View Single Post
  #1  
Old 21-03-24, 11:45 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,305
iCash Credits: 677,276
My Threads  
தன்னிச்சையாக இமெயிலை மாற்றி கணக்கை இழந்தவர்களுக்கு

நண்பர்களே,

நம் தளத்தில் உறுப்பினராக இருப்பவர்கள் அவர்கள் இமெயிலை மாற்ற வேண்டினால் அவர்கள் முதலிலே நிர்வாக உறுப்பினர் ஒருவருக்கு தனிமடல் அல்லது தளத்து இமெயிலுக்கு ஆக்டிவாக இருக்கும், அதாவது கணக்கில் பதிந்துள்ள இமெயிலில் இருந்து கோரிக்கை முதலில் தர வேண்டும், அந்த கோரிக்கையில் முதலில் அதாவது தற்போது உள்ள இமெயில் குறிப்பிட்டு பின் மாற்ற வேண்டிய இமெயிலை குறிப்பிட வேண்டும். இம்மாதிரி ஏன் இமெயிலை மாற்றுகிறோம் என்றும் விளக்கம் சொல்ல வேண்டும். பின்னர் கோரிக்கை ஏற்ற பின் மாற்றப்பட்ட இமெயிலுக்கு ஒரு தகவல் அனுப்பப்படும் அதனை அந்த இமெயிலிலே பதிலளித்து உறுதி செய்த பின் இமெயில் மாற்றம் செய்யப்படும். இது தான் நடைமுறை.

ஆனால் நம் தளத்திலே சிலர் தாங்களாகவே இமெயிலை மாற்றிக்கொண்டு பின் அது சரியாகாமல் கணக்கை இழந்து விடுகிறார்கள். இம்மாதிரி தன்னிச்சையாக இமெயில் மாற்றி கணக்கை புதுப்பிப்பது கீழே கண்ட காரணங்களுக்காக தடை செய்யப்பட்டுள்ளது

1)நீண்ட நாள் கணக்கை பராமரிக்காத உறுப்பினர் ஒருவரது சாதனம் சர்வீஸிற்காக வெளியே உள்ள ஒருவரால் கவனிக்கப்பட்டு அவர் கணக்கை கைப்பற்றி நிரந்தரமாக சொந்தமாக்க தனது இமெயிலை அல்லது கணக்கில் ஏற்கனவே உள்ள இமெயிலை ஒத்த இமெயில் தயாரித்து கணக்கை கைப்பற்ற பார்க்கிறார்கள். இது எப்படி சாத்தியம் என்றால் அந்த சாதனத்தில் உள்ள ப்ரவுசரில் தளத்து யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் இதனை சேமிக்கும் வசதியை நடப்பில் வைத்திருப்பதே ஆகும்.

2)இது போக கணக்கு இங்கே பயன்படுத்த விருப்பம் இல்லாத பழைய உறுப்பினர்கள் கணக்கை இன்னொருவருக்கு யூசர் நேம் பாஸ்வேர்ட் தரும் போது அவர்கள் நிரந்தரமாக கணக்கை கைப்பற்ற நினைத்து இமெயிலை மாற்றும் போதும் இம்மாதிரி நிகழ்கிறது

3)இது போக ப்ரவ்சிங் செண்டர்(தற்போது இது வழக்கொழிந்து விட்டது) அல்லது பொதுக்கணினியில் தளத்தில் லாகின் ஆகி பாஸ்வேர்டை தவறுதலாக சேமித்து செல்பவர் கணக்கை கைப்பற்ற நினைப்பவர்களும், அலுவலகத்தில் வேலை பார்ப்பவர் வேலை முடிந்த பின் அடுத்து வருபவர் கைப்பற்ற நினைக்கும் போது இது நிகழ்கிறது

தளத்தின் மேலே ஸ்குரோலிங்க்-ல் தெளிவாக இம்மாதிரி மாற்ற நினைப்பவர்கள் நிர்வாகி அவர்களை தொடர்பு கொள்ளவும் என்பதனை இவர்கள் பார்க்க அல்லது மறந்து விடுகிறார்கள்.

இம்மாதிரி இமெயில் மாற்றி விட்டு வேலை செய்யவில்லை என்றவுடன் அந்த மாற்றிய இமெயிலில் இருந்து கோரிக்கை அனுப்புகிறார்கள். அதில் தான் பெரிய சிக்கல் வருகிறது. தளத்தில் பதிந்துள்ள இமெயில் முன்னரே சரிபார்க்கப்பட்டு இருக்கும் போது இந்த புது இமெயில் சரிபார்க்கப்படாததால் இந்த இமெயில் எந்த கணக்கோடும் இனைந்திருக்காது, எனவே அது எங்களால் ஏற்க முடியாத கோரிக்கையாகும்.


மேலும் இதுபற்றி கேள்வி கேட்கும் உறுப்பினர் புது இமெயிலுக்கு பதில் அனுப்பினால் 10க்கு 7 இமெயில்கள் பவுன்ஸாகி விடுகிறது. இம்மாதிரி பவுன்சான இமெயில்களால் தற்காலிகமாக நிர்வாக குழுவிற்கான இமெயில் 24 மனிநேரத்திற்கு தடை செய்யப்படுகிறது. திரும்ப குறிப்பிட்ட காத்திருப்பிற்கு பின் இமெயில் லாகின் ஆகும் போது ஸ்பாம் செக்யூரிட்டி என பழையபடி கணக்கை மீளப்பெற பாதுகாப்பு நடைமுறைகளை கடந்து தான் நாங்கள் எங்கள் இமெயிலையே மீட்க முடிகிறது.

இம்மாதிரி கணக்கை தன்னிச்சையாக இமெயில் மாற்றி பின் நாங்கள் பதில் தந்தும் இமெயில் பவுன்சான பயனாளர்கள் பெயர் கீழே குறிப்பிட்டிருக்கிறோம். இதில் என்ன பெரிய கொடுமை என்றால் ஒரு சிலருக்கு அவர்களால் எங்களுக்கும் இமெயில் தர முடிகிறது, நாங்கள் பதில் தந்தால் பவுன்சாகி விடுகிறது. அவர்கள் இமெயிலில் ஏதோ செட்டிங்க்சினால் இம்மாதிரி பிழை நேர்கிறது என்றும் தெரிகிறது.

aarun
anandfeb2020
hard bang
Superman82
muthirkanni
titan
uday
Vaasan



எனவே இமெயில் மாற்றுபவர்கள் தன்னிச்சையாக மாற்றினால் கணக்கை மறந்து விட வேண்டியது தான், அல்லது முன்னரே பயன்படுத்திய இமெயிலில் இருந்து தொடர்பு கொண்டு பின் கணக்கை மீளப்பெற வேண்டும். முன்னர் தொடர்பில் இருந்த இமெயில் வேலை செய்யவில்லை என்றால், வேறொரு மூன்றாவது இமெயிலில் இருந்து தொடர்பு கொண்டும் விவரம் சொல்லி முயற்சிக்கலாம். ஆனால் இம்மாதிரி கணக்கை கைப்பற்ற நினைக்கும் போது நாங்கள் கேட்கும் சில கேள்விகளுக்கு விரைந்து உடனே சரியான மழுப்பல் இல்லாத பதில் சொன்னாலொழிய கணக்கு திரும்ப தரப்படாது.
__________________
Reply With Quote