<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
ஹபிபின் வாழ்த்துக்கள்............!
- இந்த பேரில்தான் எத்தனை சக்தி...! எத்தனை கவர்ச்சி...! - இவரை எனக்கு தெரியும் என்று சொல்லிக்கொள்வதில் எனக்கு எத்தனை பெருமை...! - அதிசியங்களில் ஒருவர். இவரின் நிர்வாக திறமை, ஆலோசனை சொல்லும் விதம், உதவி புரியும் பாங்கு, சான்ஸே இல்லை. நீர் ஒரு அதிசயம் தான் எனக்கு...! - கல்லில் முட்டி மோதினால் காயமே மிச்சம் என்ற அனுபவப் பாடத்தை கற்றுக்கொடுத்து பொறுத்துப் போகச் செய்யும் உனது பணியை கண்டு மெய்சிலிர்க்காத நாட்கள் இல்லை. எது நல்லது பொறுத்து போவதா? பொங்கி எழுவதா? என்று வரும்பொழுது பொறுத்து போவதே மேல் என்பதை பலமுறை எனக்கு உணர்த்தியவர் நீங்கள்...! - என் சிந்தனைகளிள் ஒரு மாறுபாடு, என் செயல்களில் ஒரு மாறுபாடு, என் அறிவினில் ஒரு மாறுபாடு, என் உணர்வினில் ஒரு மாறுபாடு, என் அதிகாரத்தில் ஒரு மாறுபாடு, எல்லா மாறுபாட்டுக்கும் காரணம் இந்த அசோ என்ற நல்ல மனிதர் தான்...! - எத்தனை குறைகள் எத்தனை பிழைகள், நான் எத்தனை செய்யினும், குரு போல பொருத்தருள்வது உன் கடன்...! வாழ்த்துக்கள் சார். இந்த ஹபிபின் வாழ்த்துக்கள்...! அமைதியான ஒரு அட்டகாசம். ஆச்சிரியமில்லாத ஆர்பாட்டம் இல்லாத அமைதியான சாதனை...! வாழ்த்துக்கள் தாங்களின் 5ஐந்தாயிரம் பதிவிற்க்கு...! அன்புடன்
ஹபிப் Last edited by smdhabib; 21-12-08 at 01:23 AM. |
#22
|
|||
|
|||
நல்ல படைப்புக்கு ஒரு ஷொட்டு,
தடம் மாறினால் ஒரு செல்லக் குட்டு, எல்லை மீறினால் திரிக்கு ஒரு பூட்டு! அசோவின் மோதிரக் கையால், நானும் குட்டுப் பெற்றிருக்கிறேன். அவர்தம் பின்னூட்டத்தால் நிறையக் கற்றிருக்கிறேன். அசோ பதிந்ததோ ஐந்தாயிரம், காமலோகம் பெற்றதோ அரும் வைரம்! நண்பர் அசோ மேலும் பல நூறாயிரம் பதிக்க வாழ்த்துகிறேன்! |
#23
|
||||
|
||||
ஐந்தாயிரத்தில் பல ஆயிரங்கள் உதவியே..
இதுவே அசோவின் சிறப்பு. அசோவிற்க்கு வாழ்த்துக்கள். |
#24
|
|||
|
|||
எவரென்றாலும் குறைகளைச் சுட்டிக்காட்டத் தவறியதில்லை.
இவரிடம் கொட்டுப்படாமல் தலை தப்புவது சிரமம் தான். ஆனால் அதே நேரத்தில், ஊக்கமும்,உற்சாகமும் அளித்து படைப்பாளிகளை மேலும் படைக்கத் தூண்டுவதில் தன்னிகரில்லை. பதிவுகள் மேலும் படைத்துச் சிறக்க வாழ்த்துக்கள் |
#25
|
|||
|
|||
நண்பர் ராஜேஷின் கருத்துதான் என்னுடையதும்,அஷோவின் பண்புகளை பட்டியலிட்டால் பல பக்கங்கள் போதாது.
5000 பதிபுகள் கண்ட நண்பர் அஷோவிற்கு பாராட்டுக்கள் |
#26
|
|||
|
|||
அஷோவின் 5000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்.
அடித்துச் சொல்லலாம் இந்த ஐய்யாயிரத்தில் ஒரு வரி பின்னூட்டமே இருக்காதென. என் அனுபவம் அஷோவுடன்: முதலில் தனிமடல் வழியே காரமாய் ஒரு குட்டு.. மூக்கு மேல் ரோசம் வந்துவிட்டது எனக்கு. ரெம்ப விலகி இருந்தேன். ஏதோவொரு சந்தர்ப்பத்தில் ஒரு சந்தேகத்துக்காக நண்பர்கள் அனைவருக்கும் மடல் அனுப்ப, அனைவரும் பதிலுக்கு காட்டிய திசை-அஷோ. சிரிய சந்தேகத்தில் அவரின் கனிவான விரிவான பதில் மடலைக் கண்டு குளிர்ந்தது மனம். இதோ இப்போது வரை தொந்தரவு (மன்னிக்கவும்.. தொந்தரவு என்று சொன்னால் அவருக்கு பிடிக்காது..இருந்தாலும்) தந்து கொண்டு இருக்கிறேன். தவறு செய்தால் குட்டி, நல்ல முயற்சிக்கு பாராட்டி இன்னும் எவ்வளவோ சொல்லலாம். லோகத்தில் என் சாதனையாக நான் நினைப்பது.. புதையல் கதம்பக்கதைக்கு அஷோவிடமிருந்து வாங்கிய 500 இ-பணம் 5000 பதிப்புக்கு வாழ்த்துக்கள் அஷோ. நன்றி |
#27
|
||||
|
||||
அசோ இனிய நண்பர்.
