View Single Post
  #3  
Old 03-10-22, 12:50 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,278
iCash Credits: 674,374
My Threads  
பாஸ்வேர்ட் மற்றும் இமெயில் குழப்பங்கள்

தவறாக புரிந்து கொள்ளும் அல்லது ஏற்படும் நிர்வாக வேலைகள்

நம் தளத்திலே பாஸ்வேர்ட் 3 மாதத்திற்கு ஒருமுறை மாற்றியாக வேண்டும், அப்படி மாற்றும் போது அநேகர் சில தவறுகளை செய்து விடுகிறார்கள், பின்னர் ரீசெட் பாஸ்வேர்ட் தந்தும் சில தவறுகளை செய்து விடுகிறார்கள், இந்த பாஸ்வேர்ட் மாற்ற சொல்லும் போது கூடுதலாக இமெயிலையும் தன்னிச்சையாக மாற்றி விடுகிறார்கள். அதன் பின் லாகின் ஆக முடியாமல் அவதிப்படுகிறார்கள்.

இன்னும் சிலர் வேண்டாத வேலைகளான, அவர்கள் பயனாளர் கணக்கு/பாஸ்வேர்ட் மற்றவருடம் பகிர்ந்து கொண்டு, அந்த நபர்கள் செய்யும் சேட்டைகளினாலும் பாதிக்கப்படுகிறார்கள்.

மேலே உள்ளவைகளை ஒவ்வொன்றாக விளக்குகிறோம் கீழே வரிசையாக பாருங்கள்


3 மாதத்திற்கு ஒருமுறை பாஸ்வேர்ட் மாற்றுவது அநேக தளம்/பாரங்களில் இருந்து வரும் நடைமுறை. இதன் மூலம் வெளியே எங்காவது பொதுக்கணினி அல்லது நமக்கு சொந்தமில்லாத ஒரு கணினியில் பாஸ்வேர்ட் டைப் செய்து எப்போதாவது தளம் வந்து அது ஆட்டோசேவ் ஆகியிருந்தால் அதனை கண்டுபிடித்த இன்னொருவர் தொடர்ந்து பயன்படுத்த முடியாமல் போகவே இம்மாதிரி பாதுகாப்பு வழிமுறைகள். ஆனால் பாஸ்வேர்ட் மாற்றும் போது அநேகர் செய்யும் குளறுபடிகள் வரிசையாக சொல்கிறோம்

1)பாஸ்வேர்ட் டைப் செய்யும் போது தளத்திலே தடை செய்யப்பட்ட வார்த்தைகளை கொண்டிருக்க கூடாது, இது காமத்தளம் தானே என்று அநேகர் ஆண்/பெண் உறுப்புக்கள் பெயரையோ அல்லது காமம் உள்ள வார்த்தைகளையோ பயன்படுத்துகின்றனர். அது தளத்திலே உள்ளீடாக செல்லும் போது ஆட்டோ கரக்டாக **** என்று மாறி விடும். இது தெரியாமல் அடுத்து லாகின் ஆகும் போது மாட்டிக்கொள்கிறார்கள்

2)பாஸ்வேர்ட் மாற்றும் போது மறந்து போய் தமிழ் உள்ளீடு விசையை பயன்படுத்துகின்றனர், இதுவும் பின்னர் லாகின் ஆகும் போது தமிழ் உள்ளீடு விசை இல்லாமல் தட்டச்சு செய்யும் போது லாகின் தவறு ஏற்படுகிறது

3)லாகின் பெயரையே பாஸ்வேர்டாக அல்லது இமெயிலை முழுதுமோ அல்லது பகுதியோ பாஸ்வேர்டாக வைக்கிறார்கள். சிலர் பிறந்த தேதியை அப்படி வைக்கிறார்கள். அம்மாதிரி பாஸ்வேர்கள் சேமிக்கப்படுவதில்லை அல்லது அது முழுமையாகமல் பின்னர் லாகின் தவறு ஏற்படுகிறது

4)பாஸ்வேர்ட் மாற்றும் போது பழைய பாஸ்வேர்ட் முதல் அடுக்கில் கேட்டு பின் இரண்டாவது அடுக்கில் புதிதும் அதனை உறுதிப்படுத்த இன்னொன்றும் கேட்கும், இதிலும் குழப்பமாகி குளறுபடி செய்து பின் வரும் பிழைச்செய்தியை முழுதும் படிக்காமல் ஒகே அல்லது எஸ்கேப் கொடுத்து செல்கின்றனர். இதுவும் லாகின் பிழை பின்னர் ஏற்பட காரணம் ஆகிறது.

