View Single Post
  #3  
Old 26-05-13, 12:07 AM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
My Threads  
வெங்கலக் குரல் மன்னா வீழ்ந்துவிட்டாயா ?!

என் கதை முடியும் நேரமிது என்பதை சொல்லும் ராகமிது
அன்பினில் வாழும் உள்ளமிது அணையே இல்லா வெள்ளமிது
இதயத்தில் ரகசியம் அது இதழினில் பிறந்திட தவிக்கின்றது !

முடிந்துவிட்டது தலைவா. உங்களை நாங்கள் இழந்துவிட்டோம். மண்ணுலகிற்கு தாங்கள் ஆற்றிய கலைப்பணி தான் எத்தனை எத்தனை ? சொல்ல வார்த்தை இல்லையே. தமிழ்த்தாயின் வயிற்றில் பிறந்து,

தாயில்லாமல் நான் இல்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள் !

என்று பாடிய இந்த மகத்தான பாடலை போற்றுவதா?

நாணயம் மனுஷனுக்கு அவசியம் மிகவு அவசியம்
அதுவே நல்லோர்கள் சொல்லி வைத்த ரகசியம்

பிறந்த மனிதன் எப்படி எல்லாம் இருக்கவேண்டும் என்ற இதுப்போன்ற பல தத்துவங்களை பாடிய பாடல்களை போற்றுவதா ?

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா
வீழ்ந்தாரைக் கண்டால் வாய் விட்டு சிரிக்கும்
வாழ்ந்தாரைக் கண்டால் மனதுக்குள் வெறுக்கும்
இல்லாரைக் கேட்டால் ஏளன செய்யும்
இருப்பவன் கேட்டால் நடிப்பென மறுக்கும் !

மனித வாழ்வில் உள்ள ஏற்ற தாழ்வுகளை பாடிய இதுப்போன்ற பாடலை போற்றுவதா ?

மெழுகுவர்த்தி எரிகின்றது எதிர்காலம் தெரிகின்றது
புதிய பாதை வருகின்றது புகழாரம் தருகின்றது
புதுமேகம் எழுகின்றது உன் தோகை அசைகின்றது

மனிதனின் உத்வேகத்தில் அவனுக்கு காலம் கொடுக்கின்ற இதுப்போன்ற மறுமலர்ச்சி பாடலை போற்றுவதா ?

முள்ளை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே
உள்ளம் உறவாடுதுங்கள் அன்பாலே

வெள்ள அலை மேலே துள்ளும் கயல் போலே
அள்ளி விழி தாவ கண்டேன் என் மேலே

எண்ணற்ற காதல் பாடல்களை போற்றுவதா ? எதை போற்ற ?

பாட்டும் நானே... பாவமும் நானே
பாடும் உனை நான் பாடவைத்தேனே

இசையால உருகாதா உள்ளமுண்டோ என எம்மப்போன்ற இசை ஞானம் இல்லாதவனையும் முனுமுனுக்கவைத்த கம்பீர குரலுக்கு சொந்தம் கொண்டாடும் இசைவேந்தே நான் எதை போற்ற ?

உன் பாடலை கேட்கும் பொழுதெல்லாம் எனது கடந்த காலங்களை திரும்பிப்பார்ப்பேன். உன் பாடலை முனுமுனுக்கும் நாட்களை எண்ணி எண்ணி இன்புறுவேன். எனது ஆசா பாசங்களை உனது பாடல்கள் பல மூலம் எண்ணி ரசிப்பேன். நான் வளர்ந்த இந்நாள் முதல் எனது பால்ய நண்பர்களை இழந்துள்ளேன், என அன்பு உறவுகளை இழந்திருக்கிறேன். உம்மைப்போன்ற எத்தனையோ மேதைகளை இழந்திருக்கிறேன், இன்று உம்மையே இழந்துவிட்டேன். நான் எதற்க்காக வாழ்கிறேன் ? எனது கடந்த காலங்கள் எனக்கு திரும்ப கிடைக்குமா ? உங்களை எல்லாம் என்று காண்பேன் ? என் கண்கள் பனிக்கிறதே ! இந்த மண்ணுலகில் நீ இல்லை என்றாலும் என்றும் என் இதயத்தில் இருப்பாய் மன்னவனே. உமது ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் எனது பிரார்த்தனை.

உள்ளத்தில் இருப்பதெல்லாம் சொல்ல ஓர் வார்த்த இல்லை
நான் ஊமையாய் பிறக்கவில்லை உணர்ச்சியோ மறையவில்லை
என் தங்கமே உனது மேணி தாங்கினார் சுமந்து செல்ல எனக்கொரு பந்தமில்லை
எவருக்கோ இறைவன் தந்தான்... அந்த நாலு பேருக்கு நன்றி !!

Quote:
Originally Posted by kay View Post
மதன் அவரைப் பற்றித் தனியாகக்
கட்டுரை எழுத வேண்டும்!
அண்ணா திரி ஆரம்பித்ததற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அவரைப்பற்றிய கட்டுரயை விரைவில் எனது 'சங்கீத சகாப்தங்கள்' திரியில் சேர்க்கிறேன்.
Reply With Quote