View Single Post
  #1  
Old 16-12-08, 06:10 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 342,600
My Threads  
2009 புதிய நிர்வாக உறுப்பினர்கள்

நண்பர்களே,

இன்னும் சில நாட்களில் புதிய வருடத்தில் அடியெடுத்து வைக்க இருக்கிறோம், தளத்தில் பல மேம்பாடுகள் செய்யப் பட்டு பல புதிய வசதிகள் புகுத்தப் பட்டுள்ளன. இந்த வசதிகளை தளத்தில் செவ்வனே அமல்படுத்தவும், தளத்தின் பணிகளில் புது ரத்தம் பாய்ச்சவும், நமது பழைய நிர்வாக உறுப்பினர்களில் சிலருக்கு ஓய்வு கொடுக்கப் பட்டு, ஐந்து புதிய நிர்வாக உதவியாளர்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளார்கள். அவர்கள் பின்வருமாறு:

1) mayakrishnan
2) amature_trichy
3) mouse1233
4) baseer
5) thanger.c


இது நாள் வரையில் எங்கள் நிர்வாக பணிகளில் எங்களுக்கு தோள் கொடுத்து தளத்தை சீராக நடத்த உதவி செய்த கீழ்கண்ட உறுப்பினர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து, ஓய்வு கொடுக்கிறோம். அவர்கள் பின் வருமாறு:

1) ஆதி
2) Blue Eye
3) வத்சலா


பழையவர்கள் நிர்வாக பொருப்பில் இல்லையென்றாலும், அவர்கள் தளத்தை நடத்த எங்களுடன் எப்போதும் துணை நிர்ப்பார்கள். அவர்களுக்கு நீங்கள் இது வரை கொடுத்து வந்த அதே மரியாதையைக் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மற்ற நிர்வாக உறுப்பினர்கள் அனைவரும் அவரவர் தற்போது செய்யும் பணியில் தொடர்வார்கள்.

இதுவரை உங்களுடன் உலாவி வந்து தற்போது புதிதாக நிர்வாக பணியை ஏற்றுள்ள புதிய நிர்வாக உறுப்பினர்களுக்கு உங்கள் ஒத்துழைப்பை வழங்கவும். இவர்கள் இந்த மாதம் 20-ம் தேதி முதல் இந்த புதிய பொறுப்பை ஏற்பார்கள்.

நன்றி..!!
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 16-12-08 at 06:24 PM.