<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
ஆ, ஊன்னா என் காதை திருகி, "பத்தவாடி வெக்கறே?"ன்னு கொமட்டுலயே குத்தறீங்களே...!! ஏதோ அப்பாவி பொண்ணா இருக்கறதால நான் வாயை மூடிக்கிட்டு போயிடறேன்.
Quote:
யாராவது ஒருத்தர் வந்து, "பரிசு பெற்ற கதைகளா" இல்லை... "நல்ல கதைகளா"...? எதைப் பற்றி சொல்கிறீர்கள் என்று கேட்டு, கமுக்கமாக பற்ற வைத்து விட்டுச் செல்வார். பின்னர் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும்போது வந்து குய்யோ, முறையோன்னு கத்தி என் காதைத்தான் திருகுவாங்க. நமக்கு ஏம்ப்பா வம்பு? பொத்திக்கிட்டு போடி டாக்டர் பீனா... காமலோகத்துல வெச்சுக்கிட வேணா...!!! |
#32
|
|||
|
|||
பீனா நீங்க அக்கா இல்லையா?.. பாட்டியா?.. இவ்வளவு நாளா சின்னப்புள்ளைகளை ஏமாத்திகிட்டு இருந்திகளா?..
|
#33
|
||||
|
||||
பீனா... அரட்டையை நிறுத்திக்கொள்ளுங்கள்.. முடிந்தால் யோசனையைத் தாருங்கள்.
__________________
என்னைப் பற்றி |
#34
|
||||
|
||||
அசோ தயவு செய்து PDF முறையில் எந்தக் கதையையும் எந்த வாசலிலும் பதிக்க வேண்டாம். ஏனெனில் இப்போதெல்லாம் தளத்தில் பதிக்கப்படும் கதைகளை அதன் சூடு ஆறுவதற்கு முன்பே வேறு தளங்களில் பதிக்கப்படுகின்றன. எனவே PDF முறையில் வந்தால் வெகு சுலபமாகி விடும் திருடுவதற்கு. பல தளங்களில் லோகத்துக் கதைகளை பார்த்து பார்த்து வெறுத்து வேதனைப்பட்டவன் என்ற முறையில் என் கருத்தை வெளியிடுகிறேன்.
__________________
அன்புடன் நந்தபாலன் ________________ "காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தைப் போலே இன்பம் எது சொல்லு காண்பவை யாவுமே சொர்க்கமே தான்" |
#35
|
||||
|
||||
இது என் தாழ்மையான கருத்து!
வைரம் தங்கத்தை விட விலை உயர்ந்தது இல்லையா? அப்போது இன்னும் அதிகத் தகுதி உள்ளவர்களால் மட்டும்தான் சிறந்த, போட்டியில் வெற்றி பெற்ற கதைகளைப் படிக்க முடியும். வெற்றி வாசல் என்பதைத் திறந்து அதில் இப்படிப்பட்ட சிறந்த படைப்புக்களை வைத்து அத்துடன் ஜூனியர் லெவெலில் இருந்து படிப்புரிமை கொடுத்தால் சிறப்பாக இருக்கும்! மாகி அவர்களின் விருப்பப்படி ஒரு சிறந்த கதைத் தொகுப்பு ஓரிடத்தில் இருக்கும்! வெற்றி வாசல் கதைகள் முத்திரைக் கதைகளாகக் கருதப்பட வேண்டும்! இது என் தாழ்மையான கருத்து!
Last edited by kay; 23-11-10 at 11:54 PM. |
#36
|
||||
|
||||
Kay யின் கருத்துதான் என்னுடையதும். நண்பர் மாகி யின் ஆதங்கம் நல்ல கதைகள் வாசிப்பாரற்றுபோகின்றன என்பதுதானே ? அதை தங்கத்தை விட உயர்ந்த வைரச்சிறையில் வைக்காமல் புதியவர்கள் முதல் பழைய உறுப்பினர்கள் வரை வாசிக்கும் விதமாக வெண்கல வாசலில் ஒரு நூலகமாக வைக்கலாம். நல்ல கதைகள் எப்போதும் வாசிக்கப் பட்டுக் கொண்டும் இருக்கும், விவாதிக்கப் பட்டுக் கொண்டும் இருக்கும். ஆனால் பிடிஎப் வடிவில் வைக்க வேண்டாம், வேர்ட் பைலாகவும் வேண்டாம், இப்போது இருக்கும் திரி வடிவிலேயே இருக்கலாம் காரணம் படிப்பவர்கள் பின்னூட்டம் இட வசதியாக இருக்கும்.
