View Single Post
  #22  
Old 19-04-14, 08:07 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,520
iCash Credits: 148,015
My Threads  
புதிய மாற்றங்களை அறிந்தேன், எனக்கு என்னவோ இந்த எடிட் செய்யும் வசதி மிகவும் அவசியம் என்று கருதுகிறேன். முக்கியமாக மூலத்திரியில் எடிட் செய்யும் வசதி அப்படியே உள்ளதால் அதிகம் பிரச்சனை இருக்காது தான். மற்ற இடங்களின் எடிட் செய்யும் வேலை எனக்கு அதிகம் இல்லை, ஆனாலும் என்னுடை அறிமுகத்திரியில் புதிய படைப்பின் சுட்டியை சேர்க்கும் முறையை நான் மூலத்திரில் செய்யவில்லை, திரிகள் அதிகம் இருப்பதால் படம், அசைபடம், கவிதை, நகைச்சுவை...... என்று சுட்டி லிஸ்டை கொடுக்கவே சில பதிப்புகளை பயன்படுத்தி வருகிறேன். அவற்றில் ஏதேனும் மாற்றம் செய்வது சிரமம் என்று தயங்கினேன். ஆனால் அதற்கு தலைவர் அவர்கள் கொடுத்த விளகக்த்தை பார்த்த அதை சமாளித்து விடலாம் என்று நிம்மதி அடைந்து விட்டேன்.

இருந்தாலும் எனக்குள் தோன்றிய சில கருத்துகளை இங்கே பரிமாறிக்கொள்ள விரும்புகிறேன்.

Quote:
Originally Posted by asho View Post
பதிப்பு ஆரம்பித்த ஒருவர் பின்னாளில் அதனை திருத்தி விதிமுறை மீறியதை பதிந்து விடுகிறார்கள்.
நமது லோகத்தில் விதிமுறை மீறி சர்சை பதிப்பு செய்பவர்கள் மிக குறைந்த என்னிக்கையில் தான் இருப்பார்கள் என்று நம்புகிறேன். அப்படி குறைந்த சிலர் செய்யும் தவறுகளுக்காக அனைவருக்கும் தேவையான ஒரு வசதியை நாம் நீக்கித்தான் ஆக வேண்டுமா?

Quote:
Originally Posted by xxxGuy View Post
இந்த மாற்றம் நமது தளத்தின் குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் என்று வைக்க இயலாது,
குறிப்பிட்ட பகுதிக்கு வைக்க இயலாது, ஆனால் குறிப்பிட்ட சில திரிகளுக்கு மட்டும் இதிலிருந்து விதிவிலக்கு கொடுக்க டெக்னிக்கலாக ஏதேனும் வசதி இருக்கிறதா?

அல்லது திரி துவங்கியவர், அவர் திரியில் அவர் பதித்த பதிப்புகளையாவது திருத்தும் ஏதேனும் வசதி வழங்க முடியுமா என்பதை பரிசீலித்து பார்க்கவும்.

Quote:
Originally Posted by xxxGuy View Post
இதனால், தடங்கல்களை விட நன்மைகளே அதிகம் அதனால் இந்த மாற்றத்தை கொண்டு வர ஆதரவு கொடுங்கள்.
இத்தனை ஆண்டுகளாக இருந்த ஒரு வசிதி தீடிரென இல்லை என்பதால் என் கருத்தை பதித்தேன். இருப்பினும் வெளியில் இருந்து பயன்படுத்து என் மாதிரி நபர்களுக்கு நிர்வாக உருப்பினர்களின் பிரச்சனைகள் + டெக்னிக்கல் விசயங்கள் புரிய வாய்பில்லை என்பதால் 10 ஆண்டுகள் கழிந்து இப்படி ஒரு மாற்றம் கொண்டு வர ஏதோ முக்கிய காரணம் இருக்கும் என்று புரிந்து கொள்ள முடிகிறது.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote