View Single Post
  #45  
Old 03-02-14, 02:23 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 167,851
My Threads  
நண்பர் ட்ரீமர் அவர்களின் 3000 பதிப்புகளுக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நண்பரின் பதிவுகளை பார்க்கும் போதெல்லாம், எனது சோம்பலை நினைத்து பல நேரங்களில் வெட்கப்பட்டதுண்டு. பல சிரமங்களுக்கும் மத்தியில் நீங்கள் பதியும் ஒவ்வொரு பதிவுகளும் மற்றவருக்கு ஊக்கம் கொடுப்பவையாகவே அமைந்து வருவதில் மகிழ்ச்சி; பாராட்டுகள்.

தளத்தையும், தள நண்பர்களையும் நேசிக்கும் தங்களின் அன்பை என்றும் மதிக்கிறோம். படைப்பாளிகளுக்கான ஆறுதலையும், உற்சாகத்தையும் உங்களைப் போன்ற பின்னூட்டவாதிகளே தந்து வருகிறீர்கள் என்பதும் பாராட்டுக்குரியது. தொடர்ந்து இணைந்திருங்கள்; பதிவுகள் பல தந்திடுங்கள்... வாழ்த்துகள்.

தங்களது சமீபத்திய 'வெண்பா' என்ற திரி, பல தமிழ் ஆர்வலர்களை பங்கெடுக்க செய்ததோடு மட்டுமல்லாமல் பெரும்பாலானோரின் கவனத்தையும் தன் பக்கம் இழுத்துக் கொண்டதை அனைவரும் அறிவார்கள். பல பாராட்டுகளையும், பரிசுகளையும் பெற்ற அந்த திரிக்கு எனது பாராட்டுகளையும் இந்நேரத்தில் தெரிவிப்பதோடு, சில ஐகேஷ்களும் அன்பளிப்பாக வழங்குகிறேன்.

Quote:
Originally Posted by dreamer View Post
இனி நான் நான்காயிரம் கடக்கும்போது இதைத் தொடரலாமே.
நீங்கள் 4000 போடும் வரை நண்பர்கள் வாழ்த்திக் கொண்டே இருப்போம். இங்கே வாழ்த்த வருபவர்கள் எல்லாம் எண்ணிக்கையை கூட்டுவதற்காக பதிப்பதில்லை; உங்கள் மீதான எங்களின் உயரிய எண்ணங்களை காட்டுவதற்காக வருகிறோம். ஏற்றுக் கொள்ளுங்கள்.
Reply With Quote