<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
மிக சிறந்த கேப்டன் எனும் வரிசையில் என் (மற்றும் பலரது) மனம்
கவர்ந்த நட்சத்திர வீரர் கபில் தேவிற்கு கண்டிப்பாக இடம் உண்டு... |
#12
|
|||
|
|||
Quote:
21வயதில் இந்திய அணிக்கு தலைவாரானவர்,வெளிநாட்டில் இந்திய அணிக்கு முதல் வெற்றியை தந்தவர்,சிறந்த கேப்டன்,எல்லோரையும் சமமாக நடத்தியவர் திறைமைக்கு வாய்ப்பளித்தவர்,கார் விபத்தில் ஒரு கண்ணை இழந்த {பிறகும் தன்னம்பிக்கையோடு கிரிக்கெட் விளையாடி 46,டெஸ்ட்டுகள்,40,ல் கேப்டன்},அவருக்கு 2,பந்துகள் தெரியுமாம் விபத்துக்குபின்,ஒன்று தெளிவாக மற்றது மங்கலாக தெளிவாக தெரிவதே நிஜமானது என விளையாடி 6,சதங்களும் ஒரு இரட்டை சதமும் போட்டவர்,கவரில் அவர் பீல்டிங்க் அபாரம் அதனாலேயே அவருக்கு டைகர் என்ற பட்ட பெயரும் உண்டு... அவரின் இழப்பு துயரமானது.அவரின் குடும்பத்தினருக்கு இறைவன் மன உறுதியையும்,அவரின் ஆன்மாவுக்கு சாந்தியையும் அருளி நல்லவர்களின் ஆன்மாவோடும் சேர்த்து வைப்பானாக |
#13
|
|||
|
|||
மன்சூர் அலிகான் பட்டோடியை குறித்து பலதகவல்கள் இருந்தாலும் அதில் முக்கியமான சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் நண்பர்களே....!
இவர் மத்தியபிரதேசம் போபாலில் "பட்டோடி" என்ற ராஜகுடும்பத்தில் பிறந்தவர்...! இவரது தந்தையார் இஃப்திகார் அலிகான் பட்டோடி 8 - வது நவாபாக அந்த ராஜபரம்பரைக்கு சொந்தமான 52 கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளை ஆண்டு வந்தார். மன்சூர் அலிகான் பட்டோடியின் 11 வது வயதில் அதாவது 1952 ம் ஆண்டு இஃப்திகார் அலிகான் பட்டோடி இறந்து விட்டார். தந்தையார் இறந்த வருடத்திலிருந்து 1971 வரை 9 வது நவாபாக பொறுப்பேற்றுக் கொண்டார் மன்சூர் அலிகான். 1971 ம் ஆண்டுக்குப்பிறகு ராஜபரம்பரை ஆட்சியை மத்திய அரசாங்கம் ஒரு முடிவுக்கு கொண்டு வந்தாலும் இவரை அந்த பகுதி மக்கள் தொடர்ந்து நவாப் என்றே அழைத்து வந்தார்கள். 1961 முதல் 1975 ம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணியில் பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என எல்லாவற்றிலும் சிறந்த ஆல்ரவுண்டராக விளையாடி இருக்கிறார். இதில் 1961 முதல் 1962 வரை கேப்டனாகவும் பொறுப்பேற்றிருக்கிறார். மிகச்சிறிய வயதில் இந்திய கேப்டன் பொறுப்பை ஏற்றவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. அந்த ரிக்கார்ட் முறியடிக்கப்படாமல் இதுவரை அப்படியேதான் இருக்கிறது. தனது 20 வது வயதில் கார் விபத்து ஒன்றில் தனது வலது கண்ணை நிரந்தரமாக இழந்து விட்டார். இடது கண்ணை மட்டும் வைத்துக்கொண்டு கிரிக்கெட் விளையாடி மகத்தான சாதனைகள் பல புரிந்திருப்பதை பாராட்டாதவர்களே கிடையாது. இவரது மனைவி நடிகை ஷர்மிளா டாகூர்...! இவரை 1969 வது வருடம் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள். அதில் மூத்தவர் தற்பொழுது பாலிவுட் பட உலகை கலக்கிக்கொண்டிருக்கும் முக்கிய நடிகர்களில் ஒருவரான செய்ஃப் அலிகான்...! இவரது தங்கையான சோஹா அலிகானும் ஒரு நடிகைதான்...! மற்றொரு தங்கையான சபா அலிகான் ஒரு தங்கநகை டிசைனர்...! தற்போது தந்தை இறந்து விட்டதால் நடிகர் செய்ஃப் அலிகான் 40 நாட்கள் கழித்து பட்டோடி ராஜபரம்பரையின் 10 - வது நவாபாக பொறுப்பேற்க இருக்கிறார். மன்சூர் அலிகானின் இழப்பு அவரது குடும்பத்துக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய பேரிழப்பாகும். அவரின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் சாந்தியடையட்டும்...! |
#14
|
|||
|
|||
மறைந்த பட்டொடியை பற்றி அரிய தகவல் பல தந்த மச்சானுக்கு நன்றி.
|
#15
|
|||
|
|||
1989 ரிலையன்ஸ் கோப்பை உலக கோப்பை போட்டி நேரத்தில் வரும் விளம்பரங்களில் கணவன் மனைவி ஜோடியாய் இவர்கள் வரும் விளம்பரத்தில்தான் பட்டோடி அவர்களை பார்த்துள்ளேன். நியூஸிலாந்து எதிராக நடந்த போட்டியில் வெளி நாட்டில் வைத்து முதம் முறையாய் வெற்றி கண்டவர். வேட்டையாடுவதில் மிகவும் விருப்பமான இவர் காட்டிற்கு சென்று புலியை வேட்டையாடி கொன்றதால் இவருக்கு டைகர் பட்டோடி என்ற பட்ட பெயர் வந்ததாம். இந்திய* கிரிக்கெட்டில் ஒரு மைல் கல்லான இவரின் ஆன்மா சாந்தி அடையட்டும்.
|
#16
|
|||
|
|||
ராஜ குடும்பத்தை சேர்ந்தவரும், இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவனுமான மன்சூர் அலி கான் பட்டோடி இறப்பிற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்
|
#17
|
|||
|
|||
இந்தியாவின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராக திகழ்ந்த பட்டோடி இறந்தது இந்திய கிரிக்கெட்டிற்கு மாபெரும் இழப்பு
|
#18
|
|||
|
|||
இந்திய கிரிக்கெட் வரலாற்றிலே மிக முக்கியமான கேப்டன் பட்டோடிதான். அந்த காலத்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் பந்து தடுப்பதில் எந்த சிரத்தையும் காண்பிப்பதில்லை. ஆனால் பட்டோடியின் வரவிற்கு பின்தான் வீரர்கள் டைவ் adithu முதன் முதலாக பீல்டிங் செய்ய பழகிக்கொண்டார்கள். கிரிக்கெட் இல் இருந்து ஓய்வு பேட்டர பின்பும் வலு கட்டாயமாக மறுபடியும் டீமுக்கு அழைத்து வரப்பட்டவர் பட்டோடிதான்.
|
Tags |
மரணம் , வீரர் , கிரிக்கெட் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|