View Single Post
  #7  
Old 18-09-11, 09:40 PM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2006
Location: தென் தமிழகம்.
Posts: 6,955
My Threads  
மன்னிக்கவும் நைச்கய். உங்களின் பதிவுகளின் எண்ணிக்கையை நான் கவனிக்கவில்லை. உங்களை போன்றோருக்கு எங்களை போன்ற நண்பர்கள் வாழ்த்து திரி தொடங்க முடியாமல் போனமைக்கு மன்னிக்கவும்.
நான் தளத்தில் சேர்ந்த நாட்களில் உங்களை பார்த்து பிரமித்து போயிருந்தேன். எனது அறிமுக திரியிலே உங்களை பற்றி சவால் கதையில் தொடர்ந்து பங்கு பெறும் போட்டியாளர் என எழுதியிருந்தேன். நான் 5 வருடங்கள் முன்னர் பார்த்தது போலவே தொடர்ந்து லோகத்தில் கொஞ்சம் கூட வேகம் குறையாமல் இன்னும் சவால் கதைகளிலும் மாதாந்திர கதைகளிலும் பங்கு பெற்று வருகிண்றீர்கள். 2 முறை சவால் ராஜாவாகவும், 2 தடவை சிறந்த மாத கதை எழுத்தாளராகவும் வெற்றி பெற்றுள்ளீர்கள். கதை எழுதுவதோடு மட்டுமல்லாது எல்லா கதைகளையும் படித்து பின்னூட்டம் இட்டு படைப்பாளிகளின் நண்பராகவும் அடையாளம் காணப்படுகின்றீர்கள். கழிந்த 6 வருடங்களாக சோம்பல் இல்லாமல் எப்போதும் பிஸியாக உலா வரும் உங்களை பார்த்தால் எனக்கு பொறாமையாகத்தான் இருக்கிறது. உங்களின் சுறு சுறுப்பிற்கு எனது ராயல் சல்யூட்டை தெரிவித்து கொள்கிறேன். தளத்தில் மேலும் சிறக்கவும், தனிப்பட்ட வாழ்விலும் சிறக்கவும் ராசராசனின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
Reply With Quote