View Single Post
  #40  
Old 02-12-05, 02:43 AM
rajjdy rajjdy is offline
User inactive for long time
 
Join Date: 18 Jul 2005
Posts: 297
My Threads  
Quote:
Originally Posted by annan
நண்பர் தமிழன் சொன்ன மாதிரி, எல்லோராலும் கதை எழுத முடியாது. கதை எழுதுவது ஒரு கலை. இல்லாதவர்களை கட்டாயபடுத்தினால், தாழ்வு மனப்பான்மைதான் வரும். இது எனது கருத்து

கதை எழுதுவது திறமை தான் ஒத்துக் கொள்வோம். நேரம், காலம், சந்தர்ப்பம் எல்லாம் அமைய வேண்டும். மிகவும் சரிதான். எமது லோகத்தில் சில ஆயிரம் அங்கத்தவர்கள் இருக்கிறார்கள். சில நூறு அங்கத்தவர்கள் அக்ரிவ் ஆக இருக்கிறார்கள்.

ஆனால் எந்தவொரு ஆக்கத்திற்கும் 50 கருத்துப் பதிவுகள் உண்டு என்பதே.... மிக மிக அரிதாக அல்லது இல்லை என்றே கூறலாம்.

கஸ்டப் பட்டு ஒவ்வொரு படைப்பாளியும் படைக்கும் படைப்புகளை எத்தனை பேர் படிக்கிறார்கள். படித்தவர்களிலும் எத்தனை பேர் மனசு வைத்து தங்கள் விமர்சனங்களை கொடுக்கிறார்கள்? ஒரு வரி என்றாலும் ஆதரித்தோ எதிர்த்தோ கேள்வி கேட்டோ வந்தால் தான் எழுதுபவர்களுக்கு தங்களையும் கவனிக்கிறார்கள், தங்களுடைய ஆக்கங்கள் படிக்கப் படுகின்றது என்ற எண்ணம் வரும். எண்ணம் உற்சாகத்தைக் கொடுக்கும். உற்சாகம் தொடர்ந்தும் எழுதத் தூண்டும்.

கொடுக்க வேண்டிய ஆதரவைக் கொடுக்காமல் 10 கதை எழுது 15 கதை எழுதென்றால் யாரும் எழுதமாட்டார்கள்.

விமர்சனங்கள், கருத்துகள் சகல உறுப்பினர்களாலும் கூறப் படவேண்டும் என்பது கட்டாயமாக்கப் பட வேண்டும். குறைந்தது இரண்டு கிழமைகளுக்கு மேல் எந்தக் கருத்தோ பதிவோ பதிக்காதவர்களை
எச்சரிக்கைப் பண்ணலாம்.

விமர்சனங்கள் அதிகரித்துச் செல்லும் பொழுது ஆக்கங்கள் நிச்சயம் அதிகரிக்கும். இவ்வாறு விசனம் கொள்ளத் தேவையில்லை.


அங்கத்தவர்களே இதைக் கடமையாகக் கொண்டு செயற்பட்டால் ...பருங்கள் நீங்கள் படிக்கப் படிக்க கதைகள் வந்து கொண்டே இருக்கும்.

இது எனது தாழ்மையான அபிப்பிராயம்.
Reply With Quote