நண்பர் ஹெர்மி நான்காயிரம் போட்டுவிட்டார், வாழ்த்துவோம் வாருங்கள் !!
பார்க்க ரொம்பவும் அமைதியா தான்ப்பா தெரியறாரு. ஆனால் படைப்புகளையும் பின்னூட்டங்களையும் அசுர வேகத்தில் இல்ல பன்ணிக்கிட்டிருக்காரு ! இப்பத்தான் மூவாயிரம் போட்ட மாதிரி இருந்தது, நான்கு மாதத்தில் அடுத்த ஆயிரமா ? ரொம்பவும் வியக்க வைக்கிறார்ப்பா இந்த ஹெர்மி.
இந்த நான்கு மாத்ததில் பல படைப்புகள், பின்னூட்டங்கள், பரிசுகள் என குவித்து தள்ளிக்கொண்டே இருக்கிறார். இப்பொழுது நடந்து முடிந்த வா.சவால் 63ல், 'யோவ் உன் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா' என மாட்டை வைத்து பிழைப்பு நடத்தும் ஓர் கிராமத்து மங்கையின் கதையை கொடுத்து அசத்தி முதல் பரிசையும் தட்டிச்சென்றுவிட்டார். அவர்கள் பேசும் பேச்சு வழக்கிலேயே கதையை கொண்டு சென்ற விதம் தான் மிகவும் சிறப்பு.
மேலும் பல படைப்புகள், பின்னூட்டங்கள், பரிசுகள் என பல சாதைனைகள் புரிய நண்பர் ஹெர்மிக்கு எனது வாழ்த்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
|