<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
விரைவில் நமது தள மேம்படுத்துதல் துவங்குகிறது..
நண்பர்களே,
நமது தள மென்பொருள் வெகுநாட்களாக மேம்படுத்தப் படவில்லை, தளத்தின் பாதுகாப்புக்காக மேம்படுத்துதல் அவசியம். அதனால், பொங்கலுக்கு நமது வீட்டைப் புதுப்பிப்பது போல் நாமும் நமது தளத்தை புதுப்பிக்க இருக்கிறோம். புதுப்பித்தல் வேலை ஜனவரி 4-ம் தேதி துவங்கும், 10-ம் தேதி வரை பின்னணியில் நடைபெறும். முதல் நாள் 2 மணி நேரம் தளம் தடை படும், அடுத்த ஒரு சில நாட்கள் தளத்தில் அவ்வப்போது சிறு தடங்கல்கள் வரலாம், அதனால் நீங்கள் பதிக்கும் நீண்ட பதிப்புகள், கதைகளை பதிப்பவர்கள், ஒரு வாரத்திற்கு அதன் நகல் எடுத்து உங்கள் கணிணியில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். சில சமயம் நமது தளத்தில் வேலை நடக்கும் போது நீங்கள் பதிப்பவை தோன்றாமல் போகலாம். மேம்படுத்தல் வேலை துவங்கும்போது முதலில் ஒவ்வொரு வசதியாக குறைக்கப் படும், மேம்படுத்தலுக்குப் பின்னர் அவை படிப்படியாக மீண்டும் தோன்றும். ஜனவரி 1-ம் தேதி முதல் நமது கட்டண அனுமதியை நடைமுறைப்படுத்தும் நிறுவனம் சில மாற்றங்கள் செய்ய உள்ளதால், கடன் அட்டை மூலம் நமது தளத்தில் சேரும், புதுப்பிக்கும் வசதியும் வேலை செய்யாது. கட்டண உருப்பினர்கள் முன் கூட்டியே புதுப்பிக்க நினைத்தால் செய்து கொள்ளலாம். உங்கள் ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி..!
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 31-12-13 at 06:02 PM. |
#2
|
||||
|
||||
ரொம்ப நல்லது தலைவரே.. என் முதல் நி.சவால் கதை பதியும் போது பல முறை கரண்ட் போயோ அல்லது இணைய இணைப்பு போயோ பல முறை அவதிப்பட்டு இருக்கிறேன். அதன் முதல் பின்னூட்டத்தைக் கூட டெம்பரரியாக சேவ் செய்து பின்பே பதிக்கிறேன். தலைவர் முதலிலேயே அறிவுருத்தியதால், நமது நண்பர்களும் இம்மாதம் அதைக் கடைப்பிடிப்பார்கள் என நம்புகிறேன்.
Quote:
அப்புறம் தள மென்பொருளை மேம்படுத்தவதன் மூலம் புதிதாக ஏதும் வசதிகள் வந்து சேருமா தலைவரே? நன்றி
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#3
|
|||
|
|||
நல்லவேளை, இந்த முன்னறிவிப்பு இல்லாவிட்டால் நான் என் கணினியில் கோளாறோ என்று பயந்து அதைச் சரிப்படுத்த யாரையாவது அழைத்திருப்பேன். நன்றி, தலைவரே.
|
#4
|
|||
|
|||
மிக்க மகிழ்ச்சி அப்படியென்றால் பொங்கல் கழித்து நமது தளம் புதுப்பொலிவுடன் மேம்பட்டு திகழப்போகிறது. புதுப்பிக்கப்படும் கால கட்டத்தில் பதிவுகளை படிக்கும் வசதி இருக்கும் அல்லவா?
|
#5
|
||||
|
||||
Quote:
பல புதிய வசதிகள் கொண்டு வரலாம், ஆனால் புதிய வசதிகளைக் கூட்ட கூட்ட தள வேகம் குறைய வாய்ப்பு உள்ளது, அதனால் நன்றாக பரிசீலித்து எது தேவையோ அதை மட்டுமே வைத்துக் கொள்ள உள்ளோம். ஆமாம், புதுப்பிக்கும் காலங்களில் படிக்கலாம், பதிக்கவும் செய்யலாம். ஆனால், ஓரிரு நாட்களில் ஒரு சில மணி நேரங்களுக்கு தளம் தடைபடலாம்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 29-12-13 at 06:43 PM. |
#6
|
|||
|
|||
நமது தள மென்பொருள் மேம்படுத்துதல் முன்னறிவிப்புக்கு நன்றி, தலைவரே.....
$$$ ராஜ் $$$ |
#7
|
|||
|
|||
2014 இல் நமது தளம் மேம்பாடு அடைந்து மென் மேலும் பொலிவுற்று சிறந்து விளங்க என் வாழ்த்துக்கள்.
|
#8
|
|||
|
|||
மிக அவசியமானதும் முக்கியமானதுமான புதுப்பித்தல் வேலை சிறப்பாக நடைபெற்று, நமது தளம் மேன்மேலும் பொலிவு பெறும் என்ற மகிழ்ச்சியான செய்தியையும், கூடவே முன்னெச்சரிக்கைகளையும் தந்தமைக்காக நன்றி.
தேவையற்ற சுமைகளைக் குறைப்பதன் மூலம், தளத்தின் வேகமும் மேம்படுத்தப்படும் என்பது ஒரு கூடுதலான மகிழ்ச்சி. |
#9
|
|||
|
|||
தகவலுக்கு நன்றி தலைவரே.
|
#10
|
|||
|
|||
தகவலுக்கு மின் நன்றி. 2014ல் நமது தளம் மகிவும் மேம்படட்டும்.
|
|
|
|