லோகத்தில் முதன்முதலாக சாட் செய்தது இவரோடுதான். நிர்வாக காரணத்துக்காக தொடர்புகொண்ட போதிலும் மெயில் ஐடியை தந்து சாட்டில் விளக்கமாக எடுத்துரைத்து ஆச்சரியப்படுத்தியவர். அப்புறம் கண்டிப்பான வாத்தியார். ஆரம்ப காலங்களில் என்னடா இது? என்ன செய்தாலும் பூட்டு போடுகிறார் என அசோ மீது ஒருவித வருத்தம் தோன்றியது உண்மைதான். ஆனால் இப்போது திரும்பி பார்க்கும்போது அந்த செல்ல கண்டிப்புகளே லோகத்தில் என்னை சற்று பண்படுத்தியுள்ளன என்பதை உனரமுடிகிறது. நிர்வாக காரணங்களுக்காக மட்டுமின்றி எந்த ஒரு விஷயத்தையும் கேட்டவுடன் பதில் தரும் அருமையான நண்பர். சொல்வதற்கு இன்னும் நிறையவே இருக்கிறது. மீதியை 10000 பதிப்புகள் திரியில் சொல்கிறேன். இப்போதைக்கு 5000 பதிவுகள் கடந்தமைக்கு வாழ்த்துக்கள் அசோ. அன்புடன் லலிதாதாசன் |
#28
|
|||
|
|||
நிர்வாக கதாநாயகன் என்பதை அவசரத்தில் மாற்றிப் படித்து விட்டேன் , (என்ன என்பதை சொல்லவும் வேண்டுமா? )
தவறை திருத்திக்கொண்டதை பாராட்டி +500 ஜ தந்துவிடும்படி வேண்டுகிறேன் , நன்றி ,ஹிஹி, அசோவின் உழைப்பு பாராட்ட என்பதைவிட முன்னுதாரணமாக கொள்ள வேண்டிய உழைப்பு , வாழ்த்துக்கள் அசோ |
#29
|
||||
|
||||
அசோ.
கா.லோவிற்காக தனது முழுநேரத்ததையும் அர்பணித்துக் கொண்டாரோ.. குறைகளை சுட்டிக்காட்ட தவறுவதில்லை அதைவிட நிறைகளை பாராட்ட தாமதித்ததில்லை.. நிர்வாக உதவி, சந்தேகம் என எல்லாவித உதவிகளுக்கும் எப்போதும் தயங்கியதில்லை தளப்பொறுப்பு இல்லாதிருந்தால் சிறந்த படைப்பாளியாய் மிளிர்ந்திருப்பார். எப்போதோ பதித்த ஒரு பதிப்பின் படம் காலாவதியானதையும் பொறுப்பாய் சுட்டிக்காட்டியிருந்தார். இவரால் குட்டுக்கள் பெற்றவர்களும் இவரை தட்டி நடந்ததில்லை. (இவரிடம் குட்டு வாங்கவேண்டும் என்பதற்காகவே வரிப்புலி தவறு செய்வாரோ..) சுருக்கமாய் சொல்லப்போனால் பாலுக்கும் காவல் - பூனைக்கும் தோழன். வேறென்ன சொல்ல..? |
#30
|
||||
|
||||
அசோவைப் பற்றி என்னுடைய அறிமுகத்திரியில் ஏற்கனவே சொல்லியாகிவிட்டது. தளத்தில் அறிமுகமாகி மிகவும் நெருங்கிய நண்பனாக பாசமிகு சகோதரனாக மற்ற எல்லோரையும்விட எனக்குத்தான் அசோவை அதிகம் தெரியும் என்று பெருமைப் பட்டுக்கொள்வேன்.
நிறைய நேரங்களில் அசோவைப் பார்த்து பிரமித்திருக்கிறேன்.
.... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். நிறைய நற்குணங்களையும்.. நல்ல பண்புகளையும் கொண்டவரை நம் தளத்தின் மூலம் அறிந்து நண்பனாக/சகோதரனாகப் பெற்றது பெருமிதமாக இருக்கிறது. அசோவின் பங்களிப்பு மேலும் மேலும் இங்கே தொடரவும் அவருடைய குடும்பம், தொழில் ஆரோக்கியம் ஆகியன சிறக்கவும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
__________________
என்னைப் பற்றி |
|
|
|