்கிறேன்...
|
#58
|
|||
|
|||
நீங்கள் தெரிவித்த ஆலோசனைகளும் செய்த பிரார்த்தனைகளும் வீணாகவில்லை. என் உடல் நலத்தில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டதனால் மச்சானின் வேண்டுகோளைத் தட்டமுடியாமல் சிறுகச்சிறுக எழுதத் தொடங்கி, நாற்பத்தைந்து நாட்களில் மூன்று கதைகள் எழுதிப் பதித்துள்ளேன். போட்டிக்கு வந்த எல்லாக் கதைகளுக்கும் பின்னூட்டமும் இட்டுள்ளேன். இவை முழுக்கமுழுக்க உங்கள் நல்லெண்ணங்களாலேயே நிகழ்ந்தன. நன்றி.
|
#59
|
|||
|
|||
லோக நண்பர்கள் செய்த பிரார்த்தனைகள்தான் தங்களின் உடல்நிலையில் முன்னேற்றம் காணவைத்தது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை அய்யா...! ஆனால் மச்சான் தற்போது நடத்திக்கொண்டிருக்கும் வாசகர் சவாலும் தங்களின் உத்வேகத்துக்கு ஒரு காரணம் என்பதை நினைக்கும்போது மிகவும் அகமகிழ்கிறேன். இதே உடல்நிலை தொடரவேண்டும் எனவும் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
"ரகசிய உறவு" வாசகர் சவாலில் 3 கதைகள் எழுதி, நண்பர்களின் அனைத்து கதைகளுக்கும் பின்னூட்டங்கள் பதித்து, வாக்கையும் செலுத்தி தங்களின் கடமைகளை நிறைவேற்றியதுக்காக மச்சானின் மனமார்ந்த நன்றிகள். . |
#60
|
||||
|
||||
மிகவும் சந்தோஷமான செய்தி. தங்களுடைய உடல்நலம் நல்ல முறையில் சீராகவும் வாழ்க்கை சிறப்பாகவும் நீடிக்க எங்களுடைய பிரார்த்தனைகள் என்றும் உண்டு.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
|
|
|