View Single Post
  #1  
Old 30-11-20, 02:53 PM
வேதா வேதா is offline
Gold Member

Awards Showcase

 
Join Date: 14 Jan 2018
Posts: 1,192
iCash Credits: 6,749
My Threads  
எழுத்தாக்கம் பண்ண சிறந்த வழி. (குரல் மூலம் )

சில நாட்களின் முன் இணையத்தில் உலாவிய போது speech recognition ஐ ஸ்மார்ட் போன்களில் Gboard என்ற கீபோர்ட் மூலம் கதைக்கும் அனைத்து வசனங்களையும் தமிழில் எழுத்துருவாக்கினேன் ... அதையே ஏன் கணனியில் செய்ய முடியாது என்று சிந்தித்து தேடிய போது ஒருசில இணையப்பக்கங்களை கண்டறிந்தேன் அவை கீழே

1. https://www.unicodeconverter.info/vo...-converter.php
2. https://speechnotes.co/

இந்த இரு பக்கங்களையும் சோதித்ததில் இதில் நன்றாக குரல் பதிவின் மூலம் எழுத்துருவாக்க முடியும் என்பதை அறிந்தேன். சில நண்பர்கள் டைப் செட்டிங் செய்வதை ஒரு பளுவாக நினைத்து சிலவரிப் பதிவுகளை மேற்கொள்வதையும் அவதானித்தேன். அதனாலேயே இந்தப் பதிவை இடுகின்றேன்

மேலே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தி நீங்கள் நினைக்கும் வசனங்களை மைக்கின் மூலம் பதிந்தால் அது இலகுவாக தமிழில் தட்டச்சு செய்து கொடுக்கின்றது .... இந்த பக்கங்கள் எனக்கு 90% சரியான சொற்களை பதிவு செய்ததன் அடிப்படையிலேயே நான் இதை பரிந்துரைக்கிறேன்.

தனிமையில் குரலை பயன்படுத்தக்கூடிய சந்தர்ப்பமுள்ள நண்பர்களுக்கு இது உகந்ததாக இருக்கலாம். பரிசோதித்துப் பாருங்கள்.

குறிப்பு - ஸ்மார்ட் போனில் இதை நான் பரிசோதிக்கவில்லை . நீங்கள் ஸ்மார்ட் போன் இணைய பாவனையாளரெனின் பரிசோதித்து மற்றய நண்பர்களுக்கு பரிந்துரை கூறுங்கள்.
Reply With Quote