5. பாஸ்வேர்ட் சிலர் இரண்டெழுத்து அல்லது ஐந்து எழுத்தில் எல்லாம் வைக்கிறார்கள், குறைந்தபட்சம் 8 எழுத்துக்கு மேல் வைப்பதே சிறந்தது, அதுவும் நம்பர், சிறிய எழுத்து மற்றும் பெரிய எழுத்தில் (ஆங்கிலத்தில்) உள்ளதையும் சேர்த்து வைப்பதே சிறந்தது.

பாஸ்வேர்ட் மறந்தவுடன் இவர்கள் செய்யும் இன்னொரு பெரிய பிழை பொறுமை இல்லாமல் தொடர்ந்து லிமிட்டிற்கு மேலே முயன்று பார்ப்பது, பின் கடைசியாக குறிப்பிட்ட நேரம் பொறுத்து முயற்சி செய்யும் போது மறு நாள் முயற்சிக்காமல் உடனே பாஸ்வேர்ட் ரீசெட் செய்ய முயற்சிப்பது. இதெல்லாம் வேலைக்காகது. இமெயிலே அனுப்பப்படாது.

அடுத்து 5 நிமிடத்தில் தளத்து இமெயிலுக்கு மெயில் அனுப்பி பாஸ்வேர்ட் ரீசெட் கேட்பது, அதுவும் தளத்திலே ரிஜிஸ்டர் செய்யப்படாத தனக்கு வசதியான ஒரு இமெயிலில் இருந்து பயனாளர் பெயர் குறிப்பிடாமல் கேட்பது நிறைய பேர் வாடிக்கையாக வைத்துள்ளனர். இவர்கள் வார்த்தையெல்லாம் உங்கள் சிஸ்டம் வேலை செய்வதில்லை என்று புகார் செய்வதிலிருந்து தான் ஆரம்பிக்கும்.

தளத்து இமெயிலுக்கு தொடர்பு கொள்ளும் போது கணக்கோடு இனைந்த இமெயிலில் இருந்து புது பிரச்சினை என்றால் தனியாக ஒரு சரியான தலைப்பில் உள்ளே பொருளடக்கத்தில் பயனாளர் பெயர் குறிப்பிட்டு, தன் நிலை விளக்கி கேட்டால் உடனே ஆவண செய்யப்படும், ஆனால் இவர்கள் தளத்திற்கு இமெயில் ஏதாவது முன்னர் தந்த சம்பந்தமில்லாத ஒரு தலைப்பு (முடிந்து போன ஒன்றாக இருக்கும்) அதில் கடைசியில் அல்லது இடையே எங்காவது பாஸ்வேர்ட் ரீசெட் செய்து தரச்சொல்லி கேட்பது, அல்லது தலைப்பில் மட்டும் பாஸ்வேர்ட் வேலை செய்யவில்லை என்று ஆங்கிலத்தில் உள்ளே பொருளடக்கத்தில் ஒன்றுமே இருக்காது, அதுவும் அடுத்தடுத்த நொடிகளில் இமெயில் தருவது இதெல்லாம் கவனிக்கப்படாது.

முறையாக இமெயில் தந்தால் உடனே ஆவன அனைத்தும் செய்து தரப்படும் என்பதை மறந்து விடுகிறார்கள்.


அடுத்து இமெயில் மாற்றுவது, இமெயில் மாற்றும் போது தன்னிச்சையாக மாற்ற வேண்டாம், தளத்து இமெயிலுக்கு எழுதி மாற்றுங்கள் என்று ஸ்குரோலிங் ஓடுவது பாதிப்பேர் பார்ப்பதில்லை, 3 மாதத்திற்கு ஒரு பாஸ்வேர்ட் மாற்றும் போது கிழே சிவனே என்று இருக்கும் இமெயிலையும் மாற்றி விடுகிறார்கள். பின்னர் அந்த மாற்றி இமெயிலுக்கு அதனை கன்பர்ம் செய்ய வரும் இமெயிலை கண்டு அதில் உள்ள வழிமுறைகளை செய்யாமல் விட்டு விடுகிறார்கள். திரும்ப உடனே இமெயில் தளத்திற்கு அந்த புது மெயிலில் இருந்து தருகிறார்கள். கணக்கிற்கு சொந்தமில்லாத இமெயிலில் இருந்து வரும் கோரிக்கையை எப்படி ஏற்பது?.

அதே போல நீண்ட நாள் வராதவர் கணக்கை குறிப்பிட்டு அவர் கணக்கிற்கு சம்பந்தமில்லாத இமெயிலில் இருந்து மடல் வரும், மாற்றிக்கொடுக்க சொல்லி, இவர்களிடம் ஒரே ஒரு கேள்வி கேட்டால் (பிறந்த தேதி) பதிலே வராது, அல்லது மறந்து விட்டேன் நான் தான் அது நான் அது செய்திருக்கிறேன், இது செய்திருக்கிறேன் எனக்கு கணக்கை இந்த மெயிலுக்கு மாற்றி தாருங்கள் என்று.

