<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
தமிழில் எழுத உதவி Ask your Tamil Font/Tamil Typing related doubts |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
(ல ள ழ), பிழைகள் இல்லாமல் பயன்படுத்த சில குறிப்புக்கள்
(ல ள ழ), எப்படி ஓரளவுக்கு பிழைகள் இல்லாமல் வார்த்தைகளில் பயன்படுத்துவது என்று இங்கே பார்ப்போம்
அவற்றின் பெயர்களை பார்ப்போம் ல - ஒற்றல் லகரம் (இதை சின்ன "ல" என்றும் சொல்வதும் உண்டு) ள - பொது அல்லது வருடல் ளகரம் (இதை பெரிய "ள" என்றும் சொல்வதும் உண்டு) ழ - சிறப்பு ழகரம் இந்த எழுத்துக்கள் பயன்படுத்த அதன் உச்சரிப்பை சரியாக தெரிந்து இருந்தால் அதை பயன்படுத்துவது எளிது. "ல" தனி லகரம் நாக்கின் நுனி வைத்து உச்சரிக்கவேண்டும், "ள" - பொது ளகரம் லேசாக நாக்கை கொஞ்சமாக பின்னுக்கு வளைத்து உச்சரிக்கவேண்டும், ழ - சிறப்பு ழகரம் நாவை நன்றாக பின்னுக்கு வளைத்து உச்சரிக்கவேண்டும் இவ்வாறு பழகி கொண்டால் அதன் பயன்பாடு வரும் சொற்கள் உச்சரித்து நாம் சரியான "ல ள ழ" எழுத்துகளை பயன்படுத்திவிடலாம் சில குறிப்புக்கள் வைத்து பிழைகளை தவிர்க்கலாம், முதலில் "ள" பற்றி பார்ப்போம் ள - அதிகம் பன்மையை குறிக்கும் சொல்லோடு தொடர்புடையது, பெண்பால் குறிக்கும் சொற்கள் மற்றும் அதிகம் "கள்" என்று வரக்கூடிய சொற்கள் ஊ.த: ஆடுகள், மாடுகள், வாருங்கள், அவள், இவள், வருகிறாள், பார்த்தாள் ழ - பெரும்பாலும் "ள"வா என்ற சந்தேகம் வரும் இது "ள" வை காட்டிலும் கொஞ்சம் நீட்டி ஒலிக்ககூடியது இது பெரும்பாலும் உச்சரித்து மற்றும் சொல்லின் பொருள் கொண்டு திருத்திக்கொள்ளவேண்டும் ல - பொதுவாக ஆல், யில், லாம், லை, லும் (in, if, may, by, but ) என்று வரக்கூடிய சொற்களோடு தொடர்புடையது, மேலே கொடுக்கப்பட்ட இரு குறிப்புக்குள் அடங்காத வார்த்தைகள் இதில் அடங்கும். ஆல் (என்றால், if) - ஊ.த: வந்தால் -> வந்து + ஆல், நின்றால் -> நின்று + ஆல் யில் (உள்ளே, in) - ஊ.த: மேஜையில் ->மேஜை + யில் , பையில் -> பை + யில் லாம் (கூடும் may) - ஊ.த: வந்துயிருக்கலாம், சென்றிருக்கலாம் லை (கொண்டு, by) - பாலை கொண்டு, லும் (ஆனாலும் , but) - பாலினாலும் க்கு (ஆக, for) - பாலுக்கு மாற்றாக ஒற்று ஏழுத்து "ள்ள" "ல்ல" ஒரே எழுத்தாக தான் வரும் இது கலந்து வராது சிறப்பு ழகரம் "ழ" எழுத்து ஒற்று எழுத்தாக வராது |
#2
|
||||
|
||||
உபயோகமான தகவல் இதைப் பதிவிட்டதற்கு நன்றிகளும் பாராட்டுகளும்!
__________________
கதைகளைப் படியுங்கள்! கருத்துக்களைப் பதிவிடுங்கள்! பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்! |
#3
|
|||
|
|||
நன்றி நண்பரே,
உங்கள் பாராட்டு உத்வேகத்தை கொடுக்கிறது, மேலும் ர, ற சரியாக எழுத குறிப்புக்கள் எடுத்துக்கொண்டு இருக்கிறேன் விரைவில் அதையும் எழுதி பதிக்கிறேன் |
#4
|
|||
|
|||
செம்மையான பாதையில் வழி காட்டும் பதிவு மிகவும் இலவசமாக படைத்து வெளியிட்ட அந்தப் பொல்லாத நண்பருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் நன்றிகளும்! கூடவே ஓர் ஐந்து நட்சத்திர மதிப்புக் குறியீடும்!
|
#5
|
|||
|
|||
நன்றி நண்பரே, உங்கள் பாராட்டுகள் மிகுந்த உற்சாகத்தை கொடுத்தது!
|
#6
|
|||
|
|||
மிகவும் பயனுள்ள தகவல், தமிழை பிழை இன்றி
எழுத இது நிச்சயம் உதவும் இதைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி! |
#7
|
||||
|
||||
நான் எழுதும் பல கதைகளுக்கும், நீங்கள் மேலே குறிப்பிட்ட பிழைகள் அதிகம் வருவதுண்டு . ஆகையால்
புதிதாய் மற்றும் பழைய உறுப்பிர்களுக்கும் உங்கள் தகவல் மிகவும் உதவியாய் இருக்கும் நண்பா. நன்றி.
__________________
என்றும் காமத்தோடு. அடியேன். |
Thread Tools | |
|
|
|