View Single Post
  #48  
Old 03-02-14, 05:37 PM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 06 Sep 2010
Posts: 3,569
My Threads  
Quote:
Originally Posted by பச்சி View Post
தங்களது சமீபத்திய 'வெண்பா' என்ற திரி, பல தமிழ் ஆர்வலர்களை பங்கெடுக்க செய்ததோடு மட்டுமல்லாமல் பெரும்பாலானோரின் கவனத்தையும் தன் பக்கம் இழுத்துக் கொண்டதை அனைவரும் அறிவார்கள். பல பாராட்டுகளையும், பரிசுகளையும் பெற்ற அந்த திரிக்கு எனது பாராட்டுகளையும் இந்நேரத்தில் தெரிவிப்பதோடு, சில ஐகேஷ்களும் அன்பளிப்பாக வழங்குகிறேன்.
நண்பர் பச்சி அவர்கள் மனங்கனிந்த பாராட்டுகளுடன் ஆயிரம் பொற்காசுகளையும் பரிசாக அளித்துள்ளார். (பண்பாளர் பச்சியிடமிருந்து பெறும் மின்காசுகளும் பொற்காசுகளுக்கு நிகரன்றோ?)

வெண்பாவின் முதற்பாதிதான் என் பங்களிப்பு. அந்தத் திரியை சுவைபடக் கொண்டுசென்றதில் அங்கு இடுகையிட்ட பலருக்கும் பங்குண்டு. குறிப்பாக நண்பர் நல்லவன்1010 அவர்களும் அவருக்கு அடுத்தபடியாக நண்பர் காமகோடங்கி அவர்களும் நண்பர் பச்சியின் பாராட்டுகளையும் பொற்காசுகளையும் பங்குபெற உரிமையுள்ளவர்கள். எனவே இந்தப் பரிசை நாங்கள் மூவரும் தலா 300 பொற்காசுகளும், மீத்முள்ள நூறு பொற்காசுகள் யாப்பும் சிலேடையும் பற்றி அருமையாகச் சொல்லித்தந்த நல்லவனுக்குமாகப் பங்கிட்டுக்கொள்கிறோம்.
Reply With Quote