View Single Post
  #5  
Old 18-09-12, 04:51 PM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
My Threads  
தலைவரே,

இந்த புகாரை தனியே இங்கே கொண்டு வந்தமைக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த திரி மற்ற வாசல் அனுமதி பதிந்தவர் தகுதி பற்றிய ஆலோசனை மட்டுமன்று, இங்கே பலரும் தங்களது பொன்னான நேரத்தையும் இழந்து கைவலிக்க தட்டச்சு செய்து கதைகள் பதிக்கின்ற எத்தனையோ படைப்பாளிகளின் தோளில் ஏறி சொகுசாக எண்ணிக்கையை அதிகரிக்கும் சவாரி செய்யும் பல போலியான பின்னுட்டவாதிகளின் சப்பை கட்டுகளை அம்பலப்படுத்தும் திரியாகவே இத் திரி விளங்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இதன் வலியை நான் நன்கு உணர்ந்தவன் என்ற முறையில் நான் இதனை சொல்கிறேன்.

புதியவர்கள் மட்டுமன்று, ஏற்கனவே இங்கே சில சீனியர் உறுப்பினர்கள் கூட இந்த செயலை புரிகின்றனர்.

சமயங்களில் லேட்டஸ்ட் ஃபாரம் நியூஸ்சில் லேட்டஸ்ட் போஸ்ட் வரிசையை பார்த்தாலே நமக்கு புரியும். சொற்ப நேரத்தில் ஒருவரது பெயர் மட்டுமே வரிசையாக ஓடிக்கொண்டே இருக்கும். ஓர் உறுப்பினரின் பெயர் அஆஇஈஉஊஎஏ என வைத்துக்கொள்வோம்,

அஆஇஈஉஊஎஏ
அஆஇஈஉஊஎஏ
அஆஇஈஉஊஎஏ
அஆஇஈஉஊஎஏ
அஆஇஈஉஊஎஏ
அஆஇஈஉஊஎஏ
அஆஇஈஉஊஎஏ
அஆஇஈஉஊஎஏ
அஆஇஈஉஊஎஏ
அஆஇஈஉஊஎஏ
அஆஇஈஉஊஎஏ
அஆஇஈஉஊஎஏ
அஆஇஈஉஊஎஏ
அஆஇஈஉஊஎஏ

இப்படி தொடர்ந்து ஓரிரு நிமிட இடைவெளியில் ஓடிக்கொண்டே இருக்கும். பெரும்பாலும் பார்த்தால் இந்த நபர்கள் இதுபோன்று இடும் பின்னூட்டங்கள் எல்லாமே கதைக்காகவே தான் இருக்கும். அந்த பின்னூட்டங்களை படித்துப்பார்த்தாலே தெரியும் இந்த நபர் கதையை படிக்காமலே பின்னூட்டம் இட்டு சென்றுள்ளர் என தெல்லத்தெளிவாக புரியும்.

சும்மாச்சும், சுவையான வெண்பொங்கலில் அங்காங்கே
கொஞ்சம் மிளகு கிடப்பது போல், கதையின் சுவை குறைந்தது
போல் உள்ளது.

இல்லைனா,

அல்வாவிலே இருக்கும் முந்திரி போல்
சுவையும் மனமுமாக கதை பிரம்மாதம்.

அல்லது

சொறக்காயில் உப்பு இருந்தது
கோதுமையில் புழு இருந்தது

மற்றவர்களின் பின்னூட்டத்தை பார்த்து கொஞ்சம் ஒப்பனை செய்து பின்னூட்டமிடுவது,

சென்ற வருடம் எனது ஓர் கதையில் அப்படி தான் ஓர் சீனியர் நபர்,

படிக்காமலே,

கதையின் நீளம் சற்று தொய்வை தருகிறது.
மற்றபடி கதை பரவாயில்லை.

அவர் எனது அந்த கதையை பின்னூட்டமிடும்பொழுது நான் தளத்தினுள் தான் இன்விசிபில் மோடில் இருந்தேன். அவர் கதைகளுக்கு பின்னூட்டமிட்டுக்கொண்டு வருவதை பார்த்து எனக்கு எண்ணிலடங்கா ஆத்திரம் கொப்பளித்தது. ஓர் நிமிடம் இரண்டு நிமிட இடைவெளியில் பல கதைகளுக்கு எப்படியும் ஓர் பத்து கதைகளுக்கு மேல் பின்னூட்டமிட்டுக்கொண்டு மின்னல் வேகத்தில் செல்கிறார். இருந்த பொழுதிலும் அந்த வரிசையில் எனது கதையும் இருக்கவே, அய்யோ, இவர் என் கதைக்கு பின்னூட்டமிடக்கூடாது என வேண்டினேன். சொல்லிவைத்தார் போல், குறைந்தது வேகமாக படித்தாலே ஒரு மணிநேரம் பிடிக்கும் கதையை இரண்டே நிமிடத்தில் மேற் சொன்ன பின்னூட்டத்தை இட்டு சென்றார்.

