View Single Post
  #12  
Old 12-09-17, 06:21 AM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
ஹெர்மி மற்றும் மௌனியின் கருத்துக்களுக்கு நன்றி.

முதலில் ஒன்றை தெளிவுபடுத்த நினைக்கிறேன், ஆட்சேபனை செய்யவில்லை என் ஆலோசனையை முன் வைத்தேன். எதோ செய்ய வெண்டும் என்பதற்காக அதிக பிரசங்கம் செய்யவில்லை.

தங்க கதைகளை பிலிட்டில் செய்ய வேண்டும் என்கிற நோக்கமும் இல்லை. தங்க வாசலை எட்டி மீண்டும் புதியவனாக வந்துள்ளேன். அந்த அனுபவத்தில் ஒரு சிறிய ஆலோசனை முன் வைத்தேன்.

அதில் மிக முக்கிய கருத்து, தங்க வாசல் நுழைந்தோர் த ங்க கதைகளை படிக்க ஆர்வம் காட்டுவோர் சிலரே, அந்த சிலரோ க தைகள் எப்படி எழுதப் பட்டுள்ளுன என்பதை அறியவே படிக்கப் படுகின்றது.

சில கதைகளை படித்து சிலாகித்தது உண்டு, இக்கதைகள் புதியவர்கள் படிக்கும் போது நிச்சயம் விருந்தாக இருக்குமே, மேலும் அக்கதைகள் அவ்வப்போது மேலெழுப்பப் படும்போது அக்டிவாகவும் இருக்கும் அதிக பார்வைகளும் பின்னுட்டங்களும் கிடைக்கப் பெறும் போது அக்கதைகளுக்கு நாம் செய்யும் மரியாதையும் ஆகும்.

கட்டி தங்கத்தை அனைவருக்கும் பகிர்ந்தளிக்க சொல்லவில்லை, ஆபரண தங்கத்தை சந்தைக்கு கொண்டு வரவேண்டும் என்றே சொல்கிறேன். அதில் படைப்பாளியின் உழைப்பு உள்ளது. அது படிக்கும் ஆவல் உள்ளோர்க்கு தேவையும் படுகிறது.

கை கட்டிக் கொண்டு கேழே நின்றுக் கொண்டு கனிகளை சுவைக்க வேண்டும் என்கிற சோம்பேறித்தனம் இல்லை, சுவைந்த கனி மரத்தில் தங்குவதில் அல்ல அதன் பெருமை கீழே காத்திருப்பவனுக்கு விருந்தாக கீழே விழுவதே அழகு.

என் நிலைப்பாட்டை சற்று அழுத்தமாக சொல்லிவிட்டேன் பிறகு முடிவுகள் அனைத்தும் நிர்வாகத்தின் கையில்.

நல்ல முடிவையே எடுப்பார்கள் என்ற நம்பிக்கையில்.

நன்றி
Reply With Quote