ஆனால் ஒரு விசயத்தை இம்மாதிரி கேட்பவர்கள் மறந்து விடுகிறார்கள், இம்மாதிரி ஏதாவது ஒரு இமெயிலில் இருந்து ஆக்டிவாக இல்லாத ஒரு கணக்கை ஒருவர் கேட்டால் கொடுத்து விடுவோமா?. கொடுக்கலாமா?. இவர்கள் விடும் கதையெல்லாம் சொந்தத்தில் ஒரு துக்கம் ஏற்பட்டது, அதனால் வரவில்லை, நான் இந்த வருடத்தில் இருந்து இருக்கிறேன். இது ஒரு உறுப்பினர் பெயருக்கு கீழே அல்லது ப்ரபைலை பார்த்தாலே எளிதில் தெரிந்து விடும். இன்னும் சில உறுப்பினர்கள் பிறந்த தேதி தெரியும் படி வைத்திருந்தினர் அதெல்லாம் கொஞ்ச நாள் முன்னர் கண்டுபிடித்து மாற்றி விட்டாச்சு.

பொதுவாக பிறந்த தேதி இங்கே கொடுத்ததெல்லாம் பாதிக்கு மேல் பொய் என்று இம்மாதிரி கணக்கு திரும்ப கேட்கும் போது தெரியவருகிறது, 70-80 களுக்கு முன்னர் பிறந்தவர்களுக்கு இரண்டு பிறந்த தேதி இருக்கலாம். ஒன்று நிஜமானது மற்றொன்று பள்ளியில் சேர்க்கும் போது கொடுப்பது. ஆனால் அதற்கு பின் பிறந்தவர்கள் தரும் பிறந்த தேதி தவறாகவே தருகிறார்கள். கணக்கு துவங்கும் போது இஸ்டத்திற்கு பிறந்த தேதி தருவதை அநேகர் வாடிக்கையாக வைத்துள்ளனர். நாம் உண்மையிலே அதனை சரி பார்ப்பதில்லை, அது 18 வயதிற்கு மேற்பட்டதா என்று பார்த்து மட்டுமே இது காம தளம் என்பதால் அனுமதி தருகிறோம், பின்னர் அதனை கணக்கு உரிமை கோருகையில் தவறாக சொன்னால் அவரை எப்படி நம்புவது.

கடைசியில் கணக்கு கிடைக்காது என்று தெரிந்தவுடன் அவர்கள் சுயரூபம் தெரிந்து போகிறது, கெட்ட வார்த்தைகளில் திட்டி பின்னர் அவர்கள் இமெயிலும் தடை செய்யப்படுகிறது.

நம் தளத்தில் இருந்து ஒரு நாளைக்கு பல நூற்றுக்கணக்கான இமெயில் உறுப்பினர்களுக்கு செல்கிறது, புது தனிம்டல வந்தால், சப்ஸ்கிரைப் செய்திருந்தால், நிர்வாக நடவடிக்கைகள் ஏதும் அவர் கணக்கில் ஏற்பட்டிருந்தால், எனவே அநேக இமெயில் வழங்குநர் நம் தள இமெயிலை ஜங்க் என குறிப்பிட்டு அங்கே தான் அதனை செலுத்துகிறார்கள். இவர்கள் ஸ்பாம் மற்றும் ஜங்க் போல்டர் பார்ப்பதில்லை. மேலும் குறிப்பிட்ட இடைவெளியில் தான் நம் தளத்தில் இருந்து இமெயில் அனுப்பப்படும் என்பதால் ரீசெட் செய்த உடனே இமெயில் வராது. சிறிது நேரம் பொறுமையாக இருப்பது இல்லை.

நாங்கள் முறையாக கால அவகாசத்தில் இம்மாதிரி வசதிகளையெல்லாம் சோதித்து, ஒழுங்காக வேலை செய்கிறதா என்று பார்த்து வருகிறோம்.


எனவே தவிர்க்க முடியாத சந்தர்ப்பத்தில் தளத்து இமெயிலுக்கு சரியான இமெயில் கணக்கில் இருந்து முறைப்படி தலைப்பிட்டு, பய்னாளர் பெயர் குறிப்பிட்டு கணக்கு சம்பந்தமாக கோரிக்கை தருவதில் தவறேதும் இல்லை.
__________________

Last edited by asho; 22-11-22 at 03:42 PM.