View Single Post
  #48  
Old 03-06-21, 07:43 PM
the heaven the heaven is offline
User inactive for long time
 
Join Date: 14 Jan 2017
Posts: 145
My Threads  
மிக மிக வருந்த கூடிய செய்தி.

இந்த தளத்தினை நான் அடைய வேண்டும் என எண்ணியதே அவரோடு உரையாட அவர் கதைகளோடு உறவாட தான்.

இதை நான் அவரிடமே பல சமயங்களில் சொல்லி இருந்தேன்,

படிக்கும் ஆர்வம் இருக்கும் எனக்கும் படைக்கும் திறன் இல்லை,

இந்த கருவில் ஒரு கதை படையுங்கள் என ஒரு முறை அவரிடம் சொன்னேன்

அவரும் சம்மதம் தெரிவித்து இருந்தார் ஒவ்வொரு நாளும் அவர் அந்த கருவிலோ அல்லது அவரது கற்பனையிலோ ஏதெனும் கதை வரும் என காத்திருந்தேன்

ஆனால் இன்று அந்த காத்திருப்பு முடிவில்லா தவிப்பாக முற்று பெறாமல் முடிந்தது

அவரிடம் நான் உங்கள் ரசிகன் உங்களை ரசிக்கவே இந்த தளத்திற்கு வந்தேன் எனவும் அதற்க்கு அவர் தெரிவித்த நன்றியும் இன்றும் இனிமேலும் நினைவலைகளில் நிழலாடும்

இரண்டு மூன்று மடல்களில் மட்டுமே உரையாடிய எனக்கு இருக்கும் தவிப்பை விட பல வருடங்கள் பழகிய பாக்கியவான்கள் பலருக்கு இருக்கும் மனக்குமுறலை எனது ஆறுதலும் மனவருத்தமும் இந்த இரங்கல் மடலும் சாந்த படுத்தும் என நம்பவில்லை

எனினும் என்னால் இயன்றது இதுவே,


இவ்வுலகை விட்டு பிரிந்த எழுத்தாளர் மௌனி அவர்கள் என்றும் இறவா கதைகள் மூலம் இவ்லோகத்தில் என்றும் வாழ்வார் என்ற நம்பிக்கையோடு எனது அன்பை அவருக்கு காணிக்கை ஆக்குகிறேன்.

மேலும்

அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் அவரது ரசிகர்களுக்கும் எனது வருத்தம் கலந்த ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

என்னைப்போன்ற ரசிகர்கள் நெஞ்சில் ஓர் இடத்தில் என்றும் அவரும் அவரது படைப்புகளும் என்றும் வாழும்...
Reply With Quote