__________________
எத்தனை இளம் நெஞ்சங்களின் ஏக்கப் பெருமூச்சுக்கள் துளைத்தனவோ இந்த இரவு வானத்தில் இத்தனை ஓட்டைகள் |
#37
|
|||
|
|||
Quote:
வெற்றிவாசலில் இடம்பெறவேண்டிய கதைகள் அவை இப்போது இருக்குமிடத்திலிருந்து நகர்த்துவதில் சிரமம் இருப்பின் அவற்றின் நகலைத் தரலாம் அல்லது சுட்டியைத் தரலாம். முக்கியமான விடயம். எந்தப் பிரிவினைச் சேர்ந்த கதையாயினும், இங்கு வந்தபின் அனைவரும் படிக்கும்படி இருக்கவேண்டும். இங்குள்ள ஒரு சுட்டியைச் சொடுக்கும்போது, இத்திரிக்குச்செல்ல உங்களுக்கு அனுமதியில்லை என்று தடைசெய்யக்கூடாது. |
#38
|
||||
|
||||
நண்பர் மாயகிருஷ்ணன் வைர வாசல் என்று ஆரம்பித்து வைத்து, அது வெற்றி வாசல் என்று முடிந்துள்ளது. இதில் பலர் நல்ல ஆலோசனைகளையும் கொடுத்துள்ளீர்கள், அவற்றை குறித்துக் கொண்டுள்ளோம்.
ஆலோசனைகள் வழங்கிய அனைவருக்கும் மிக்க நன்றி..! நீங்கள் என்ன விரும்புகிறீர்களோ அதையே தான் நாங்களும் விரும்புகிறேன். அவை தக்க நேரத்தில் மாற்றங்கள் செய்யும் போது அமல்படுத்தப் படும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#39
|
|||
|
|||
நான் உட்பட தங்க வாசல் உறுப்பினர்கள் பெரும்பாலோனர் (எல்லோரும் அல்ல.. மச்சான் போல் சுறு சுறுப்பானவர்களும் உண்டு) இப்போது பங்களிப்பை குறைத்துக் கொண்டு சோம்பேறிகளாய் உருவெடுத்துள்ளோம்..
எங்களை தட்டி எழுப்பும் விதமாக வைர வாசல் ஒன்றை வைத்து.. அதில் காமலோகத்தில் இல்லாது காமலோகம்.அமை தளத்தில் உள்ள ஏதேனும் சிறப்பம்சம் கொண்ட பகுதிகளை.. அவைகளை இங்கு வைப்பதில் தவறில்லை என நிர்வாகம் கருதுபவற்றையும்.. தலைவாசலிலிருந்து தங்க வாசல் வரை உள்ளவற்றில் சிறந்ததாக நிர்வாகம் கருதும் சிலவற்றையும் பிரித்து எடுத்து அவற்றுடன் சேர்த்து வைர வாசலை உருவாக்கி அவற்றை அடைய தக்க தகுதிகள் எவை என நிர்வாகம் வரையறுத்து வைத்தால் அது காமலோகம் சிறப்பாக இருக்க வழிவகுக்கும் என்பது என் தாழ்மையான கருத்தாகும்.. மேலும் நண்பர்கள் சொன்னது போன்ற வெற்றி வாசல் என்ற ஒன்றையும் உருவாக்கி அதனையும் காமக்கதைகள் வாசல் மற்றும் வெண்கல வாசலுக்கு இடையில் வைத்து அங்கு நிர்வாக சவால்களில் வெற்றி பெறும் கதைகளையும் மாதாந்தர சிறந்த காமக் கதைகள் போட்டியில் வெற்றி பெறும் கதைகளையும் வாசகர் சவால்களில் முதல் மூன்று இடங்களுக்குள் வரும் கதைகளையும் சேர்த்து வைத்து உருவாக்கலாம் என்பதும் என் விண்ணப்பமாகும்.. அவற்றிற்கும் செல்லும் அனுமதிக்கு தக்கதென நிர்வாகம் கருதும் விதிகளையும் உருவாக்கி அனுமதிகளும் வழங்கலாம்.. ஆனால் அது கடுமையானதாக இல்லாமல் எளிமையானதாக இருக்கும் படி நிர்வாகம் அமைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதும் என் கருத்தாகும். Last edited by PUTHUMALAR; 30-11-10 at 04:57 PM. |
#40
|
|||
|
|||
Quote:
சாதாரண உறுப்பினர்களின் ஆலோசனைகளையும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளும் தளநிர்வாகத்தை இங்கேதான் காண்கிறேன். நானும் இதில் ஒர் அங்கத்தினராய் இருப்பதில் மிக்க மகிழ்ச்சி. வெற்றிவாசலோ வைர வாசலோ எதுவாயினும் அனைவருக்கும் மகிழ்ச்சியே. வெற்றிவாசல் என்றால்.. போட்டி வாசலிலேயே sub-forum அமைத்து "வெற்றிவாசல்" வைக்கலாம். நிர்வாக சவால், வாசகர் சவால் இரண்டுமே அந்த வாசலிலேயே நடப்பதால், வெற்றிபெற்ற கதைகளை அங்கேயே பிரிப்பது அனுமதி அளவில் மாற்றம் தேவைப்படாது. வென்ற கதைகளுக்கும் ஒரு அங்கிகாரம் அளித்தமாதிரி இருக்கும். |
|
|
|