View Single Post
  #33  
Old 12-07-17, 06:19 PM
Deepa1 Deepa1 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Feb 2017
Posts: 297
My Threads  
ஓ என்னோட கதை மற்றும் இதர பதிவுகளில் ஆங்கில வார்த்தைகள் அதிகம் பயன்படுத்தவதை கண்ட நண்பர் எனக்கு இதை பற்றி தனிமடலில் எழுதி இருக்கிறார் என்று நினைக்கிறேன்.

காலத்துக்கேற்ற கோலம்போடு

இது ஒரு தமிழ் பழமொழி. இது தெரிந்தோ தெரியாமலோ எங்கள் வீட்டில் நடந்த ஒரு சம்பாஷணையை சொல்கிறேன். என் அக்காவிற்கு நான்கு வயது மகன் உண்டு. அக்கா ஒரு தமிழ் பயித்தியம். இதை வைத்தே எங்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் வரும். நான் ஒருமுறை மிகவும் இடக்காக அக்கா மகனிடம் "குட்டி இன்னிக்கு நாம எல்லாரும் உல்லாச வண்டியிலே (டாக்சி)சுற்றுலா போகப்போறோம். உங்கப்பா ஈருருளையில்(ஸ்கூட்டர்) வந்து நம்முடன் சேர்ந்துகொள்வார். அவன் "ஹை அப்ப நாம பஸ்ஸுல போகலையா?'ன்னு கேக்க பஸ் இல்லேடா கண்ணா அது "பேருந்து" ன்னு நான் அக்காவை பாத்துக்கொண்டே சொல்ல அந்த வாண்டு "பாரும்மா சித்திக்கு தமிழே தெரியல" ன்னு மழலையில் சொல்ல அனைவரும் சிரித்துவிட்டோம்.

vjagan சார் நீங்க இப்படி கண்டிஷன் போட்டா என்னோட பதிவு ரொம்ப கொறஞ்சிடும். தெரியாத்தனமா இதை பாக்கறதுக்கு முன்னாடி ஆர்வ கோளாரிலே உங்க போட்டிக்கு கதை எழுதிட்டேன். மன்னிச்சுடுங்க.
Reply With Quote