அக்கனமே நான் அவருக்கு அதே திரியில் தகுந்த பதிலடி கொடுத்தேன். தனக்கு பிடித்தவர்கள் கதைக்கு ஆஹா ஓஹோ என பின்னூட்டமிடுபவர்களும் உண்டு. அதையும் படித்து தான் பின்னூட்டமிடுகின்றனரா என்பதை யார் அறிவாரோ !

அதிலிருந்து அவர் எனது திரிக்கு வருவதே கிடையாது, பின்னூட்டமிடுவதும் கிடையாது. எனக்கு அதைப்பற்றி கவலையே இல்லை. இப்படிபட்டவர்கள் நான் நேரத்தை செலவழித்து எழுதும் கதைகளுக்கு பின்னூட்டமிடவேண்டும் என அவசியம் கிடையாது. நான்கு பேர் எனது கதையை படித்து இங்கே கவனிக்கப்படவேண்டிய வார்த்தை படித்து பாராட்டினாலும் சரி, படித்துவிட்டு கதையில் உள்ள குறைகளை சொன்னாலும் சரி அதை நான் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொள்வேன். நான்கு பேர் கூட தேவையில்லை, ஒருவர் படித்து பின்னூட்டமிட்டால் கூட அதுவே நான் பெற்ற பயணாக அமைதி கொள்வேன்.

ஆனால் நான் செய்த அந்த ஓர் நல்ல காரியத்தால் பலருக்கும் நன்மையில் முடிந்துள்ளது. அதன் பிறகு அந்த நபர் கொஞ்சம் உ ஷா ர் ஆகிவிட்டார். மற்றவர்கள் கதையை நிதானமாகவே படித்து பின்னூட்டங்களும் இடுகிறார். இல்லை எனில், இதுவரை நம்ம வாத்தியாரை மிஞ்சி சென்றிருப்பார் அந்த நபர்.

வாத்தியாரின் பின்னூட்டங்களோடு ஒப்பிடுகையில் ஏனி வைத்தாலும் அவரது புகழிற்கு தகுதியுடையவர் கிடையாது. உண்மையான உழைப்பை கொண்டவர்களுக்கு தான் பல புகழ்ச்சிகள் சென்று சேரவேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக இருப்பவன் நான்.

சும்மா மொத்தமே
நான்கு வார்த்தையை

இதுபோல் பின்னூட்டமிட்டு லோகத்தில் நான் தான் அதிக பதிப்புகள் பதிந்தவன் என மார்தட்டிக்கொள்வதில் என்ன இருக்கிறது ? சொல்லுங்கள் பார்ப்போம். அவர்களுக்கே அதை நினைக்க கேவலமாக இல்லையா ?

பலருக்கு என்னால் நன்மை ஏற்பட்ட பொழுதிலும் எனக்கு ஓட்டு கிடைக்காதே என்ற எண்ணமெல்லாம் எனக்கு இப்பொழுது இல்லை. அதையெல்லாம் நான் எப்பொழுதே தூற தூக்கிபோட்டுவிட்டேன். இப்பொழுதெல்லாம் எனது சொந்த விருப்பத்திற்க்காகவும் ஆசைக்காகவுமே தான் நான் கதைகள் / கவிதைகள் யாவும் எழுதுகிறேன். எனது ஆக்கங்களுக்கு நானே முதல் ரசிகன், நானே முதல் வாசகன் அதுவே எனக்கு போதும்.

இன்னமும் ஒரு சிலரோ,

பரவாயில்லை

கதை அருமை

இன்னும் கொஞ்சம் நன்றாக கொடுத்திருக்கலாம்

கதை சூப்பர்

பின்னூட்டங்களை பற்றி எவ்வளவு ஆய்வுகள் நடத்தினாலும், சில திருந்தாத ஜென்மங்கள் மட்டும் எப்பொழுதுமே திருந்தாது திருத்தவும் முடியாது என்பதைப்போல் தான் இன்னமும் நிலவரம் உள்ளது.

ஆக தலைவரே, இந்த திரியை பொருத்த மட்டும், என் கண்ணுக்கு தெரிந்து என் கதைக்கோ அல்லது யார் கதையாக இருந்தாலும், போலியான பின்னூட்டங்கள் என தெரிந்தால் அந்த பின்னூட்டமிட்ட நபர் யாராக இருந்தாலும், நான் இந்த திரியில் இங்கே தெரிவிப்பேன். அவருடைய பெயர் முதற்கொன்டு, அதன் திரி பின்னூட்டம், சுட்டி ஆகியவை எல்லாம் முடிந்த அளவு எவ்வளவு டீட்டெயில்ஸ் கலெக்ட் செய்யமுடியுமோ அவ்வளவையும் இங்கே நான் சுட்டிக்காட்டுவேன்.

ஆடுற மாட்ட ஆடித் தான் கறக்கனும்
பாடுற மாட்ட பாடித்தான் கறக்கனும்னு சொல்லுவாங்க.

மற்றவர்களும் தங்களது பொன்னான நேரத்தை ஒதுக்கி மற்றவர்கள் கதையை உண்மையாக படிப்பவர்களுக்கு மதிப்பும் மறியாதையும் அளிப்பவன் என சொல்லிக்கொள்ள கடமைபட்டுள்ளேன்.

அதனால் இத்திரியை 'மற்ற வாசல் அனுமதி பதிந்தவர் தகுதி பற்றிய ஆலோசனை ' என்பதை இதன் தலைப்பை மாற்றி எல்லோருக்குமே பொருந்தும்படியாக, 'பின்னூட்டம் சம்பந்தமான புகார்கள்' என இதற்கு தலைப்பிடுகிறேன்.

இனி பின்னூட்டம் பற்றி ஆய்வு நடத்திக்கொண்டிருப்பதில் எந்த பயணும் இல்லை. இனி நேரடி புகார் தான். அதுவும் நிர்வாகத்திற்கு தனி மடலில் காதும் காதும் வைத்தார்போல் சரி செய்வது கிடையாது. பப்ளிக்கா இப்படி ஓப்பனாக புகார் செய்தால் தான் கொஞ்சம் பொறுப்புடன் நடந்துக்கொள்வார்கள்.

இந்த திரியில் பின்னூட்டம் புகார்கள் தொடர்பாக யார் வேண்டுமானாலும் எவர் மீது வேண்டுமானால் இங்கே தகுந்த ஆதாரத்துடன் நிர்வாகத்திற்கு தெரிவிப்போம், தெரிவிக்கலாம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மடியில் கனமிருந்தால் தானே
வழியில் பயம் ?!

பின்னர் பதிந்தது : (19-09-12 : 7.30 AM)
Quote:
Originally Posted by asho View Post
தவறிழைப்பவர் பெயர் இந்த திரியில் குறிப்பிடாமல் எழுதுங்கள், அல்லது தவறான அந்த பதிவினை ரிப்போர்ட் போஸ்ட் செய்யுங்கள்.
நிர்வாகத்தினர் சொல்லுக்கு மதிப்பளிப்போம். நமக்கு யாரையும் கஷ்டப்படுத்தி பார்க்கனும் என்ற எண்ணமோ அல்லது அசிங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கமோ எதுவும் கிடையாது. எல்லோரும் நம்ம மக்கள் தானே. போனா போகட்டும் வேற என்ன பண்ணுறது.

"திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டையும் ஒழிக்க முடியாது"

அததும் அவங்கவுங்களுக்கா தெரியனும். இந்த பின்னூட்டங்களால லோகத்திலே பல சண்டைகள் சச்சரவுகள் எவ்வளவோ நடந்திருக்கு. அதுக்கு மேலையும் பார்த்துக்கிட்டு நான் இப்படி தான் இருப்பேன் என அடம்பிடிக்கிறவங்களோட மல்லுக்கு நிக்கிறதும் நமக்கும் அசிங்கம் தான்.

நிர்வாகத்தினர் சொல்லுற மாதிரி, பெயரை குறிப்பிடாமல், நாசுக்காக என்ன தவறு நிகழ்ந்திருக்கு ? எப்படி நிகழ்த்தப்பட்டது என இங்கே குறிப்பிட்டாலே போதுமானது. அதை ஓர் ரிப்போர்ட் போஸ்ட்டோ அல்லது தனிமடலிலும் கூட நிர்வாகத்தினருக்கு தெரிவித்துவிடுங்கள். மத்தவங்கள் பின்னூட்டங்களால் நீங்கள் எப்படி எல்லாம் பாதிக்கப்பட்டீங்கள், அல்லது உங்கள் படைப்பிற்க்கு (போதிய) பின்னூட்டமே கிடைக்கப்பெறாமல் நீங்கள் அவமான பட்டது போல் ஏங்கியதுண்டா ? வேறு ஏதாவது தீர்வு, வழிமுறைகள் இப்படி உங்களுக்கு தெரிந்ததையும் மனதில் பட்டதையும் தாராளமாக இங்கே மற்ற நண்பர்களோடு பகிர்ந்துக்கொள்ளுங்கள். நன்றி !

Last edited by Mathan; 19-09-12 at 07:38 AM.
Reply With Quote